Tamilnadu

News May 14, 2024

10ஆம் வகுப்பு மாணவி தற்கொலை

image

வேலூர் சேண்பாக்கத்தில் உள்ள தனியார் மாணவிகள் விடுதியில் தங்கி படித்து வந்தவர் லாவணிதேவி (17). இவர் 10ம் வகுப்பு தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் எடுத்ததால் மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில் இன்று (மே 14) சேண்பாக்கம் கோயில் குளத்தில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த வடக்கு போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

News May 14, 2024

அவிநாசி அருகே கிணற்றில் மிதந்த சடலம்

image

அவிநாசி அருகே துலுக்கமுத்தூர் கானாங்குளம் வையாபுரி கவுண்டன் தோட்டத்தை சேர்ந்தவர் செல்லப்பன் மகன் பரமசிவம் ( 47). இவருக்கு திருமணமாகி கருத்து வேறுபாடு காரணமாக கனவன் மனைவி பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். இதற்கிடையில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பரமசிவத்தை யாரும் பார்க்கவில்லை என கூறப்படுகிறது. இன்று அவர் அருகே உள்ள கிணற்றில் சடலமாக மிதந்து கிடந்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

News May 14, 2024

சென்னையில் கஞ்சா விற்பனை 85 பேர் கைது

image

சென்னை காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான தனிப்படையினர் கடந்த 7 ஆம் தேதி முதல் நேற்று வரை 7 நாட்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, கஞ்சா உள்பட போதை பொருட்கள் விற்பனை தொடர்பாக 63 வழக்குகள் பதிவு செய்து 85 குற்றவாளிகளை கைது செய்துள்ளனர். தொடர்ந்து அவர்களிடமிருந்து 37.92 கிலோ கஞ்சா, 3.5 கிலோ கிராம் ஓப்பியம் , 2 கிராம் மெத்தம்பெட்டமைன் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.

News May 14, 2024

விழுப்புரம் அருகே ஆட்சியர் ஆய்வு

image

விழுப்புரம் அருகே ஏனாதிமங்கலம் கிராமத்தில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் புதிய அணைக்கட்டு பகுதியில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி நீரில் பணிகளில் பார்வையிட்டு ஆய்வு செய்து விரைவில் பணிகளை முடிக்க கோரி ஒப்பந்ததாரருக்கு அறிவுறுத்தினார். மேலும், பணிகள் நலமாக இருக்க வேண்டும் என்று எச்சரித்தார்.

News May 14, 2024

ராமநாதபுரம்: +1 தேர்வில் அரசு மாதிரி பள்ளி 100% தேர்ச்சி

image

ராமநாதபுரம் மாவட்ட அரசு மாதிரி பள்ளி பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பில் 100 % தேர்ச்சி பெற்ற நிலையில் இன்று காலை வெளியான பதினொன்றாம் வகுப்பு பொதுத் தேர்விலும் 100% தேர்ச்சி பெற்று சாதனை புரிந்துள்ளது. மேலும் கணினி அறிவியல் பாடத்தில் 7 பேர், வேதியியல் பாடத்தில் 2 பேர், பொருளியல் பாடத்தில் ஒருவர் என சதமடித்து சாதனை புரிந்துள்ளனர்.

News May 14, 2024

ஆன்லைன் சூதாட்டத்தில் பணம் இழப்பு: ஒருவர் தற்கொலை

image

பூந்தமல்லி அருகே முகலிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் தனியார் கம்பெனி ஊழியர் சீனிவாசன் (31). இதற்கிடையில் சீனிவாசன், தனது மனைவி பூஜா குமாரின் நகைகளை அடகு வைத்து ஆன்லைன் சூதாட்டம் விளையாடி பணத்தை இழந்துள்ளார். இந்த நிலையில் சீனிவாசன் இன்று காலை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். புகாரின் பேரில் மாங்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News May 14, 2024

கோவை மாவட்டத்தில் மழை..?

image

சென்னை வானிலை மைய அதிகாரிகள் இன்று (மே.14) வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவையில் இன்றும் நாளையும் வெப்பம் அதிகபட்சமாக 35 °, குறைந்த பட்சம் 24 ° இருக்கும், லேசானது முதல் மிதமான மழை பெய்யும். வியாழன், வெள்ளி இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும். சனிக்கிழமை மேகமூட்டம், இடியுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். ஞாயிறு லேசான மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளனர்.

News May 14, 2024

குமரி: நாளை கனமழைக்கு வாய்ப்பு

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை (மே.15) இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 கி.மீ முதல் 50 கி.மீ வரை) கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்றைய தினமும் கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை பெய்தது குறிப்பிடத்தக்கது.

News May 14, 2024

மாநகராட்சியில் வேலை வாங்கி தருவதாக மோசடி

image

சேலம் ஏற்காடு பகுதியை சேர்ந்தவர் அஸ்பரித் அஜய். இவரது நண்பர் கரிகாலன் மூலம்சென்னை மாநகராட்சியில் வேலை பார்த்து வரும் தினேஷ் என்பவருடன் பழகியுள்ளார். இந்நிலையில் இவர் அஜய்யிடம் சென்னை மாநகராட்சியில் வேலை வாங்கி தருவதாக ரூ.16.5 லட்சம் வாங்கியுள்ளார். பின் 2 வருடமாக ஏதும் சொல்லாமல் ஏமாற்றி வந்துள்ளார். இது குறித்து நேற்று கொடுத்த புகாரில் தேனாம்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News May 14, 2024

செங்கல்பட்டு மாவட்டத்தில் மழை

image

குமரிக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று (மே.14) பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று மாலை 7 மணி வரை செங்கல்பட்டு மாவட்டத்தில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான வரை மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!