India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னையில் செல்ல பிராணிகளை வளர்க்க உரிமம் பெற வேண்டும் என மாநகராட்சி கூறிய நிலையில் செல்ல பிராணிகளை வளர்ப்போர் உரிமம் பெற மாநகராட்சி இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கினர். இந்நிலையில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இன்று இணையதளம் முடங்கியது. இன்று மாலைக்குள் சரி செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த ஒரு வாரத்தில் 1165 செல்லபிராணிகளுக்கு உரிமம் வழங்கியது குறிப்பிடத்தக்கது
ராணிப்பேட்டை, சோளிங்கரில் நகராட்சிக்கு உட்பட்ட பேருந்து நிலையத்தில் உள்ள கழிப்பறையில் இருந்து குடிநீர் எடுத்து பொதுமக்களுக்கு சப்ளை செய்து வருகிறார்கள். கழிப்பறையில் உறிஞ்சப்படும் நீரால் நோய் பரவும் என பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். கழிவுநீர் டேங்கில் இருந்து உறிஞ்சப்படும் நீர் குடிநீர் குழாய்க்குள் வருவதினால், இந்த நீரை குடிநீராக பயன்படுத்தப் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வாராந்திர குறைதீர் நாள் முகாம் இன்று நடைபெற்றது. மாவட்ட எஸ்.பி. ஹர்ஷ் சிங் பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்து 13 மனுக்களை பெற்றார். பெறப்பட்ட மனுக்களுக்கு விரைவில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார். இதில், நாகை மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான புகார்தாரர்கள் பங்கேற்றனர்.
விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட நரசிங்கபுரம் பகுதியில் அமைந்துள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியினை தூய்மைப்பணியாளர்கள் மூலம் தூய்மை செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதனை மாவட்ட ஆட்சித்தலைவர் பழனி அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், செயற்பொறியாளர் மோகன் ஆகியோர் உடனிருந்தனர்.
இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை முன்னதாகவே மே மூன்றாவது வார இறுதி தொடங்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் வருகிற 18, மற்றும் 19ஆம் தேதி தென்காசி மாவட்டம் முழுவதும் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கடந்த சில தினங்களாக ஏற்கனவே சிவகிரி வட்டாரம் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்ய தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
காட்பாடி விஐடி பல்கலைக்கழகத்தில் இன்று நடந்த நிகழ்ச்சியில், வேலூர் மாவட்டத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 550 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் மாணவ, மாணவிகளை பாராட்டி நினைவு பரிசினை கலெக்டர் சுப்புலட்சுமி வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி, குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் சுபலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நெல்லை மாவட்டம் வள்ளியூரில் பிரசித்திபெற்ற சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் கடந்த வாரம் கொடி ஏற்றத்துடன் சித்திரை திருவிழா தொடங்கியது. தொடர்ந்து இன்று காலை சுவாமி, அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினர். தேரை பொதுமக்கள் வடம் பிடித்து இழுத்தனர். அப்போது தேர் வளைவு பகுதியில் சென்றபோது அங்குள்ள சுவரின் மோதி விபத்து ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த காயம் ஏற்படவில்லை.
திமுக துணை பொதுச்செயலாளரும், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.இராசா வெளியிட்டுள்ள அறிக்கை: திராவிட மரபினத்தின் பூர்வீக குடிகளான நீலகிரி மலை மாவட்ட படுகர் இன மக்கள் தங்களின் செம்மாந்த, கலாச்சார, நாகரிக பண்பாட்டுக்கூறுகளை பேணிக்காத்திட ஆண்டுதோறும் கொண்டாடப்படும் “படுகர் தினத்தில்” அனைவரையும் வணங்கி வாழ்த்துகிறேன் என்றார்.
காஞ்சிபுரம் மாநகராட்சியில் உள்ள பொன்னேரி கரையில் அரசு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இன்று தனியார் பேருந்து ஓட்டுனர்களுக்கு சிறப்பு பயிற்சி முகாம் இன்று காலை 11 மணிக்கு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பன்னீர்செல்வம் மற்றும் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் கனரக ஓட்டுநர்கள் அனைவரும் கலந்து கொண்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
தென்காசி மாவட்டம் யானை பாலத்தில் சிற்றாறு செல்கிறது. பாலத்தில் இன்று அடையாளம் தெரியாத ஆண் உடல் கிடப்பதாக தென்காசி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனை அடுத்து தென்காசி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆண் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.