Tamilnadu

News June 20, 2024

திருவாரூரில் நாளை மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்

image

திருவாரூர் மின்வாரிய செயற்பொறியாளர் செந்தமிழ்செல்வி கூறுகையில், திருவாரூர் மின் செயற்பொறியாளர் அலுவலகத்தில் நாளை 21ம் தேதி காலை 11மணிக்கு மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது. இதில் திருவாரூர் நகர், புறநகர், கச்சனம், அடியக்கமங்கலம், கொரடாச்சேரி, குடவாசல், நன்னிலம், திருவாஞ்சியம்,  வலங்கைமான், பூந்தோட்டம், பேரளம், வேலங்குடி, அதம்பார் பகுதி குறைகளை கூறி பயனடையலாம் என்றார். 

News June 20, 2024

உடல் அடக்கம் பணி நடைபெற்று வருகிறது

image

கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து உயிரிழந்த கருனாபுரம் பகுதியை சேர்ந்த 21 நபர்களின் உடல் தகனம் செய்யப்பட்டு வருகிறது. அந்த 21 நபர்களின் உடல் ஒரே இடத்தில் வைக்கப்பட்டு தகனம் செய்யப்பட்டு வருகிறது. வரலாறு காணாத இந்த பேரிழப்பு கள்ளக்குறிச்சி பகுதி மக்களிடையே பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

News June 20, 2024

சென்னையில் கனமழை

image

சென்னை மாநகர் மற்றும் புறநகரின் பல்வேறு பகுதிகளில் இன்று(20.6.24) கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. அதன்படி, நந்தனம், தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை, தி.நகர், ஆலந்தூர், கிண்டி, ஆலந்தூர் அடையாறு, உள்பட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் கடந்த சில நாட்களாகவே இரவு நேரத்தில் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

News June 20, 2024

சிறுபான்மையினருக்கான கடன்கள் வழங்கல் 

image

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் சார்பில் தனிநபர் கடன், கல்வி கடன், சுயஉதவி குழுக்களுக்கான சிறுதொழில் கடன், கைவினை கலைஞர்களுக்கான கடன் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. மாவட்டத்தில் உள்ள இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், புத்த, பார்சி (ம) ஜெயின் ஆகிய சிறுபான்மையினர்கள் கடன் விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து விண்ணப்பிக்க கலெக்டர் தீபக் ஜேக்கப் அறிவுறுத்தியுள்ளார்.

News June 20, 2024

திருநங்கைகளுக்கான நலத்திட்ட உதவிகள் முகாம்

image

தேனி மாவட்டத்தில் உள்ள திருநங்கைகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் சிறப்பு முகாம் நாளை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. இந்த முகாமில், திருநங்கைகள் நலவாரிய அடையாள அட்டை, முதலமைச்சர் ஒருங்கிணைந்த மருத்துவ காப்பீட்டு அட்டை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News June 20, 2024

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞர் கைது

image

மயிலாடுதுறையில் வீட்டில் தனியாக இருந்த 14 வயது சிறுமிக்கு இளைஞர் ஒருவர் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இது தொடர்பாக மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமி கொடுத்த புகாரின் அடிப்படையில் சீர்காழி அருகே உமையாள்பதி கிராமம் கீழத் தெருவை சேர்ந்த ராமு மகன் ரஞ்சித்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து போலீசார் இன்று சிறையில் அடைத்தனர்.

News June 20, 2024

கள்ளச்சாராயம் ஒழிப்பு தொடர்பாக ஆலோசனை

image

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் போதைப்பொருள் தடுப்பு மற்றும் கள்ளச்சாராயம் ஒழிப்பு தொடர்பான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் தஏ.பி.மகாபாரதி தலைமையில் அதிகாரிகள் பல்வேறு ஆலோசனைகளை மேற்கொண்டனர். அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா உட்பட பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

News June 20, 2024

திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம் 

image

தஞ்சாவூர் மாவட்டம் சமூக நலத்துறை சார்பில் திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருகிற 21ஆம் தேதி நடைபெறுகிறது. இச்சிறப்பு முகாமில் திருநங்கைகள் பங்கேற்று அடையாள அட்டை, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை திருத்தம், முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டம், ஆயுஷ்மான் பாரத் அட்டை ஆகியவற்றை பெற்று பயனடையுமாறு கலெக்டர் தீபக் ஜேக்கப் கேட்டுக் கொண்டுள்ளார். 

News June 20, 2024

மாணாக்கர்களுடன் கலந்துரையாடிய ஆட்சியர்

image

திருத்துறைப்பூண்டி அருகில் உள்ள அபிஷேகக்கட்டளை அரசு மேல்நிலைப்பள்ளிக்கு இன்று வருகை தந்த மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ அங்கு படிக்கும் மாணவ மாணவிகளிடம் கலந்துரையாடினார். மேற்கொண்டு என்ன படிக்க வேண்டும் என்பதை தேர்வு செய்வது, கவனச்சிதறல் இல்லாமல் எவ்வாறு படிக்க வேண்டும் என்பது குறித்து மாணவர்களுக்கு விளக்கம் அளித்தார். இதில், தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் உடனிருந்தனர்.

News June 20, 2024

ஈரோடு : சமூக நலத்துறையில் வேலைவாய்ப்பு

image

ஈரோடு மாவட்ட சமூக நல அலுவலகத்தின் ஒருங்கிணைந்த சேவை மையத்தில், தற்காலிக அடிப்படையில் தகவல் தொழில்நுட்ப பணியாளர் மற்றும் வழக்கு பணியாளர் என 3 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. விருப்பம் உள்ள நபர்கள் <>https://erode.nic.in/<<>> என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து வரும் ஜூன்.28-க்குள், மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள மாவட்ட சமூக நல மாவட்ட அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!