Tamilnadu

News June 23, 2024

பொதுமக்களுக்கு நாகை எஸ்.பி. வேண்டுகோள்

image

நாகை மாவட்டத்தில் வெளிமாநில மதுவகைகள் கள்ளச்சாராயம் புகையிலை உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பவர்கள் மற்றும் கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் குறித்து பொதுமக்கள் 9498181257 என்ற வாட்ஸ் அப் எண்ணிலோ அல்லது 8428103090 என்ற அலைபேசி எண்ணிலோ தகவல் தரலாம். இது தொடர்பாக தகவல் தருபவர்கள் குறித்த விவரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும் என நாகை மாவட்ட போலீஸ் சூப்ரண்ட் ஹர்சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

News June 23, 2024

நெல்லை மக்கள் கவனத்திற்கு 

image

பொதுமக்கள் மற்றும் காவல் துறையினர் இணைந்து சட்டவிரோதமான மதுபானங்களை ஒழிப்பதற்காக, நெல்லை மாவட்ட எஸ்.பி., சிலம்பரசன் புது முயற்சியை மேற்கொண்டுள்ளார். அதன்படி, கள்ளச்சாராயம் காய்ச்சுவது, விற்பது குறித்து தெரியவந்தால் 94981 01765 மற்றும் 94981 10581 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிற்கு அழைத்து தெரிவிக்கவும் என்றும், தகவல் தெரிவிப்பவரின் விவரங்கள் பாதுகாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News June 23, 2024

தேனி: கம்பம் மெட்டு சாலையில் போக்குவரத்துக்கு தடை

image

கம்பம் மெட்டு வழியாக கேரளத்துக்கு செல்லும் 18 கொண்டை ஊசி வளைவுகள் கொண்ட இந்த சாலையில் உள்ள 17-வது வளைவில் சேதமான சாலை சீரமைப்புப் பணிகள் இன்று (ஜூன்.23) நடைபெறுகிறது. எனவே ஒரு நாள் மட்டும் கம்பம் மெட்டு மலைச் சாலையில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு, தற்காலிகமாக சாலை மூடப்படுகிறது. குமுளி மலைச் சாலையை மாற்றுப் பாதையாக பயன்படுத்தி கொள்ளலாம் என நெடுஞ்சாலைத்துறையினர் அறிவித்துள்ளனர். 

News June 23, 2024

வேலூர்: 14,543 லிட்டர் சாராய ஊறல்கள் அழிப்பு

image

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததை தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் சாராய தடுப்பு வேட்டையில் போலீசார் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் வேலூர் மாவட்டம் முழுவதும் கடந்த 3 நாட்களில் மொத்தம் 14,543 லிட்டர் சாராயம் மற்றும் ஊறல் கைப்பற்றி அழிக்கப்பட்டுள்ளது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

News June 23, 2024

திருச்சியில் இன்று குடிநீர் விநியோகம் நிறுத்தம்

image

திருச்சி அருகே கம்பரசம் பேட்டை நீர் பணி நிலையத்திலிருந்து செல்லும் குடிநீர் குழாயில் இன்று உடைப்பு ஏற்பட்டதால் அதனை சரி செய்யும் பணி இன்று நடைபெற உள்ளது. இதனால் மரக்கடை, விறகுபேட்டை பகுதிகளில் இன்று ஒரு நாள் குடிநீர் விநியோகம் இருக்காது. நாளை 24ம் தேதி காலை வழக்கம்போல் குடிநீர் விநியோகம் நடைபெறும் என திருச்சி மாநகராட்சி ஆணையர் நேற்று தெரிவித்துள்ளார்.

News June 23, 2024

இணையவழியில் ரூ.5.23 லட்சம் மோசடி – பெண் மீது புகாா்

image

புதுச்சேரி கருவடிக்குப்பம் பகுதியைச் சோ்ந்தவா் மணிகண்டன். இவருக்கு பெண் ஒருவா் தொடா்பு கொண்டு பங்குச் சந்தையில் இணையவழியில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் எனக் கூறியுள்ளாா்.
பல தவணைகளில் மொத்தம் ரூ.5.23 லட்சம் முதலீடு செய்த நிலையில், அதற்கான லாபத்தை அவரால் எடுக்க முடியவில்லை தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த மணிகண்டன், கோரிமேடு பகுதியில் உள்ள இணையவழி குற்றப்பிரிவில் புகாா் அளித்தாா்.

News June 23, 2024

தேனி மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

image

தேனி மாவட்டத்தில் உரிமம் பெற்ற மருத்துவமனைகள் மற்றும் தொழிற்சாலைகளில், அரசால் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு மட்டுமே Rectified ஸ்பிரிட் உபயோகப்படுத்தப்பட்ட வேண்டும். தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட மருத்துவமனை, தொழிற்சாலைகள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் எச்சரித்துள்ளார்.

News June 23, 2024

மாரியம்மன் கோயிலில் சிகை ஏலம்

image

செங்கம் புதூர் மாரியம்மன் கோயிலில் நீக்கிய சிகை சேகரிப்பு உரிமம் ஏலம் வரும் 27ஆம் தேதி  காலை 11 மணிக்கு இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் திருவண்ணாமலை மற்றும் செங்கம் ஆய்வாளர் முன்னிலையில் திருவண்ணாமலை, காந்திநகர், இணை ஆணையர் அலுவலகத்தில் நிபந்தனைகளுடன் நடைபெறவுள்ளது. விவரங்களுக்கு இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகத்தில் கேட்டுப் பெறலாம்.

News June 23, 2024

வத்தல்மலையில் கலெக்டர் ஆய்வு

image

தருமபுரி மாவட்டம் வத்தல்மலையில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம் சார்பில் 2.23 கோடி மதிப்பில் உணவகம் மற்றும் வாகனம் நிறுத்தம் கட்டுமான பணிகள் நடைபெறுவதை கலெக்டர் கி.சாந்தி  நேற்று ஆய்வு செய்தார். உடன் வட்டாட்சியர் ஜெயசெல்வன், வட்டார வளர்ச்சி அலுவலர் சத்யா, ஊராட்சி மன்ற தலைவர் தங்கராஜ் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளனர். 

News June 23, 2024

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மது மற்றும் போதைப் பொருட்கள் தொடர்பான தகவல்கள் மற்றும் புகார்களுக்கு கட்டணமில்லா தொலைபேசி எண் 10581 இல் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் அறிவித்துள்ளார். கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் விவகாரத்தில் பலர் உயிரிழந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்

error: Content is protected !!