Tamilnadu

News June 20, 2024

ரெஸ்ட்ரோ பார்கள் இயங்கினால் உரிமம் சஸ்பெண்ட்

image

புதுச்சேரி அரசின் வருவாயை பெருக்குவதற்காக புதிதாக ரெஸ்டோ பார்களுக்கு கலால் துறை அனுமதி வழங்கியது. இந்நிலையில் கலாச்சார சீரழிவு ஏற்படுவதாகவும் திரும்பும்போது விபத்து ஏற்படுவதாகவும் புகார் எழுந்தது. இந்நிலையில் நள்ளிரவு 12 மணிக்கு மேல் இயங்கினால் அதன் 3 மாத உரிமம் சஸ்பெண்ட் செய்யப்படும் என கலால் துறை நேற்று அதிரடியாக தெரிவித்துள்ளது.

News June 20, 2024

விழுப்புரம் அருகே அரசு பேருந்து கவிழ்ந்தது

image

தூத்துக்குடியில் இருந்து சென்னை நோக்கி சென்ற அரசு பேருந்து, விழுப்புரம் அருகே ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புறவழிச் சாலையில் நடந்த இந்த விபத்தில், பேருந்து சாலையோரத்தில் உள்ள மரத்தின் மீது மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில், பேருந்தில் பயணம் செய்த 12க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

News June 20, 2024

ஆளுங்கட்சியினரின் ஆதரவில் கள்ளசாராயம் விற்பனை

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ள சாராயம் குடித்து பல பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் ஆளுங்கட்சியினரின் ஆதரவில் கள்ளச்சாராய விற்பனை அதிகரித்து வருகின்றது. கள்ளச்சாராய சாவுக்கு காரணமானவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட வேண்டும் என நேற்று (ஜுன்.19) கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் நேற்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

News June 20, 2024

உயிரிழந்தவரின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க கோரிக்கை

image

தி.மலை அண்ணாமலையார் கோயிலில் நேற்று மாலை அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பிரதோஷத்தை முன்னிட்டு சுவாமி தரிசனம் செய்தார். பின்பு செய்தியாளர்களை சந்தித்தபோது கள்ளச்சாராயம் குடித்து 33 பேர் உயிரிழந்தனர். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கவும் தமிழ்நாடு அரசு இனிவரும் காலங்களில் இது போன்ற நிகழ்வுகள் தடுக்கப்பட வேண்டுமென தெரிவித்தார்.

News June 20, 2024

அரசுக்கு அறிக்கை அனுப்பப்படும் – கலெக்டர்

image

கள்ளக்குறிச்சியில், கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களில் 21 பேரின் உட்றகூராய்வு நிறைவடைந்துள்ளதாக மருத்துவமனையில் ஆய்வு செய்த புதிய கலெக்டர் எம்.எஸ்.பிரசாத் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். மேலும், கள்ளச்சாராய உயிரிழப்புகள் அறிக்கை அரசுக்கு அனுப்பப்படும் எனவும் அவர் தெரிவித்தார். 60க்கும் மேற்பட்டோர் சிகிச்சையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

News June 20, 2024

ஜீவன் ரக்க்ஷா விருதுக்கு விண்ணப்பம்

image

தி.மலை மாவட்டம், இந்திய அரசின் ஜீவன் ரக்க்ஷா பதக்க விருது அறிவிக்கப்பட்டுள்ளது. நீரில் மூழ்கியவர்கள் , மின்சார, தீ விபத்துக்கள், நிலச்சரிவு, விலங்கு தாக்குதல், மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டு உயிர்களை காப்பாற்றிய வீரர்களுக்கு விருது வழங்கப்படுகிறது. விண்ணப்பிக்க விரும்புவோர் www.sdat.tn.gov.in இணையதளம் மூலம் ஜூன் 30ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். 

News June 20, 2024

ஆணையாளர் தலைமையில் 1500 காவலர்கள் பணி

image

நெல்லை மாநகர டவுன்  நெல்லையப்பர் காந்திமதியம்மன்  கோவிலில் 518வது ஆனி தேரோட்டம் வருகின்ற 21ம் தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினம் பாதுகாப்பு பணிக்காக திருநெல்வேலி மாநகர, வெளி மாவட்ட காவல் துறையினர் என சுமார் 1500 பேர் திருநெல்வேலி மாநகர காவல் ஆணையாளர் மூர்த்தி தலைமையில் பணியமர்த்தப்பட உள்ளனர். மேலும் 147 கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட உள்ளது.

News June 20, 2024

திருப்பத்தூர்: காவல் நிலையம் முன்பு பெண் தர்ணா

image

தம்மனுார் கிராமத்தில் ரம்யா என்பவருக்கு சொந்தமாக 7.5 சென்ட் நிலம் உள்ளது. இந்நிலையில், அவரது கணவரின் சகோதரர் பன்னீர்செல்வம் உரிமை கொண்டாடி வேலி அமைத்துள்ளார். இதுதொடர்பான வழக்கில் ரம்யாவுக்கு சாதகமாக நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இருப்பினும், பன்னீர்செல்வம் வேலியை அகற்றாமல் வைத்துள்ளார். இந்நிலையில் புகார் அளிக்க வந்த ரம்யா தர்ணாவில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

News June 20, 2024

கோவை: திருநங்கைகளுக்காக சிறப்பு முகாம்

image

கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் திருநங்கைகளுக்கான அடையாள அட்டை, ஆதார் அட்டையில் திருத்தம் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை கருத்தில் கொண்டு கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த முகாம் வரும் 21ம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

News June 20, 2024

சிபிசிஐடி விசாரணை அதிகாரி நியமனம்

image

கள்ளச்சாராய உயிரிழப்பு தொடர்பாக விசாரிக்க, சிபிசிஐடி விசாரணை அதிகாரியாக கோமதி நியமிக்கப்பட்டுள்ளார். இன்று(ஜூன் 20) காலை 10 மணிக்கு இவர் விசாரணையை தொடங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கள்ளச்சாரம் குடித்து பலர் உயிரிழந்துள்ள நிலையில் இது தொடர்பாக ஏற்கெனவே 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கலெக்டர் மற்றும் எஸ்பி மாற்றப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!