Tamilnadu

News June 23, 2024

அதிமுக ஆர்ப்பாட்டம்  – போலீஸ் குவிப்பு

image

கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து 50 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரிலும் அதிமுக நாளை போராட்டம் நடத்த உள்ளது. இந்நிலையில், செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையத்தில் இன்று போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், சந்தேகிக்கும் வகையில் திரியும் நபர்களை பிடித்து விசாரணை நடத்தினர். 

News June 23, 2024

கோவை: பிரமிக்க வைக்கும் டேக்ஸ்பேர் 2024

image

சைமா நடத்தும் டெக்ஸ்பேர் 2024 கண்காட்சியின் 14ஆவது பதிப்பு அவிநாசி ரோட்டில் உள்ள கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் நடைபெற்று வருகிறது. நாளை நிறைவு பெறும், இந்த கண்காட்சியை காலை 10 முதல் மாலை 6 மணி வரை இலவசமாக பார்வையிடலாம். புதிய தொழில்நுட்பங்களுடன் வெளிவந்துள்ள ஜவுளி இயந்திரங்கள் அனைவரையும் கவர்ந்துள்ளன . கண்காட்சியில் இயந்திரங்களை பதிவு செய்வோருக்கு தள்ளுபடி சலுகைகளை அளிக்கின்றன.

News June 23, 2024

நாமக்கல்லில் புதிய ரேசன் கடை திறப்பு

image

 மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஸ்குமார் இன்று (ஜூன் 23) நாமக்கல் நகராட்சி, கொண்டிசெட்டிபட்டியில் புதியதாக கட்டப்பட்டுள்ள நியாய விலை கடையை திறந்து வைத்தார். தொடர்ந்து குடும்ப அட்டைதாரர்களுக்கு பொது விநியோகக் பொருட்களை வழங்கினார். உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் ச.உமா ஆகியோர் உள்ளனர். மேலும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

News June 23, 2024

சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம்

image

ஏரல், முக்காணி கிராமம் தூத்துக்குடி – திருச்செந்தூர் சாலையில், சாலையோரமாக தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தவர்கள் மீது இன்று கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 3 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததோடு, மேலும், 2 பேர் பலத்த காயமடைந்தனர். இந்நிலையில், தமிழக முதலமைச்சர் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும் நிவாரணமாக வழங்கிட உத்தரவிட்டுள்ளார்.

News June 23, 2024

மக்கள் குறை தீர்வு கூட்டம் நடைபெறாது

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஜூன் 21ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை அந்தந்த வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி நடைபெற்று வருகிறது. எனவே நாளை 24ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறாது. அந்தந்த வட்டாட்சியர் அலுவலகங்களில் ஜமாபந்தி வருவாய் அலுவலரிடம் காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை மனுக்களை கொடுத்து மக்கள் பயன்பெறலாம் என்று ஆட்சியர் வளர்மதி இன்று தெரிவித்துள்ளார்.

News June 23, 2024

செங்கல்பட்டு: பிரியாணி கடையை தூக்கிய போலீஸ்

image

செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையத்தில் பிரபல பிரியாணி கடையில் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு இடையே நேற்று மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில்,  ஒரு வரை ஒருவர் தாக்கி கொண்டதால் செங்கல்பட்டு நகர காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில், செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே பிரியாணி கடையின் தள்ளு வண்டியை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். 

News June 23, 2024

நெல்லை: நாளை அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்

image

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம், தமிழகத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில், திமுக அரசு ராஜினாமா செய்ய வலியுறுத்தி, அதிமுக சார்பில் நாளை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. வண்ணார்பேட்டை செல்லபாண்டியன் சிலை அருகில் நடக்கும் இந்த ஆர்ப்பாட்டத்தில், கட்சியினர் அனைவரும் பங்கேற்க வேண்டுமென கட்சியின் இணைச்செயலாளர் கல்லூர் வேலாயுதம் தெரிவித்துள்ளார்.

News June 23, 2024

ஏலகிரி மலையில் குவிந்த சுற்றுலா பயணிகள்

image

ஏலகிரி மலையில் வார விடுமுறையை முன்னிட்டு இன்று சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிந்தனர். இப்பகுதியில், மிதமான குளிர்ந்த காற்று வீசுவதால் சுற்றுலா பயணிகளை அதிகம் கவரத் தொடங்கியுள்ளது. சுற்றுலா பயணிகளின் வருகை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், வியாபாரமும் படுஜோராக நடப்பதாக வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

News June 23, 2024

முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டும் – ஆர்.எஸ் பாரதி

image

கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவத்தில் புதுச்சேரி மாநிலத்தில் இருந்துதான் மெத்தனால் வந்துள்ளது என்று தெரியவந்துள்ளது. ஆகவே இதற்கு முழுவதும் பொறுப்பேற்று புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அவர்கள் தான் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று ஆர்.எஸ் பாரதி திமுக அமைப்பு செயலாளர் இன்று செய்தி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

News June 23, 2024

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மது மற்றும் போதைப் பொருட்கள் தொடர்பான தகவல்கள் மற்றும் புகார்களுக்கு கட்டணமில்லா தொலைபேசி எண் 10581 இல் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் அறிவித்துள்ளார். கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் விவகாரத்தில் பலர் உயிரிழந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்

error: Content is protected !!