Tamilnadu

News June 19, 2024

உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

image

மதுரை உயர்நீதிமன்ற கிளையில் இன்று, “வாழ்வாதாரம் இழந்துள்ள மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்களுக்கு, வேலை, மாற்று குடியிருப்பு வசதிகள் செய்து தரக்கோரிய வழக்கு விசாரணைக்கு வந்தது. விசாரணைக்கு பின், “மறுவாழ்வு கிடைக்கும் வரை தொழிலாளர்களை வெளியேற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது. மத்திய, மாநில அரசுகள் இதுகுறித்து பதிலளிக்க வேண்டும்” என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

News June 19, 2024

அமைச்சர் சொத்து குவிப்பு வழக்கு ஒத்திவைப்பு

image

தற்போது தமிழக அமைச்சராக இருக்கும் அனிதா ராதாகிருஷ்ணன் அதிமுக ஆட்சியின் போது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸ் தொடர்ந்த வழக்கு தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது, இந்த வழக்கின் விசாரணை இன்று வந்தது, அப்போது வழக்கு விசாரணையை இம்மாதம் 26 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

News June 19, 2024

ஈஷா யோகா மைய ஆட்கள் மீது வழக்கு

image

கோவை ஈஷா சார்பில் மின்தகன மேடை அமைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில், முற்போக்கு அமைப்புகள் சார்பில் உண்மை கண்டறியும் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர் சில தினங்களுக்கு முன் சம்பவ இடத்திற்கு சென்ற போது வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு உருவானது. இந்நிலையில், ஈஷா யோகா மைய ஆட்கள் மூவர் மீது ஆலாந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

News June 19, 2024

பரபரப்பில் அமைச்சர் சொத்து குவிப்பு வழக்கு

image

தூத்துக்குடி நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்து குவிப்பு வழக்கில், அமலாக்கத்துறை தங்களையும் இணைத்துக் கொள்ள தாக்கல் செய்த மனுவுக்கு எதிராக வாதாட இன்று தமிழக அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜின்னா ஆஜராகி உள்ளார். இந்நிலையில் அமலாக்க துறை வழக்கறிஞர் சென்னையில் இருந்து வீடியோ கான்பரன்ஸ் மூலம் வாதாடி வருகிறார்.

News June 19, 2024

சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் ‘லூலூ மால்’

image

‘லூலூ மால்’ நிறுவனத்தின் சில்லறை வர்த்தக பிரிவான ‘லூலூ ஹைபர் மார்கெட்’, சென்னையில் தொடங்கப்படுவது குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அதன்படி, சென்ட்ரல், ஷெனாய் நகர், விம்கோ நகர் ஆகிய மெட்ரோ ரயில் நிலையங்களில் லூலூ ஹைபர் மார்க்கெட் அமைப்பதற்கு தேர்வு செய்யப்பட்டிருப்பதாக, மெட்ரோவின் ஒப்பந்த நிறுவனமான ‘கிரேஸ் சர்வீஸ்’ தெரிவித்துள்ளது. இதற்கான பணிகள் ஜூலை மாதம் தொடங்கும் எனத் தெரிகிறது.

News June 19, 2024

கள்ளக்குறிச்சியில் உயிரிழப்பு – இபிஎஸ் கண்டனம்

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் அருந்திய 5 பேர் உயிரிழந்ததாகவும், 10க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது கவலையளிப்பதாகவும், திமுக ஆட்சியில் கள்ளச்சாராயம் ஆறாய் ஓடுவதை தொடர்ச்சியாக நான் சுட்டிக்காட்டி வந்தும், இதனால் ஏற்கனவே பல உயிரிழப்புகள் ஏற்பட்ட பிறகும் கூட கள்ளச்சாராயத்தை ஒழிக்க நடவடிக்கை எடுக்காத திமுக அரசுக்கு கண்டனங்களை இபிஎஸ் தெரிவித்துள்ளார்.

News June 19, 2024

 வாணியம்பாடியில் 14 மி. மீட்டர் மழை

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று அதிகபட்சமாக வாணியம்பாடியில் 14 மி.மீட்டர், குறைந்த பட்சமாக ஆம்பூர் 4.20 மி.மீட்டர் மழை பெய்தது பதிவாகியுள்ளது. நேற்று திருப்பத்தூர் மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம் ஆம்பூர் 4.20 மி.மீ,வடபுதுப்பட்டு 9.40 மி.மீ, காவலூர் 8 மி.மீ, வாணியம்பாடி 14 மி.மீ, திருப்பத்தூர் 8.20 மி.மீட்டர் மழையளவு பதிவாகியுள்ளதாக திருப்பத்தூர் தாசில்தார் தெரிவித்துள்ளார்.

News June 19, 2024

கிபி 14ஆம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டுபிடிப்பு

image

திருப்பத்தூர் மாவட்டம் பெருமாபட்டு அருகே ‌சந்தப்பன் ஏரிக்கரை பகுதியில் பெருமாபட்டு கிராம நிர்வாக அலுவலர் அறவேந்தன் அளித்த தகவலின் பேரில் திருப்பத்தூர் தூயநெஞ்ச கல்லூரி பேராசிரியர் ஆ.பிரபு முன்னிலையில் ‌நேற்று அப்பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டு ஏரிகரையோரம் உள்ள குபேந்திரன் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் நிலகொடை தொடர்பான கல்வெட்டினை கண்டுபிடித்தனர்.

News June 19, 2024

ராகுலுக்கு வாழ்த்து சொன்ன செல்லூர் ராஜு

image

சமீப நாட்களாக காங்கிரஸ் கட்சிக்கும், ராகுலுக்கும் ஆதரவான கருத்துக்களை வைத்து வரும், முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜு, இன்று ராகுல் காந்தியின் பிறந்த நாளுக்கு வாழ்த்து சொல்லி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளார். காங்கிரஸை கட்டிக் காக்க ராகுல்காந்தி விடாமுயற்சி எடுத்து வருகிறார். இன்று பிறந்தநாள் கொண்டாடும் அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் என்று செல்லூர் ராஜு வாழ்த்தினார்.

News June 19, 2024

“இரத்தம், வியர்வை சிந்தி உருவாக்கப்பட்டது மாஞ்சோலை”

image

மாஞ்சோலை தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு மட்டுமே தீர்வல்ல, அவர்களை வெளியேற்றவே கூடாது என புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். 6 தலைமுறையாக இரத்தம், வியர்வை சிந்தி உருவாக்கப்பட்டது மாஞ்சோலை எஸ்டேட்; நீதிமன்றத்தின் தற்காலிக தீர்ப்பை ஏற்கிறேன்; மாஞ்சோலை மக்களை அங்கிருந்து அகற்றுவது என்ற பேச்சுக்கே இடமில்லை எனவும் கூறியுள்ளார்.

error: Content is protected !!