India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கே.வி.குப்பத்தை அடுத்த லத்தேரியைச் சேர்ந்த துரைராஜ் என்பவரது குழந்தை சுஷ்மிதா (1). நேற்று (மே 14) குழந்தை சுஷ்மிதா விளையாடிக் கொண்டிருந்தபோது தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்தது. அவரை மீட்டு சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து லத்தேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.
ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதி பொதுத்தேர்தலில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் ராமநாதபுரம் அண்ணா பொறியியல் கல்லூரி வளாகத்தில்
பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. அந்த இயந்திரங்கள் கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு வருவதை தமிழக தலைமை தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகு நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். கலெக்டர் விஷ்ணு சந்திரன், எஸ்பி சந்தீஷ் ஆகியோர் உடனிருந்தனர்.
நெல்லை மாவட்டத்தை பொருத்தவரை மொத்தம் 187 மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பிளஸ் 1 தேர்வு எழுதினர். இதில் மொத்தமாக 58 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்று சாதனை நிகழ்த்தி உள்ளன. வெள்ளாங்குழி, குட்டம் அரசு மேல்நிலைப்பள்ளிகள், நெல்லை தாமிரபரணி பொறியியல் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள நெல்லை மாவட்ட அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி ஆகிய மூன்று அரசுப்பள்ளிகள் மட்டும் தேர்வில் 100% வெற்றி பெற்றுள்ளன.
நீலகிரியில் நடைபெறும் கோடை விழாவை கண்டு மகிழ பல்வேறு பகுதிகளிலிருந்து வர இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி கடந்த 7ஆம் தேதி முதல் நேற்று மாலை வரை 6 லட்சத்து 96 ஆயிரத்து 391 பயணிகளும், 1 லட்சத்து 35 ஆயிரத்து 816 வாகனங்களும் இ-பாஸ் பதிவு செய்யப்பட்டுள்ளது என நீலகிரி மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுதோறும் மாநில மற்றும் மாவட்ட அளவில் பல்வேறு பிரிவுகளில் விருது வழங்கி கௌரவித்துவருகிறது. இந்த ஆண்டுக்கான சிறப்பாக தொழில்புரிந்து வரும் தொழில்முனைவோர்கள் விருதுபெற விண்ணப்பிக்கலாம் என்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
கடலூர் மத்திய சிறைச்சாலையில் ஆயிரத்துக்கும் அதிகமான விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இங்கு 8 ஆயுள் தண்டனை கைதிகள் பதினொன்றாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதினர். இதில் தேர்வு எழுதிய 8 கைதிகளும் தேர்ச்சி பெற்று உள்ளனர். தேர்ச்சி பெற்ற ஆயுள் தண்டனை கைதிகளுக்கு சிறை அதிகாரிகள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று (மே.15) இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 கி.மீ முதல் 50 கி.மீ வரை) கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இப்பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
கன்னியாகுமரி, தென்தாமரைகுளம் பகுதியில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் மாவட்டம் முழுவதிலும் இருந்து 32 அணிகள் பங்கேற்றன. நேற்று நடைப்பெற்ற இறுதி போட்டியில் கன்னியாகுமரி சீ பேர்ட்ஸ் அணி முதலிடம் பெற்றது. இரண்டாவது இடத்தை புதுக்கிராமம் அணியும், மூன்றாவது இடத்தை நாகர்கோவில் இந்துக்கல்லூரி அணியும் பெற்றது. போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.
திருநாவலூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் விபத்து வழக்கில் சிக்கிக் கொண்ட வாகனத்தை எடுத்து தருவதாக கூறி லாரியின் உரிமையாளரிடம் இருந்து 8 ஆயிரம் ரூபாய் பெற்று ஏமாற்றியதாக லாரி டிரைவர் அளித்த புகாரின் பேரில் இன்று திருநாவலூர் போலீஸ் பத்திரிக்கையாளர் செல்வராஜை என்பவரை கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.
நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகியவை அண்டை மாவட்டங்களாகும். இந்த மாவட்டங்கள் பிளஸ் 1 தேர்வில் மாநில அளவில் அடுத்தடுத்து இடங்களை பிடித்துள்ளது. அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டம் 93.86% தேர்ச்சி பெற்று மாநில அளவில் 10ம் இடம் பிடித்துள்ளது. நெல்லை மாவட்டம் 93.32 சதவீதம் தேர்ச்சி பெற்று 11வது இடமும், தென்காசி மாவட்டம் 93.02% தேர்ச்சி பெற்று 12ஆம் இடமும் மாநில அளவிலான தரவரிசை பட்டியலில் பெற்றுள்ளது.
Sorry, no posts matched your criteria.