India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தி.மலை கிரிவலத்தை முன்னிட்டு நாளை விழுப்புரம், திருக்கோவிலூர், கள்ளக்குறிச்சி, விருத்தாச்சலம், ஆற்காடு, திட்டக்குடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சிதம்பரத்திற்கு 340 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. அதேபோன்று சென்னை கேளம்பாக்கத்தில் இருந்து விழுப்புரம், தி.மலை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு 640 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது என விழுப்புரம் போக்குவரத்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி மாநகர டவுன் நெல்லையப்பர் திருக்கோவில் ஆனித்திருவிழா தேரோட்டத்தை முன்னிட்டு நாளை (ஜூன் 21) நெல்லை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து ஆட்சியர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.
இந்த உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் வகையில் வரும் ஜூன் 29ம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊரகப் பகுதிகளில் உள்ள குடிசைகளை மாற்றி அனைவருக்கும் பாதுகாப்பான நிரந்தர கான்கிரீட் வீடுகளை அமைத்துத் தர “கலைஞரின் கனவு இல்லம்” என்ற திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின்கீழ் ஈரோடு மாவட்டத்தில் 4 ஆயிரம் கான்கிரீட் வீடுகள் அமைத்து தரப்படவுள்ளன. பட்டா வைத்திருப்பவர்கள் ரூ.3.50 லட்சம் செலவில் வீடுகள் கட்டிக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
திருவாடானை தாசில்தாராக பணியாற்றிய கார்த்திகேயன் ஆர்.எஸ். மங்கலம் நில எடுப்பு தாசில்தாராக பணி மாறுதல் செய்யப்பட்டுள்ளார். அதை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனி வட்டாட்சியராக பணியாற்றிய ஜி.ஆர். அமர்நாத் திருவாடானை தாசில்தாராகவும் நியமித்து மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் இன்று
(ஜூன் 20) உத்தரவிட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்த விவகாரத்தில் சேலம் அரசு மருத்துவமனையில் தற்போது வரை 42 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 3 பேர் நேற்றிரவு உயிரிழந்தநிலையில், இன்று (ஜூன் 20) காலை 6 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இந்தநிலையில், தற்போது சேலம் அரசு மருத்துவமனையில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதால், பலி எண்ணிக்கை 10ஆக உயர்ந்துள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் கலை இலக்கியம், கல்வி விளையாட்டு மற்றும் மருத்துவ துறைகளில் அளப்பரிய சாதனை புரிந்தவர்களுக்கு ”பத்ம விருது” வழங்கப்பட உள்ளது. எனவே தகுதி உடையவர்கள் வரும் செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் www.padmaawards.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் இன்று தகவல் தெரிவித்துள்ளார்.
சா. வாடிப்பட்டியை சேர்ந்தவர் கணேசன். பணம் கொடுக்கல் வாங்கலில் இவரது மனைவியின் அண்ணனை சர்க்கரைப் பட்டியைச் சேர்ந்த பொன்மணி மற்றும் குடும்பத்தினர் அடித்துள்ளனர். அதை தட்டி கேட்கச் சென்ற கணேசனை பொன்மணி அடித்து உதைத்து இரும்பு சுத்தியலால் மண்டையை உடைத்துள்ளார். இதையடுத்து, மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கணேசன் கொடுத்த புகாரின் பேரில் அல்லிநகரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
கடலூர் மாவட்ட முன்னாள் படைவீரர்,அவர்தம் குடும்பத்தினர் மற்றும் படைப்பிரிவில் பணிபுரியும் வீரர்களின் குடும்பத்தினர்களுக்கு சிறப்பு குறைத்தீர்க்கும் கூட்டம் வருகிற 27ம் தேதி கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. அதனால் இந்த கூட்டத்தில் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர்,அவர்தம் குடும்பத்தினர் தங்களது கோரிக்கையை மனுவாக அளித்து பயன்பெறலாம் என கலெக்டர் அருண்தம்புராஜ் இன்று தெரிவித்தார்.
கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி பலியான சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் உள்ளிட்ட குற்ற நிகழ்வுகள் குறித்து மாவட்ட எஸ்.பி.க்கு ரகசிய தகவல் அளிக்க 24/7 Help Line No 91599 59919 என்ற எண் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், தகவல் கொடுப்பவரின் விவரம் ரகசியம் காக்கப்படும் என மாவட்ட எஸ் பி அறிவித்துள்ளார்.
திருவண்ணாமலை, செங்கம் அடுத்த சங்கம் பகுதியை சேர்ந்த ராஜ விக்னேஷ் மற்றும் அவரது நண்பர் தினகரன் இருவரும் நேற்று நள்ளிரவு இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது பக்ரிபாளையம் அருகே சாலை ஓரம் நின்றிருந்த லாரி மீது மோதியதில் ராஜ விக்னேஷ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தினகரன் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து செங்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.
Sorry, no posts matched your criteria.