India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கடந்த ஆண்டு சமூக வலைதளத்தில், சவுக்கு சங்கர், ஃபெலிக்ஸ் ஜெரால்டு என்பவருக்கு அளித்த பேட்டியில் இந்திய சுதந்திர போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பற்றி அவதூறு பரப்பி இழிவுபடுத்தி பேட்டி கொடுத்து பேசியதாக
வழக்கறிஞர் முத்து இன்று பந்தயசாலை காவல்நிலையத்தில் அளித்த புகாரில், கோவை பந்தய சாலை காவல் துறையினர் சவுக்கு சங்கர், மற்றும் பெலிக்ஸ் ஜெரால்ட் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
பாண்டிச்சேரியில் உள்ள பழமையான பேராலயம், சம்பா கோயில் என்றழைக்கப்படுகிறது. பல வருடங்களாக இந்த பேராலயம் கட்டப்பட்டு வந்தது. இறுதியில் 1791 இல் இந்த தேவாலயம், பிஷப் சாம்பெனோயிஸ் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டது. பின்னர், கோபுரம் கட்டப்பட்டது. 1970 மற்றும் 1787 இல் மறுசீரமைக்கப்பட்டது. இந்த தேவாலயத்தில் பல சிலைகள் மற்றும் பலிபீடங்கள் உள்ளன.
உலகப்புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவில் மாமன்னன் ராஜராஜ சோழனால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. யுனெஸ்கோ பாரம்பரிய சின்னமாக விளங்கும் கோவில் தமிழர்களின் கட்டிடக்கலைக்கும் -சிற்பக்கலைக்கும் எடுத்துக்காட்டாக விளங்குகிறது. புகழ் மிகுந்த கோவிலை காண தமிழகம் மட்டுமின்றி ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். தற்போது தொடர் விடுமுறை என்பதால் சுற்றுலா பயணிகள் வரத்து அதிகளவில் உள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த மல்லகுண்டா ஊராட்சிக்கு உட்பட்ட குருபவானிகுண்டா அடுத்த பூதிகான் பள்ளம் பகுதியில் வசிக்கும் இருளர் இன மக்களிடம் இன்று(மே 15) பேசிய மாவட்ட திட்ட இயக்குநர், அம்மக்களுக்கு புதிய வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ள இடத்திற்கு செல்லுமாறு அறிவுறுத்தினார். இது வனப்பகுதி என்பதால் தொடர்ந்து இங்கு குடியிருக்க முடியாது என்றும் அறிவுறுத்தினார்.
சேலம் நெய்க்காரப்பட்டி மேம்பாலத்தின் வழியாக சரக்கு வேன் ஒன்றில் தகர அட்டைகள் கொண்டு சென்ற போது பாரம் தாங்காமல் திடீரென சரிந்து விழுந்தது. அந்த நேரத்தில் சாலையில் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. மேலும் இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திடீரென தகர அட்டை சரிந்து விழுந்ததால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.
புதுச்சேரி அரசு நிதித்துறை செயலர் சிவக்குமார் பிறப்பித்த உத்தரவில் புதுச்சேரி மாநில அரசுத்துறைகளில் பணியாற்றும் தினக்கூலி மற்றும் பகுதி நேர ஊழியர்களுக்கு 7 வது ஊதியக்குழுவின் பரிந்துரை ஜனவரி 1.2024 முதல் முன் தேதியிட்டு ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் சமீபத்தில் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை மத்திய அரசு ஊழியர்களுக்கு நிகராக 46 சதவீதத்தில் இருந்து 50 ஆக உயர்த்தப்பட்டது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வந்த நிலையில், தற்போது ஆங்காங்கு கோடை மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை பெருநகரில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான வரையில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என தெரிவித்துள்ளது.
சென்னையில் செல்ல பிராணிகளை வளர்க்க உரிமம் பெற வேண்டும் என மாநகராட்சி கூறிய நிலையில் செல்ல பிராணிகளை வளர்ப்போர் உரிமம் பெற மாநகராட்சி இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கினர். இந்நிலையில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இன்று இணையதளம் முடங்கியது. இன்று மாலைக்குள் சரி செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த ஒரு வாரத்தில் 1165 செல்லபிராணிகளுக்கு உரிமம் வழங்கியது குறிப்பிடத்தக்கது
ராணிப்பேட்டை, சோளிங்கரில் நகராட்சிக்கு உட்பட்ட பேருந்து நிலையத்தில் உள்ள கழிப்பறையில் இருந்து குடிநீர் எடுத்து பொதுமக்களுக்கு சப்ளை செய்து வருகிறார்கள். கழிப்பறையில் உறிஞ்சப்படும் நீரால் நோய் பரவும் என பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். கழிவுநீர் டேங்கில் இருந்து உறிஞ்சப்படும் நீர் குடிநீர் குழாய்க்குள் வருவதினால், இந்த நீரை குடிநீராக பயன்படுத்தப் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வாராந்திர குறைதீர் நாள் முகாம் இன்று நடைபெற்றது. மாவட்ட எஸ்.பி. ஹர்ஷ் சிங் பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்து 13 மனுக்களை பெற்றார். பெறப்பட்ட மனுக்களுக்கு விரைவில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார். இதில், நாகை மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான புகார்தாரர்கள் பங்கேற்றனர்.
Sorry, no posts matched your criteria.