India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தூத்துக்குடி அண்ணா நகரில் நேற்று நள்ளிரவில் செந்தில் ஆறுமுகம் என்ற வழக்கறிஞர் மர்ம கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக மத்திய பாகம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் சொத்து தகராறில் செந்தில் ஆறுமுகத்தை வெட்டி கொலை செய்ததாக அவரது தங்கை கணவர் கோபிநாத் உட்பட ஆறு பேரை போலீசார் சற்று முன் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாணவிகளுக்கு மயக்கவியல் துறை பேராசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுத்ததாக சமூக வலைத்தளத்தில் புகார் எழுந்தது. இதனையடுத்து விசாக கமிட்டி மற்றும் கல்லூரி முதல்வர் பாலாஜி நாதன் தலைமையில் நேற்று கல்லூரி மாணவ – மாணவிகளிடம் 8 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. விசாரணைக்கு பிறகு சம்பந்தப்பட்ட பேராசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
சென்னையிலிருந்து காரைக்காலுக்கு நேற்று இரவு அரசு பஸ் புறப்பட்டது.கடலூர் ரெட்டிசாவடி அருகில் வந்த போது பஸ் தறிகெட்டு ஓடி சாலையில்உள்ள தடுப்பு கட்டையில் மோதியது.அந்த சமயத்தில் பின்னால் வந்த ஆம்னி பஸ் ஒன்று அரசு பஸ் மீது மோதியது.இதில் 2 பஸ்களிலும் பயணித்த 25 பேர் படுகாயமடைந்தனர்.அவர்கள் புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து ரெட்டிச்சாவடி போலீசார் விசாரித்தனர்.
மதுரை வைகையாற்றில் சுமார் 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் வைகை ஆற்றின் இருகரையும் தொட்டபடி சென்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வைகை ஆற்றின் வடக்கு மற்றும் தெற்கு கரையோர சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் வாகன ஓட்டிகள் வெள்ளத்தில் மிதந்தபடி ஆபத்தான நிலையில் வாகனங்கள் செல்கின்றன.
நாமக்கல் மாவட்டம்,மோகனூர், பரமத்தி ஆகிய ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் அரசு திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.மோகனூர் ஊராட்சி ஒன்றியத்தில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.2.30 கோடி மதிப்பீட்டில் மோகனூர்-வளையப்பட்டி வரை தார்சாலை மேம்படுத்தப்பட்டுள்ளதை பார்வையிட்டு சாலையின் தரம் குறித்து நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
விராலிமலை அருகே, குடுமியான்மலையைச் சேர்ந்தவர் வெங்கடாச்சலம் என்பவரது மகன் ராஜபாண்டியன் (40).திருமணமாகி 3 வயதில் குழந்தை உள்ளது. சென்னையில் பணிபுரிந்து விடுமுறையில் வந்த இவர் நெல்லிகுளத்தில் குளிக்க சென்று நீரில்ழூழ்கி உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த அன்னவாசல் போலிஸார் நேற்று ராஜபாண்டியன் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகாசி அருகே மீனம்பட்டியை சேர்ந்தவர் ஜெயமூர்த்தி (45). இவர் அந்த பகுதியில் மைக்செட் போடும் வேலையில் ஈடுபட்டு வந்துள்ளார். கடந்த 8ஆம் தேதி இரவு சிவகாசி – சாத்தூர் சாலையில் நடந்து சென்றபோது பின்னால் வந்த பைக் மோதி பலத்த காயம் அடைந்தார். காயமடைந்த அவர் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
குறிஞ்சிப்பாடி துணை மின்நிலையத்தில் நாளை(மே 13) மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக காலை 9 மணி முதல் காலை 11 மணி வரை குறிஞ்சிப்பாடி விழப்பள்ளம், பஜார், எல்லைக்கல் பகுதி, கடலூர் மெயின் ரோடு, வளையல் கார மேட்டுக்குப்பம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் தாழையூத்து அருகே இன்று (மே12) காலை ஏற்பட்ட விபத்தில் இருவர் மரணமடைந்தனர். சங்கர்நகர் நான்கு வழிச்சாலை மேம்பாலத்தில் லாரியின் பின்புறம் வேன் மோதிய விபத்தில் இருவர் பலியாகினர். மேலும் பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இது குறித்து தாழையூத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை தாலுகாவில், தடை செய்யப்பட்ட,லாட்டரி, புகையிலை பொருட்கள், குற்ற சம்பவங்களை கண்காணிக்க SI லியோ ரஞ்சித்குமார் தலைமையில் 4 காவலர்கள் கொண்ட தனி படை அமைக்கப்பட்டு கண்காணித்து வந்தனர்.இத்தனிப்படை மீது பல்வேறு புகார் வந்ததையடுத்து திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் அனைவரையும்,நேற்று, மாலை, ஆயுத படைக்கு மாற்றி உத்தரவிட்டார்.
Sorry, no posts matched your criteria.