India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் , நேற்று சமூக பாதுகாப்புத் துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பாக, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குழந்தை திருமணங்களை தடுத்தல் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டம் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் கே.எம்.சரயு தலைமையில் நடைபெற்றது.
சேலம் அரசு ஐ.டி.ஐ.யில் ‘கடிகார பழுது நீக்கம்’ என்ற 3 மாத குறுகிய பயிற்சி நடைபெற உள்ளது. 10-ஆம் வகுப்பு தேர்ச்சிப் பெற்றவர்கள் பயிற்சியில் சேர விரும்பினால் மே22ஆம் தேதிக்குள் தங்களுடைய அசல் ஆவணங்களுடன் தொழிற்பயிற்சி நிலையத்தை அணுகி நேரில் விவரங்களை அறிந்துக் கொள்ளலாம். கூடுதல் விவரங்களுக்கு 75026- 28826 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் ஹெளதியா கல்லூரியில் விளையாட்டு வீரா்களுக்கான இட ஒதுக்கீட்டின் கீழ் சேர விரும்பும் மாணவ மாணவிகளுக்காக மே 16-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை விளையாட்டு போட்டிகளுக்கான தோ்வு நடைபெறுகிறது. இதில் பங்கேற்க ஆா்வமுள்ள இளநிலை, முதுநிலை வீரா்கள், கல்லூரி உடற்கல்வி இயக்குநரை அணுகி போட்டித் தேர்வில் கலந்து கொள்ளலாம் என கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது.
புதுச்சேரி ஜாலி பிரிண்ட்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் முதலாம் ஆண்டு கோடை பயிற்சி முகாம் நிறைவு விழா இந்திரா நகர் பகுதியில் நேற்று இரவு நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக புதுச்சேரி அரசு கொறடாவும் இந்திரா நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஆறுமுகம் கலந்துகொண்டு பயிற்சி முகாமில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார்.
சென்னை காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின் பேரில், நடப்பாண்டில் ஜனவரி 1 முதல் மே 12 வரை 496 குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். மேலும் மே 6 முதல் 12 வரையிலான 1 வார காலத்தில் 1 திருநங்கை உட்பட 42 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் விளைநிலங்களின் உயர் விளைச்சல் ரகங்களுக்கு தொடர்ந்து இரசாயன உரங்களை அதிகளவில் பயன்படுத்துவதால் மண்வளம் பாதிக்கப்படுகிறது. திரவ உயிர் உரங்கள் இடுவதன் மூலம் மண்ணின் வளத்தை நிலைநிறுத்தி நிலையான உணவு உற்பத்தியைப் பெற முடியும். விவசாயிகள் அதிக மகசூல் பெற திரவ உயிர் உரங்களை பயன்படுத்த வேண்டும் என வேளாண்மை இணை இயக்குநர் கீதா தகவல் தெரிவித்துள்ளார்.
தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பெருந்திட்ட வளாகத்தில் பொதுப்பணி துறையில் சார்பில் ரூ.36 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கூடுதல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டிட கட்டுமான பணிகளை கலெக்டர் சாந்தி நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் கி.சாந்தி நேரில் சென்று பார்வையிட்டு திட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
முத்துப்பேட்டை தம்பிக்கோட்டை கீழக்காடு இரயில்வே பாலம் அருகே நேற்று காலை ரயில்வே தண்டவாளத்தை மாடு ஒன்று கடந்து சென்றபோது அப்போது திருவாரூரிலிருந்து காரைக்குடி நோக்கி சென்ற ரயில் மோதி ரயிலின் நடுவில் சிக்கிக்கொண்டது. உடனே ரயிலை நிறுத்திய ஓட்டுனர்கள் இறங்கி சிக்கிய மாட்டை அங்கிருந்து அப்புறப்படுத்திவிட்டு பின்னர் ரயிலை எடுத்து சென்றனர். இதனால் ரயில் 5 நிமிடம் நிறுத்தப்பட்ட பின்னர் புறப்பட்டு சென்றது.
பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் வளர்புரம் அரசு மேல்நிலைப்பள்ளி மோதிஷ் (488/500) மற்றும் அம்மனூரில் உள்ள ஆதிதிராவிடர் உயர்நிலை பள்ளியில் முதல் இடத்தை பிடித்த மாணவர்களுக்கு நேற்று அரக்கோணம் துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன் மற்றும் அப்துல் கலாம் கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் சுகந்தி வினோதினி மிதிவண்டிகளை வழங்கினர்.
சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றி வருபவர் துளசிதாஸ். இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்துள்ள புகாரில், தொழிலாளர்களின் மாதாந்திர ஆயுள் காப்பீட்டுத் தொகை சுமார் ரூ.200 கோடியை மாநகர உதவி போக்குவரத்து கழக மேலாளர் ரஜினி என்பவர் கையாடல் செய்து விட்டதாகவும், இது தொடர்பாக விளக்கம் கேட்டு 15 நாள் ஆகியும் உரிய பதிலை கூறவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.