India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பௌர்ணமி கிரிவலம் செல்லும் திருவண்ணாமலை யாத்ரீகர்களின் வசதிக்காக தாம்பரம் -திருவண்ணாமலை இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் தாம்பரத்தில் இருந்து நாளை (ஜூன்.21) மதியம் 12.00 மணிக்குப் புறப்பட்டு மாலை 4 மணிக்கு தி.மலை சென்றடையும். மறுமார்க்கமாக தி.மலையில் இருந்து ஜூன்.22 அன்று காலை 08.00 மணிக்குப் புறப்பட்டு பிற்பகல் 12.30 மணிக்கு தாம்பரம் வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பௌர்ணமி கிரிவலம் செல்லும் திருவண்ணாமலை யாத்ரீகர்களின் வசதிக்காக தாம்பரம் -திருவண்ணாமலை இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் தாம்பரத்தில் இருந்து நாளை (ஜூன்.21) மதியம் 12.00 மணிக்குப் புறப்பட்டு மாலை 4 மணிக்கு தி.மலை வந்தடையும். மறுமார்க்கமாக தி.மலையில் இருந்து ஜூன்.22 அன்று காலை 08.00 மணிக்குப் புறப்பட்டு பிற்பகல் 12.30 மணிக்கு தாம்பரம் சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பக்தர்கள் வசதிக்காக ரோப் கார் இயக்கப்படுகிறது. இந்நிலையில், மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக ரோப் கார் சேவை நாளை (21.06.2024) ஒரு நாள் மட்டும் இயங்காது என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. பக்தர்கள் படி வழி பாதை மற்றும் வின்ச் சேவையை பயன்படுத்தவும் கோயில் நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.
தருமபுரி மாவட்டத்திற்கு ஜூலை மாதம் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை தரவுள்ளதை அடுத்து அதற்கான இடம் தேர்வு செய்யும் பொருட்டு பாளையம்புதூர் அரசு மேல்நிலை பள்ளியில் கலெக்டர் சாந்தி தலைமையில், தருமபுரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் தடங்கம். பெ. சுப்ரமணி Ex.MLA பார்வையிட்டனர்.
காஞ்சிபுரம் மக்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் வகையில் காஞ்சி குடில் அருங்காட்சியகம் அமைந்துள்ளது. இது தனது 120 ஆண்டுகால பழமையால் பெருமிதம் கொள்கிறது. காஞ்சி எஸ்.வி.என் பிள்ளை தெருவில் உள்ள இதில் வீட்டு உபகரணங்கள், ஆடைகள், நாணயங்கள், கைவினைப் பொருட்கள் என பிற அன்றாட உபயோகப் பொருட்களை காணலாம். காஞ்சி குடில் ஒரு சுற்றுலா தளமாக மட்டுமல்லாமல், கலாச்சாரத்தை எடுத்துக்காட்டும் வகையில் அமைந்துள்ளது.
நெல்லை கலெக்டர் கார்த்திகேயன் இன்று (ஜூன் 20) விடுத்துள்ள அறிக்கையில், நெல்லை மாவட்டத்தில் சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் தனிநபர் கடன் சுய உதவி குழு சிறு கடன் கைவினை கலைஞர்களுக்கான கடன் கல்வி கடன் வழங்கப்படுகின்றன. தகுதி உள்ளவர்கள் கலெக்டர் அலுவலக 3வது தளத்தில் இயங்கும் சிறுபான்மையினர் நல அலுவலகம் மண்டல கூட்டுறவு சங்க இணை பதிவாளர் அலுவலகத்தில் விண்ணப்பங்களை வழங்கலாம்.
புதுவையில் மின் கட்டணம் திடீரென உயர்த்தப்பட்டது. இதற்கு அரசியல் கட்சியினர் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.மின்துறை உயர் அதிகாரிகளிடம் இன்று கேட்டதற்கு உயர்த்தப்பட்ட மின் கட்டணம் அமலுக்கு வந்தது நிறுத்தி வைக்கப்படுகிறது. உயர்ந்த மின் கட்டணத்தை மாற்றம் செய்ய ஒழுங்கு முறை மின்சார ஆணையத்திடம் கேட்க முடிவு எடுத்துள்ளோம். ஆணையம், அளிக்கும் அனுமதி பொறுத்து திருத்தப்பட்ட மின்கட்டணம் அமலாகும் என்றார்.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி இதுவரை 39 பேர் உயிரிழந்துள்ள நிலையில், நூற்றுக்கும் மேற்பட்டோர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக, சி.பி.சி.ஐ.டி விசாரணை அதிகாரி குமார் தலைமையிலான போலீசார் தற்போது சேலம் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் நேரில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நாமக்கல் மாவட்ட கண்காணிப்பாளர் இராஜேஸ்கண்ணன் இன்று விடுத்துள்ள அறிவிப்பில், நாமக்கல்லில் கள்ளச்சாராயம் யாரும் விற்கக்கூடாது என்றும், அதையும் மீறி சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சி விற்றாலோ அவர்களைப் பற்றி தகவலை எனது கட்டுப்பாட்டில் உள்ள இந்த 8838352334 எண்ணில் வாட்சப் மூலம் தெரிவிக்கலாம் எனவும், தகவல் கொடுப்பவர்களின் பெயர் இரகசியம் காக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.
மதுரை மாநகராட்சி சாலை மற்றும் பொது இடங்களில் சுற்றி திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்தும் பொருட்டு உள்ளாட்சி அமைப்பு விதிகள் அடிப்படையில் பிப்.12ல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கால்நடைகளை பறிமுதல் செய்வது உள்ளிட்ட நடவடிக்கை அடங்கிய புதிய தீர்மானம் குறித்து (https://shorturl.at/nme9M) ஆட்சேபனை அல்லது கருத்து இருந்தால் 15 நாட்களுக்குள் நேரிலோ கடிதம் மூலம் தெரிவிக்க மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.
Sorry, no posts matched your criteria.