India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில், கள்ளச்சாராயம் குடித்து 25க்கும் மேற்பட்ட நபர்கள் உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் நேரில் சென்று ஆறுதல் கூறினார். வீடு வீடாக சென்று அனைத்து குடும்பத்தினரையும் சந்தித்து ஆறுதல் கூறி விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் நிவாரணம் வழங்கினார்.
ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் எரிவாயு முகவர்களின் குறைதீர்க்கும் கூட்டம் ஜூன் 27-ம் தேதி மாலை 5 மணிக்கு வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் ராமநாதபுரம், ராமேஸ்வரம், கீழக்கரை, ராஜசிங்கமங்கலம், திருவாடானை, பரமக்குடி, கமுதி, கடலாடி மற்றும் முதுகுளத்தூர் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் வசிப்பவர்கள் சமையல் எரிவாயு விநியோகம் தொடர்பான கோரிக்கைகளை நேரில் தெரிவிக்கலாம்.
ராணிப்பேட்டை அடுத்த நவ்லாக் அரசு பண்ணையில், நெட்டை குட்டை ரக தென்னங்கன்றுகள் விற்பனைக்கு தயாராக உள்ளதாக தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் லதாமகேஷ் தெரிவித்துள்ளார். இந்நிலையில் நெட்டை, குட்டை ஒட்டு தென்னங்கன்றுகள் ₹125க்கும், நெட்டை தென்னங்கன்றுகள் விலை ₹60க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தென்னங்கன்றுகள் வாங்க விரும்புவோர் நேரில் வந்த பெற்று செல்லலாம் என்று தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சீர்மரபினர் நல வாரியத்தில் பதிவு செய்த உறுப்பினர்களுக்கு விபத்து ஈட்டுறுதி திட்டத்தின் கீழ் உதவித் தொகை, திருமண உதவித்தொகை, முதியோர் ஓய்வூதியம் போன்ற நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் 18 வயது முதல் 60 வயதுக்கு மிகாமல் உள்ள சீர்மரபினர் இந்த வாரியத்தில் உறுப்பினராக விண்ணப்பிக்கலாம். பழைய உறுப்பினர்கள் புதுப்பித்து கொள்ளலாம் என ஆட்சியர் ஸ்ரீதர் அறிவித்துள்ளார்.
கடல் சார் பொருள்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணைய தூத்துக்குடி மண்டல அலுவலகம் நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், 2023 – 24ஆம் ஆண்டில் இந்தியாவிலிருந்து ரூ.60,524 கோடி கடல் சார்ந்த உணவுப் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 17,81,602 மெட்ரிக் டன் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த நிதி ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2.67 சதவிகிதம் அதிகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ், 2001ஆம் ஆண்டு முதல் 2006 ஆம் ஆண்டு வரை பதிவு செய்து விண்ணப்பித்து 18 வயது நிறைவடைந்தும் முதிா்வுத்தொகை கிடைக்கப் பெறாமல் உள்ள பயனாளிகள், வைப்பு நிதிப் பத்திரம் நகல், பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் நகல், மற்றும் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.
தர்மபுரி மாவட்ட காவல்துறை மற்றும் தடகள சங்கம் இணைந்து போதை பொருள் எதிர்ப்பு மற்றும் விழிப்புணர்வு 5 கிலோமீட்டர் சாலை ஓட்டம் ஜூன் 23 காலை 6 மணிக்கு மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெறுகிறது.போட்டியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் 23ஆம் தேதி காலை 5.30 மணிக்குள் விளையாட்டு மைதானத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என எஸ்பி ஸ்டீபன் ஜேசுபாதம் தெரிவித்துள்ளார்.
தி.மலை மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு பதிவு செய்யாமல் உள்ள கரும்பை விவசாயிகள் பதிவு செய்யலாம். வேர்ப்புழு தாக்குதலில் கரும்பை பாதுகாக்க மருந்து விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலை விவசாய விவகார எல்லை பகுதியில் கரும்பு சாகுபடி செய்து ஆலைக்கு பதிவு செய்யாத கரும்பை 30ஆம் தேதிக்குள் பதிவு செய்யலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இந்திய விமானப்படையின் அக்னிவீர் தேர்வு அக்டோபர் 18ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. இத்தேர்விற்கு இணையதளம் வாயிலாக ஜூலை 8 முதல் விண்ணப்பிக்கலாம். ஜூலை 28ஆம் தேதி வரை இத்தேர்வுக்கு 03.07.2004 முதல் 03.01.2008 வரை பிறந்த திருமணமாகாத இந்திய ஆண் மற்றும் பெண் விண்ணப்பதாரர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். +2 மற்றும் அதற்கு இணையான 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இந்திய விமானப்படையின் அக்னிவீர்வாயு தேர்வு அக்டோபர் 18 முதல் நடைபெற உள்ளது. இத்தேர்விற்கு இணையத்தளம் வாயிலாக ஜூலை 8 முதல் 28 வரை விண்ணப்பிக்கலாம். இத்தேர்வுக்கு 03.07.2004, 03.01.2008 வரை பிறந்த ஆண் மற்றும் பெண் விண்ணப்பிக்கலாம். இதற்கு 12 ஆம் வகுப்பிற்கு இணையான கல்வித்தகுதியுடன் மொத்த மதிப்பீடாக குறைந்தபட்சம் 50% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.