India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இடிந்து விழும் நிலையில் மேற்கூரைகள் பெயர்ந்து, தூண்கள் உடைந்து உயிர்ப்பலி வாங்க காத்திருந்த இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் இடங்களில், பணிக்கு வருபவர்கள் தங்களது இருசக்கர வாகனங்களை நிறுத்தி வருவது தொடர்பாக வே டூ நியூஸ் ல் கடந்த 03.06.24 அன்று செய்தி வெளியிட்டது. இதனை அடுத்து மாவட்ட நிர்வாகம் அப்பகுதியில் வேலி அமைத்து நடவடிக்கை எடுத்துள்ளது.
மேட்டுப்பாளையத்தில் நடைபெற உள்ள யோகா தின நிகழ்வில் கலந்து கொள்ள இணையமச்சர் எல்.முருகன் நேற்று கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்தால் 40க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துள்ளனா். 100க்கும் மேற்பட்டோர் சிகிச்சையில் உள்ளனர். கள்ளக்குறிச்சி சம்பவம் தமிழக அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய கருப்பு தினம். தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்றார்.
இந்து மக்கள் கட்சி நிறுவன தலைவா் அா்ஜுன் சம்பத் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கள்ளச்சாராய உயிரிழப்புகளுக்கு பொறுப்பேற்று திமுக அரசு ராஜினாமா செய்ய வேண்டும். அரசியல் கட்சிகள் இதில் பலியானவா்களின் குடும்பங்களுக்கு மனிதாபிமான உதவிகளை செய்வதோடு நிறுத்தி கொள்ள வேண்டும். அதை விடுத்து இறந்தவா்களின் குடும்பங்களுக்கு நிவாரண தொகை வழங்குவது குடிப்போரை ஊக்கப்படுத்துவதாக அமையும் என குறிப்பிட்டுள்ளார்.
நெல்லையில் புகழ்பெற்ற நெல்லையப்பர் – காந்திமதி அம்பாள் திருக்கோயில் ஆனி தேரோட்டம் இன்று(ஜூன் 21) காலை கோலாகலமாக தொடங்கியது. மாவட்ட ஆட்சியர், எம்பி, மேயர் மற்றும் முக்கிய நிர்வாகிகள், பொதுமக்கள் என 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தேரை வடம் பிடித்து இழுத்தனர். அப்போது தேரின் வடம் திடீரென அறுந்தது. இதை தொடர்ந்து வடத்தை மாற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் ஜூலை 10ஆம் தேதி நடைபெற உள்ளது. கடந்த 14ஆம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல், இன்றுடன் நிறைவு பெறுகிறது. பாமக சார்பில் சி.அன்புமணியும், திமுக சார்பில் அன்னியூர் சிவா, நாதக சார்பில் அபிநயா உள்ளிட்ட 24 பேர் இதுவரை வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். கடைசி நாளான இன்று சுயேச்சை வேட்பாளர்கள் சிலர் வேட்புமனு தாக்கல் செய்யக்கூடும் என தெரிகிறது.
கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் மூலம் தனியார் நிறுவனங்களில் பணி புரிவதற்கான சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று கோவை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது. எனவே வேலை தேடுபவர்கள் தங்களது சுயவிவரம் மற்றும் கல்விச் சான்றிதழ்களுடன் நேரில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
தி.மலை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. அதிகாலை வரை பரவலாக மழை பெய்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக ஆரணி 60.80 மி.மீ, திருவண்ணாமலை 8 மி.மீ, செங்கம் 26.4 மி.மீ, போளூர் 20 மி.மீ, ஜமுனாமரத்தூர் 37 மி.மீ, கலசபாக்கம் 10 மி.மீ, தண்டராம்பட்டு 14.2 மி.மீ, செய்யாறு 48மி.மீ, வந்தவாசி 54 மி.மீ, கீழ்பென்னாத்தூர் 9 மி.மீ, வெம்பாக்கம் 28 மி.மீ, சேத்துப்பட்டு 19 மி.மீ. பதிவானது.
சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கன்னியாகுமரி – திப்ருகா் மற்றும் திப்ருகா் – கன்னியாகுமரி விரைவு ரயில்கள் வாரத்துக்கு 5 முறை கோவை, திருப்பூா், ஈரோடு, சேலம், காட்பாடி வழித்தடத்தில் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்த ரயில்கள் தினசரி ரயில்களாக மாற்றப்பட்டுள்ளன. ஜூலை 12 ஆம் தேதி முதல் தினசரி விரைவு ரயிலாக இயக்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாநகரின் மிக முக்கிய நிகழ்ச்சியாக ஆண்டுதோறும் நடைபெறும் சுவாமி நெல்லையப்பர் – காந்திமதி அம்மன் கோயில் ஆனி தேர் திருவிழா கொடி ஏற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. தினமும் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்ற வந்தி நலையில் தேரோட்டம் இன்று(ஜூன் 21) நடைபெறுகிறது. இதை முன்னிட்டு காலை 6 மணிக்கே பக்தர்கள் திரண்டனர். 6.30 மணிக்கு பல்வேறு பாராயணங்கள் பாட சிறப்பு பூஜைகளுடன் தேரோட்டம் தொடங்கியது.
கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்ற கண்காட்சியை நேற்று போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். அப்போது, பேசிய அவர் கோவை மாநகரை பொறுத்தவரை கள்ளச்சாராயம் என்பது கிடையாது. இருப்பினும் மாநகரில் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தியுள்ளோம் . வேறு வழிகளிலிருந்து கள்ளச்சாராயம் உள்ளே வந்து விடாமல் இருப்பதற்காக சோதனை சாவடிகளில் தொடா்ந்து சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.
Sorry, no posts matched your criteria.