Tamilnadu

News June 23, 2024

பாமக எம்எல்ஏ தந்தை மறைவு- முதல்வர் இரங்கல்

image

சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினரும், பாமக மாநகர் செயலாருமான இரா.அருளின் தந்தை இராமதாஸ் இன்று உயிரிழந்தார். இதனை அறிந்த தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், பாமக நிறுவனர் இராமதாஸ் உள்ளிட்ட ஏராளமான அரசியல் தலைவர்கள் அவருக்கு இரங்கல் தெரிவித்தனர்.‌ மேலும் ஏராளமான பாமக நிர்வாகிகளும், பொதுமக்களும் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

News June 23, 2024

கிருஷ்ணகிரியில் ஆலோசனை கூட்டம்

image

ஓசூரில் ஜூலை 12 முதல் 23ஆம் தேதி வரை 13-வது புத்தக கண்காட்சி நடைபெறுகிறது. இதை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் சரயு தலைமையில் நடந்தது. மாவட்டத்தை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த புத்தக திருவிழாவை பார்வையிட்டு அரிய தகவல்களுடன் கூடிய புத்தகங்களை வாங்கி பயன்பெற வேண்டும் என்று தெரிவித்தார்.

News June 23, 2024

புதுவை: விரைவில் ரேஷன் கடை

image

காரைக்கால் மாவட்டத்திற்கு வந்த புதுச்சேரி குடிமை பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் சாய் சரவணன் குமார் இன்று காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் உள்ள உலக புகழ் பெற்ற ஸ்ரீ சனீஸ்வர பகவான் ஆலயத்தில் சாமி தரிசனம் செய்தார். மேலும், புதுச்சேரியில் ரேஷன் கடைகள் விரைவில் திறக்கப்படும் எனத் தெரிவித்தார்.

News June 23, 2024

நேரில் சென்று ஆறுதல் தெரிவித்த கமல்

image

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த சம்பவம் தமிழகத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களை நடிகர் கமல் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்துள்ளார். இதுவரை 57 உயிரிழந்துள்ள நிலையில், 100க்கும் மேற்பட்டோர் சேலம், விழுப்புரம், புதுச்சேரி மருத்துமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், 20 பேர் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News June 23, 2024

கிருஷ்ணகிரி மாணவிகளுக்கு முக்கிய அறிவிப்பு

image

கிருஷ்ணகிரி அரசு மகளிர் கல்லூரியில் 2024 – 2025ஆம் ஆண்டில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு வருகிற 25 மற்றும் 26 ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. இதில் கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், உயிர்வேதியியல், புள்ளியியல், கணினி அறிவியல் உள்ளிட்ட அனைத்து பாடப்பிரிவுகளுக்கு விண்ணப்பித்தவர்கள் கலந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

News June 23, 2024

விருது பெற்ற சிவகாசி தன்னார்வலர்

image

கண் தானம் வழங்குவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி இதுவரை 4500-க்கும் மேற்பட்டோரிடம் கண்தானம் பெற்று சுமார் 16 ஆயிரம் பேருக்கு பார்வை கிடைக்கச் செய்த சிவகாசியை சேர்ந்த கண்தானம் கணேசன் சமூக சேவைக்கு பாராட்டு குவிந்து வருகிறது. இந்நிலையில் இவரது சேவையை பாராட்டி சென்னையில் நேற்று நடிகர் பாக்கியராஜ் தன்னலமற்ற அர்ப்பணிப்பிற்கான அகரம் 2024 விருது வழங்கி கண்தானம் கணேசனை பாராட்டினார்.

News June 23, 2024

அமைச்சர் பதவி விலக வேண்டும்: எல்.முருகன்

image

அமைச்சர் முத்துசாமி உடனடியாக பதவி விலகுவதன் மூலம் தான் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாத்தை கொடுக்க முடியும் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த அவர், “மரக்காணத்தில் நடந்த கள்ளச்சாராய மரணங்களைப் போல, இதுவும் நீர்த்துப்போய்விடக் கூடாது. விசாரணை ஆணையம் அமைத்துவிட்டோம் என்பதோடு இல்லாமல், தமிழ்நாடு முழுவதும் கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த வேண்டும்” எனக் கூறினார்.

News June 23, 2024

தேனி மாவட்ட ஆசிரியர்கள், பேராசிரியர்கள் கவனத்திற்கு

image

தேனி மாவட்டத்தில் அனைத்து பள்ளி, கல்லூரிகள் மற்றும் விடுதிகள் அருகில் இயங்கி வரும் கடைகள் மற்றும் பெட்டிக்கடைகளில் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை செய்வது தெரிய வந்தால் அந்தந்த பள்ளி ஆசிரியர்கள், கல்லூரி முதல்வர்கள், விடுதி காப்பாளர்கள் உடனே காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் இதனை உடனடியாக ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என தேனி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News June 23, 2024

திருப்பத்தூர்: நகராட்சி சார்பில் 2.0 தூய்மை பணி

image

திருப்பத்தூர் நகராட்சி சார்பில் நகரத்தை தூய்மையாக வைக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தூய்மை இந்தியா 2.0 திட்டத்தின் கீழ் திருப்பத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளான சிவராஜ் பேட்டை, சக்தி நகர், கலைஞர் நகர் ,அண்ணா நகர் ஆகிய பகுதிகளில் நகராட்சி ஊழியர்கள் இன்று தூய்மை பணியில் ஈடுபட்டனர். இந்த நிகழ்வின் போது நகராட்சி ஊழியர்கள் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

News June 23, 2024

ஆர்பாட்டம் நடந்த நீதிமன்றத்தில் மனு

image

கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் மரணம் தொடர்பாக மாநில அரசை கண்டித்து விருதுநகரில் நாளை அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரி மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதிமுக வழக்கறிஞர் பிரிவை சேர்ந்த வழக்கறிஞர் மாரீஸ் குமார் தாக்கல் செய்த அவசர வழக்காக விசாரிக்க கோரிய மனு நாளை முதல் வழக்காக விசாரிக்கப்பட உள்ளது.

error: Content is protected !!