Tamilnadu

News May 13, 2024

அரூர்: அணைக்கட்டில் மூழ்கிய இளைஞர் சடலமாக மீட்பு

image

தருமபுரி மாவட்டம் அரூர் வட்டம், வள்ளிமதுரை அணைகட்டியில் நேற்று(மே 12) குளிக்க சென்ற ராகுல்(29) என்ற இளைஞர் நீரில் மூழ்கினார். இது குறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறை நிலைய அலுவலர் காமராஜ் தலைமையிலான குழு தேடுதலில் இறங்கினர். நீண்ட நேர போராட்டத்திற்கு பின் ராகுலை சலடமாக மீட்டு காவல் துறையிடம் ஒப்படைத்தனர்.

News May 13, 2024

உடற்பயிற்சி நிலையத்தை திறந்து வைத்த நடிகர் பரத்

image

சென்னையில் தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வந்த உடற்பயிற்சி நிலையம் திருப்பூரில் தங்களது கிளையை நேற்று திறந்தது. இதனை நடிகர் பரத் மற்றும் மாநிலத் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு திறந்து வைத்தனர். நிகழ்ச்சியில் மாநகராட்சி மைய தினேஷ்குமார், நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

News May 13, 2024

முன்னாள் காங்கிரஸ் கட்சி தலைவர் மரணம்

image

கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் சின்னையன்(82) வயது மூப்பு காரணமாக நேற்று காலமானார். இவரது மறைவிற்கு காங்கிரஸ் கட்சியினர் அனைவரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இவரது இழப்பு கட்சிக்கு பேரிழப்பு என கட்சி நிர்வாகிகள், கட்சி பிரதிநிதிகள் என அனைவரும் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

News May 13, 2024

ஈரோட்டில் கஞ்சா சாக்லேட்… தட்டி தூக்கிய போலீஸ்

image

ஈரோடு மாநகராட்சி பகுதிக்குட்பட்ட ஈரோடு மாதவ கிருஷ்ணா வீதியில் உள்ள ஸ்வீட் கடையில் கஞ்சா சாக்லேட் விற்பனை நடைபெறுவதாக நேற்று மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின்பேரில், மதுவிலக்கு துணை கண்காணிப்பாளர் சண்முகம் தலைமையிலான போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, அந்த கடையில் 5 கிலோ கஞ்சா சாக்லேட் வைத்திருந்த நபரை போலீசார் கைது செய்தனர். 

News May 13, 2024

தேனியில் இன்று மழை பெய்ய வாய்ப்பு

image

தமிழகத்தை ஒட்டிய மேல் வளிமண்டல கீழடுக்குகளில் காற்றின் திசை மாறுபாடும் பகுதி நிகழ்கிறது. இதன்படி தேனி மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் இன்று(மே 13) இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் ஆங்காங்கே கோடை மழை பெய்து வருகிறது குறிப்பிடத்தக்கது.

News May 13, 2024

5 வயதுக்குட்பட்ட குழந்தைக்கு டிக்கெட்? கடும் நடவடிக்கை

image

நெல்லை அரசு போக்குவரத்து கழகம் மேலாண்மை இயக்குநர்கள் அனைத்து கண்டக்டர்கள் மற்றும் கிளை மேலாளர்களுக்கு நேற்று அனுப்பி உள்ள உத்தரவில் ஐந்து வயது நிறைவடையாத குழந்தைகளுக்கு கட்டணம் வசூலிக்க கூடாது, சந்தேகம் இருப்பின் அவரது பிறந்தநாள் சான்றிதழ் வாங்கி பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் மீறினால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

News May 13, 2024

நெல்லை: இமாம் மறைவு

image

திருநெல்வேலி டவுண் கட்டாக் ஜும்ஆ பள்ளிவாசல் இமாம் மவ்லவி அல்ஹாபிழ் எம். ஜமால் முகைதீன் ஆலிம் இன்று (மே 13) அதிகாலை ஒரு மணியளவில் இயற்கை எய்தினார். இன்று இரவு இஷா தொழுகைக்கு பிறகு பேட்டை ரஹ்மானியா ஜமாஅத் பள்ளி கபர்ஸ்தானில் நல்லடக்கம் செய்யப்படும். அவருடைய மறைவிற்கு ஜமாத்துல் உலமா சபை நிர்வாகிகள் ஆலிம்கள் உலமாக்கள் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

News May 13, 2024

ஜெயக்குமார் கொலை: களத்தில் தென்காசி எஸ்பி

image

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.பி.கே.ஜெயக்குமார் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளை பிடிக்க பல்வேறு தனிப்படையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தென்காசி எஸ்பி சுரேஷ்குமார் ஜெயக்குமாரின் தோட்டத்தில் வேலை செய்யும் ஒருவரிடம் நேற்று விசாரணை நடத்தினார். அதன் அடிப்படையில் விளாத்திகுளம் டிஎஸ்பி ராமகிருஷ்ணன் தலைமையிலான போலீசாரும் விசாரணை நடத்தினர்.

News May 13, 2024

‘பறக்கும்’ டாக்சி தயாரிப்பில் சென்னை IIT தீவிரம்

image

சென்னையில் சாலை போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காணும் விதமாக, ‘பறக்கும் டாக்சி’ தயாரிப்பில் சென்னை IIT ஈடுபட்டுள்ளது. இந்த டாக்சி தரையிறங்கவும், பறக்கவும், 15 அடி நீளமும், 15 அடி அகலமும் உடைய இடம் போதும். இதில் 2 பேர் அமர்ந்து பயணிக்கலாம். இந்த டாக்சி பயன்பாட்டுக்கு வரும் பட்சத்தில், 25 கி.மீ தூரத்தை 10 நிமிடத்தில் சென்றடையலாம். இது மணிக்கு 200 கி.மீ வேகத்தில் செல்லும் திறனுடயது என தகவல்.

News May 13, 2024

தேர்வில் தவறியவர்களுக்கு இன்று முதல் சிறப்பு வகுப்பு

image

நெல்லை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முத்துசாமி கூறுகையில்,  10 மற்றும் 12ம் வகுப்பில் தேர்வில் தவறிய, பள்ளிக்கு பாதியில் வராமல் சென்ற மாணவ மாணவிகளை வரவழைத்து அவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. அதனை தொடர்ந்து வரவிருக்கும் துணை தேர்வில் அவர்களை பங்கேற்க வைத்து படிப்பை தொடரவும் நடவடிக்கை எடுக்கப்படும், இன்று முதல் அதற்கான வகுப்பு தொடங்கப்படும் என நேற்று தெரிவித்தார்.

error: Content is protected !!