Tamilnadu

News June 22, 2024

2 ஆண்டுகளில் ரூ.17.24 கோடி கடனுதவி

image

ராமநாதபுரம் மாவட்ட தொழில் மையம் சார்பில் கடந்த 2022 ஏப்ரல் 1 முதல் 2024 மார்ச் 31 வரை அரசின் நலத்திட்டங்களின் கீழ் ரூ.7.93 கோடி மானியத்துடன் ரூ.30.05 கோடி மதிப்பில் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.
இதில் 50 இளையோருக்கு ரூ.17 கோடியே 24 லட்சத்து 16 ஆயிரம் கடனுதவி வழங்கப்பட்டது. இதில் ரூ.4 கோடியே 31 லட்சத்து 4 ஆயிரம் மானியத் தொகை வழங்கப்பட்டுள்ளது என கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.

News June 22, 2024

பணி நியமண ஆணை வழங்கிய கலெக்டர்

image

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் இன்று (22.06.2024) மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபுசங்கர் அவர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கான தனியார் நிறுவனம் சிறப்பு வேலை வாய்ப்பு முகாமில் 22 பயனாளிகளுக்கு பணி நியமனத்திற்கான ஆணைகளை வழங்கினார். உடன் துறை சார்ந்த அலுவலர்களும் ஆட்சியர் அலுவலக ஊழியர்களும் இருந்தனர்.

News June 22, 2024

பத்தாம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு ஹால் டிக்கெட்

image

பத்தாம் வகுப்பு துணை தேர்வு ஜூலையில் நடக்க உள்ளது. அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விண்ணப்பித்த அனைத்து தனித்தேர்வர்களும் ஜூன் 24ம் தேதி பிற்பகல் முதல், www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களுக்கான ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இணையதளத்தில் தேர்வு எண், விண்ணப்ப எண், பிறந்த தேதியை குறிப்பிட்டு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று பள்ளி கல்வித்துறை மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News June 22, 2024

தஞ்சாவூர் கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் போதை பொருட்கள் மற்றும் கள்ளச்சாராயம் காய்ச்சுவது, விற்பது போன்ற சட்டவிரோத செயல்களில் எவரேனும் ஈடுபடுவது தெரியவந்தால், கட்டணமில்லா தொலைபேசி எண் 10581 மற்றும் வாட்ஸ்அப் செயலி எண் 9042839147 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தி மூலம் புகார் அளிக்கலாம். புகார் அளிப்பவர்களின் பெயர் மற்றும் விலாசம் ரகசியம் காக்கப்படும் என ஆட்சியர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.

News June 22, 2024

சிறுவன் மர்மமான முறையில் தூக்கிட்டு தற்கொலை

image

தமிழக கேரள எல்லைப் பகுதியான குமரி வெள்ளறடை பகுதியில் எட்டாம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுவன் இன்று (ஜூன் 22) ஜன்னலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது. வலது கை ஜன்னல் கம்பியில் கட்டப்பட்ட நிலையில், துப்பட்டாவில் ஜன்னலில் தூக்கிட்டு மர்மமான முறையில் இறந்துள்ளார். இது குறித்து வெள்ளறடை போலீசார் மர்ம மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News June 22, 2024

சிவகார்த்திகேயனுக்கு தோழன் விருது

image

திருத்துறைப்பூண்டியில் இன்று (ஜூன்.22) நடைபெற்ற உலகப் புகழ் பெற்ற தேசிய நெல் திருவிழாவில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு “உழவர்களின் தோழன் விருது!” வழங்கப்பட்டது. இந்த விழாவில் பேசிய சிவகார்த்திகேயன், எல்லோரும் நெல் ஜெயராமன் ஐயாவுக்கு தான் கடைசி நேரத்தில் செய்த உதவி என்கின்றனர். தயவு செய்து அப்படி யாரும் சொல்லி விடாதீர்கள். அது உதவி அல்ல நம் ஒவ்வொருவரின் கடமை என்றார்.

News June 22, 2024

திமுகவில் இணைந்த மாற்றுக்கட்சியினர்

image

திருப்பூர் தெற்கு மாவட்டம் வெள்ளகோவில் நகரம் மற்றும் குண்டடம் ஒன்றியம் பகுதிகளில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திருப்பூர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் இல பத்மநாபன் தலைமையில், ஈரோடு பாராளுமன்ற உறுப்பினர் கே.இ. பிரகாஷ் முன்னிலையில் மாற்று கட்சியில் இருந்து விலகி திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். உடன் மாவட்ட கழக ஒன்றிய நகர பேரூர் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

News June 22, 2024

போதையில் சாலையில் உறங்கிய நபரால் ட்ராபிக் ஜாம்

image

குன்றத்தூர் ஒன்றியம் படப்பை பஜாரில் அமைத்துள்ள கிறிஸ்தவ தேவாலயம் வாசலில் ஒருவர் குடித்துவிட்டு அவர் வந்த நான்கு சக்கர வாகனத்தை பொதுமக்களுக்கு இடையூறாக நிறுத்திவிட்டு அச்சாலையில் ஓரமாக சுமார் நான்கு மணி நேரமாக உறங்கிக் கொண்டிருந்தார். இதனால் வாகனங்கள் அனைத்தும் சாலையில் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டது.

News June 22, 2024

கடலூரில் தள்ளுமுள்ளு

image

பாரதிய ஜனதா கட்சி சார்பில் கள்ளக்குறிச்சி பகுதியில் விஷசாராயம் அருந்தி உயிரிழப்பை தடுக்க தவறிய தமிழக அரசை கண்டித்து கடலூர் தலைமை தபால் நிலையம் அருகே இன்று பாரதிய ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர்.அப்பொழுது, போலீசார் இதற்கு அனுமதி இல்லை எனக் கூறி அவர்களை கைது செய்ய முற்பட்ட போது பெரும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.இதில் 200க்கும் மேற்பட்ட பாரதிய ஜனதா கட்சி தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர்.

News June 22, 2024

வேலூர்: ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 70 பேர் கைது

image

கள்ளக்குறிச்சி விஷ சாராய மரணத்தை கண்டித்து வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே பாஜக சார்பில் இன்று (ஜூன் 22) ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் மனோகரன் தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தேசிய சிறுபான்மை பிரிவு செயலாளர் வேலூர் இப்ராஹிம் உள்பட 70 பேரை போலீசார் கைது செய்தனர்.

error: Content is protected !!