India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது. வானம் இருள் சூழ்ந்து பனி மூட்டமும் அதிகளவு இருந்தது. இதனால், வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை எரியவிட்டவாறு சென்றனர். தொடர்ந்து சாரல் மழை பெய்து வருவதால், அங்கு கடுங்குளிர் நிலவி வருகின்றது. மேலும் மலைப்பாதையில் செல்லும் வாகன ஓட்டிகள் கவனமாகச் செல்ல வேண்டும் என்று காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
ஆலங்குளம் அருகே செல்ல பிள்ளையார்குளம் பகுதியைச் சேர்ந்த சாத்தா குட்டி மகன் சிவமுருகன் (22).சென்னையில் உள்ள தனியார் கடையில் கேசியராக பணி புரிந்து வந்தார். இவர் அதே பகுதியை சேர்ந்த 33 வயது பெண்ணிடம் பழகி அவரது ஆபாச வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இது குறித்த புகாரின் பேரில் கடையம் இன்ஸ்பெக்டர் மேரி ஜெனிதா நேற்று சிவமுருகனை கைது செய்தனர்.
பீகாரை சேர்ந்தவர் அப்துல் ரகுமான்(29). இவர் விருதுநகரில் தங்கி வேலை பார்த்து வருகிறார். இவர் தங்கி உள்ள இடத்தின் அருகே உள்ள தொட்டிக்கு மே 13ஆம் தேதி காலை குளிக்க சென்ற போது கேரளாவைச் சேர்ந்த சபிக், சிகாப் , ரியாஸ் ஆகிய 3 பேர் அப்துல் ரகுமானை தகாத வார்த்தைகள் பேசி தாக்கியுள்ளனர். இது குறித்து அப்துல் ரகுமான் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் நேற்று 3 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
திருச்சி மன்னார்புரத்தில் உள்ள தனியாா் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் நேற்று விருந்து உபசரிப்பு நடைபெற்றது. இதற்காக இரண்டுக்கும் மேற்பட்ட சிலிண்டர்கள் மற்றும் அடுப்புகளை கொண்டு சமையல் பணி நடைபெற்றபோது எதிர்பாராத விதமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதையறிந்த திருச்சி தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர் தீயை அணைத்தனா். இதனால் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் – பர்கூர் மலைப்பகுதியில் இன்று(மே 15) அதிகாலை 6 மணியளவில் காங்கேயத்தில் இருந்து கர்நாடகா மாநிலம் கொல்லேகாலில் இருந்து கால்நடை தீவனம் ஏற்றிக்கொண்டு சென்ற லாரி தட்டகரை அருகே மலை பாதையில் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இந்த விபத்தில் லாரி ஓட்டுநர் ஜெபி(35) பரிதாபமாக உயிரிழந்தார். பர்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த அப்பிநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விஜயகுமார் (27) என்பவர் குடும்ப பிரச்சனை காரணமாக மனவேதனையில் இருந்துள்ளார். இந்த நிலையில் நேற்று மாலை அப்பிநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் சடலத்தை மீட்டு ஊத்தங்கரை போலீசாரிடம் ஒப்படைத்த நிலையில் சடலம் பெற்றோர்களிடமே ஒப்படைக்கப்பட்டது.
தஞ்சை மாவட்டத்தில் ஜூலை 2021 முதல் ஏப்ரல் 2024 வரை கும்பகோணம் மண்டலத்தில் உள்ள அரசு டவுன் பஸ்களில் மகளிர் பயனாளிகள் 14 கோடியே 79 லட்சத்து 93 ஆயிரத்து 735 பேரும், மாற்றுத்திறனாளிகள் 8 லட்சத்து 45 ஆயிரத்து 192 பேரும், மாற்றுத்திறனாளிகளின் உதவியாளர்கள் 37 ஆயிரத்து 315 பேரும், திருநங்கைகள் 68 ஆயிரத்து 186 பேரும் என மொத்தம் 14 கோடியே 89 லட்சத்து 44 ஆயிரத்து 428 பயனாளிகள் கட்டணமில்லா பஸ் பயணம் செய்தனர்.
ராணிப்பேட்டை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் வளர்மதி நேற்று அரக்கோணம் பாராளுமன்ற தொகுதி வாக்கு எண்ணும் மையம் வாலாஜா அறிஞர் அண்ணா அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையை பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.
தி.மலை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் கீழ் மாவட்டத்தில் தி.மலை, செய்யாறு, ஜமுனாமரத்தூர் பகுதிகளில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் 2024-2025ம் ஆண்டுக்கான மாணவா் சோ்க்கை மே 10 முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. 8 மற்றும் 10 ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் இணையதளம் மூலம் ஜூன் 7 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தகவல்.
கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 92 தனியார் பள்ளிகளில் இயங்கி வரும் 702 பேருந்துகளில் இயக்குவதற்கு தயார் நிலையில் உள்ள 556 பேருந்துகள் மாவட்ட விளையாட்டு அரங்கில் ஆய்வு செய்யப்பட்டன. கரூரில் தனியார் பள்ளி பேருந்துகளின் தரம் குறித்த ஆய்வின்போது ஓட்டுனர் வருகை இல்லாத, முதலுதவி பெட்டியை சரியாக பயன்பாட்டில் வைக்காத பேருந்துகளுக்கு அனுமதி தரக்கூடாது என எஸ்.பி பிரபாகர் உத்தரவிட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.