India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பிற மாநில பேருந்துகள் தமிழகத்துக்குள் முறையாக அனுமதி பெறாமல் இயக்கப்பட்டு வருவதாக புகார் வருவதை தொடர்ந்து, புதிய விதிமுறைகள் அமலுக்கு வந்ததுள்ளது. அந்த அடிப்படையில் நேற்று கன்னியாகுமரி, களியக்காவிளை உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பஸ்கள் சுற்றி வருவதை அதிகாரிகள் கண்காணித்தனர். இதையடுத்து அப்படி சுற்றி வந்த 5 ஆம்னி பேருந்துகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தனுஷ்கோடி தெற்கு கடற்கரை பகுதியில் சட்டவிரோதமாக படகுகளுடன் நுழைந்த இருவரை மரைன் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் இலங்கை, புத்தளம் மாவட்டத்தைச் சேர்ந்த ஜூனியாஸ் பிராண்டன், ஜூட் ஆண்டனி என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் காற்றின் காரணமாக திசைமாறி வந்தார்களா (அ) கடத்தல் பொருட்கள் ஏதேனும் கொண்டு வந்தார்களா என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெறுகின்றது.
பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை அருகே நேற்று 70 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடந்தார். இதனைக்கண்ட அப்பகுதி மக்கள் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அங்கு வந்த போலீசார் இறந்து கிடந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லையப்பர் அருள் தரும் காந்திமதி அம்பாள் திருக்கோயில் தேரோட்ட விழா இன்று(ஜூன் 21) காலை கோலாகலமாக தொடங்கியது. முக்கிய பிரமுகர்கள், பக்தர்கள் என தேரை வடம் பிடித்து இழுக்கும்போது 3 வடம் அறுந்து விழுந்தது. இதனை 1 மணி நேரத்தில் சரிசெய்து பணி தீவிரமாக நடைபெற்று முடிந்த நிலையில், தேரை வடம் பிடித்து இழுத்தபோது 4வது வடமும் அறுந்து விழுந்தது. இதனால் மீண்டும் தேர் இழுப்பது தாமதமாகியுள்ளது.
கடந்த 2 நாள்களாக சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் மழை பெய்து வருவதைத் தொடர்ந்து, நேற்றிரவும் சென்னையின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால், தாழ்வான பகுதிகள், முக்கிய சாலைகளில் மழைநீர் தேங்கியது. அடுத்த 48 மணி நேரத்துக்கும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். இரவு நேரங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கள்ளச்சாரய தடுப்பு நடவடிக்கை குறித்து நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில், கள்ளச்சாராயம் காய்ச்சுதல், விற்பனை செய்தல் ஆகியவற்றை தடுத்திடும் பொருட்டு அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும், கள்ளச்சாராயம் விற்பனை குறித்து உயர் அலுவலர்களுக்கு உடனடியாக தெரிவிக்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் அறிவுரைகள் வழங்கினார்.
காட்டாங்குளத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட கொண்டமங்கலத்தில் சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் பராமரிக்கப்படுகிறது . தாம்பரம், மாமல்லபுரம், சேலையூர், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் சுற்றி திரிந்த 72 மாடுகளில் 56 மாடுகள் தலா ரூ.2,000 அபராதம் விதித்து உரிமையாளர்கள் ஒப்படைக்கப்பட்ட நிலையில் 16 மாடுகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த கோசலையை மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் நேற்று ஆய்வு செய்தார்
சேலம் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் தடுப்பு நடவடிக்கை குறித்து, மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. அனைத்து துறை அதிகாரிகளுடன் நடந்த இந்த ஆய்வு கூட்டத்தில், கள்ளச்சாராயம் காய்ச்சுதல், விற்பனை செய்தல் மற்றும் பதுக்கி வைத்தல் போன்ற செயல்களில் யாரேனும் ஈடுபட்டால், அவர்கள் மீது காவல்துறை மூலம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் தேசிய அளவிலான குத்துச்சண்டை போட்டி அண்மையில் நடை நடைபெற்றது. இதில் பெரம்பலூர் மாவட்டம் எறையூர் நேரு மேல்நிலைப்பள்ளியில் 9ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் சாய்நிவேஷ் , ஹரிகிருஷ்ணன் மற்றும் உண்டு உறைவிட பள்ளியில் 8ம் வகுப்பு பயிலும் வெங்கடேசன் ஆகிய 3 பேர் கலந்து கொண்டு வெற்றி பெற்று பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வென்றனர். இவர்களுக்கு பலர் வாழ்த்து தெரிவித்தனர்.
போடியைச் சேர்ந்தவர் பேச்சியம்மாள். இவருக்கும் இவரது கணவர் பாண்டிக்கும் ஏற்பட்ட பிரச்னையில் இவர் கணவருக்கு பயந்து பக்கத்தில் உள்ள காமுத்தாய் என்ற உறவினர் வீட்டில் சென்று ஒளிந்து கொண்டார். அங்கு தேடிச் சென்ற பாண்டியை காமுத்தாயின் உறவினர்கள் கல்லால் அடித்து மண்டையை உடைத்தனர். அவர் போடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பேச்சியம்மாள் கொடுத்த புகாரின் பேரில் போடி போலீசார் விசாரிக்கின்றனர்.
Sorry, no posts matched your criteria.