India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சரத்குமாரின் மகள் வரலட்சுமி சரத்குமாரின் திருமணம் வரும் ஜூலை 2ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி, சென்னை ராஜா அண்ணாமலைபுரம் பசுமைவழிச் சாலையில் உள்ள ஓ.பன்னீர் செல்வம் வீட்டிற்கு நடிகர் சரத்குமார் நேரில் சென்றுள்ளார். தனது மகள் வரலட்சுமியின் திருமண அழைப்பிதழை, ஓ.பன்னீர் செல்வத்திடம் வழங்கி, கட்டாயம் திருமணத்தில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்தார்.
தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை நடைபெற இருக்கிறது. இதுகுறித்து கலெக்டர் சாந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், நாளை (ஜூன் 21) காலை 11 மணிக்கு கலெக்டர் அலுவலக கூடுதல் கூட்ட அரங்கில் நடக்கிறது . எனவே தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு பயன்பெறலாம் என தெரிவித்து உள்ளார்.
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மக்கள் குறை தீர் கூட்டரங்கில் நாளை (ஜூன் 21) காலை 10 மணிக்கு திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. திருநங்கைகள் நலத்திட்ட உதவிகள் மற்றும் அடையாள அட்டை காப்பீடு அட்டை ஆயுஷ்மான் பாரத் அட்டைகள் பெற திருத்தங்கள் மேற்கொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் க.தர்ப்பகராஜ் தெரிவித்துள்ளார்.
கள்ளச்சாராய மரணத்திற்கு பொறுப்பேற்று முதல்வர் ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும் என்று இபிஎஸ் தெரிவித்துள்ளார். மேலும், ஆட்சி அதிகாரம் மட்டுமே முதல்வர் ஸ்டாலினுக்கு முக்கியம்; மக்கள் மீது அக்கறை இல்லை என்று தெரிவித்த அவர், இறந்தவர்கள் அடித்தட்டு மக்கள் என கூறினார். இந்நிலையில், கள்ளச்சாராயம் எதிரொலி காரணமாக இணையத்தில் #Resign_Stalin டிரெண்டாகி வருகிறது.
கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலையில் நடைபெறவுள்ள உலக யோகா தினத்தை முன்னிட்டு நாளை நடைபெற உள்ள நிகழ்ச்சியில் தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி பங்கேற்கிறாா். இதற்காக சென்னையிலிருந்து இன்று இரவு 7 மணிக்கு கோவை சா்வதேச விமான நிலையம் வரும் ஆளுநா் அங்கிருந்து காா் மூலம் கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலை விருந்தினா் மாளிகைக்கு சென்று தங்குகிறாா் . தொடர்ந்து நாளை நிகழ்ச்சிகள் பங்கேற்கிறார்.
சென்னையில் கடந்த ஒரு வரமாக, குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான தனிப்படையினர் சோதனை நடத்தி வந்தனர். இந்நிலையில், செல்போன் பறிப்பு மற்றும் பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடர்புடைய 39 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில், 6 சிறுவர்களும் உள்ளனர். அவர்களிடமிருந்து 65 கிராம் தங்க நகைகள், 80 கிராம் வெள்ளி பொருட்கள், 7 செல்போன்கள், ரூ.72,71,521 பணம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
நாமக்கல் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் (பொ) மோகன் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நாமக்கல் வட்டாரத்தில் சித்திரை, வைகாசி பட்டத்தில் நிலக்கடலை பரவலாக பயிரிடப்பட்டுள்ளது. அதற்கு நாமக்கல் வட்டார ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில், மானிய விலையில் நிலக்கடலை விதைகளை கிடைக்கிறது என கூறியுள்ளார்
கள்ளச்சாராய உயிரிழப்பு விவகாரத்தில், பெற்றோரை இழந்து வாடும் குழந்தைகளின் கல்விச்செலவை அதிமுக ஏற்கும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும் அக்குழந்தைகளின் குடும்பங்களுக்கு மாதம் ரூ.5,000 வழங்கப்படும் எனவும் தெரிவித்தார். இன்று(ஜூன் 20) கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரை சந்தித்த எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் போதை பொருட்கள் தடுப்பு மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்கள் செய்தி எதிரொலியாக மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் செய்தியாளர்களை சந்தித்து பேசவுள்ளார். இந்த நிகழ்வில் அனைத்து செய்தியாளர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டு கொண்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து 37 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். இதில், அதே பகுதியைச் சேர்ந்த சுரேஷ் மற்றும் அவரது மனைவி வடிவு ஆகிய இருவரும் கள்ளச்சாராயம் அருந்திய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Sorry, no posts matched your criteria.