Tamilnadu

News June 25, 2024

புதுக்கோட்டையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

image

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் மக்கள்குறை
தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று(ஜூன் 24) மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா தலைமையில் நடைபெற்றது. இதில் 13 ஒன்றியங்களில், பொதுமக்களிடமிருந்து 629 கோரிக்கை மனுக்கள் வரப்பெற்றன. பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆர்.ரம்யா தேவி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உலகநாதன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

News June 25, 2024

நாமக்கல்லில் ‘வந்தே பாரத்’ ரயில் நின்று செல்லும்

image

மதுரை – பெங்களூரு இடையே இயக்கப்படும் ‘வந்தே பாரத்’ ரயில் நாமக்கல்லில் நாளை(ஜூன் 26) முதல் நின்று செல்லும் என ரயில்வே துறை அறிவித்துள்ளது. 100 கி.மீ. வேகத்தில் செல்லும் வந்தே பாரத் ரயில் நாமக்கல்லில் நின்று செல்லும் என்ற அறிவிப்பால் பொதுமக்கள், தொழில்முனைவோா்கள் , இளைஞா்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

News June 25, 2024

நிலத்தை ஆக்கிரமித்த ஈசா நிறுவனம்

image

கோவை செம்மேடு பகுதியை சேர்ந்தவர் முத்துசாமி இவரது மகள் விஜயகுமாரி. இவர் நேற்று (ஜுன்.24) கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தார். அதில், எனது தந்தை பொதுமக்களுக்காக 43 ஏக்கர் நிலத்தை இலவசமாக வழங்கினார். அந்த இடத்தை ஈசா யோகா மையத்தினர் தற்போது ஆக்கிரமிப்பு செய்து பொதுமக்களை விரட்டி அடித்து வருகின்றனர். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு அளித்தார்.

News June 25, 2024

செங்கல்பட்டு: ஐ.டி. ஊழிர் கொலை

image

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் பகுதியை சேர்ந்த விக்னேஷ் (27) சென்னை ஐ.டி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். தனது நண்பர்களுடன் மது அருந்தும் போது மது போதையில் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, அவரது நண்பர்கள் விக்னேஷை கத்தியால் தலையில் வெட்டி படுகொலை செய்து பள்ளம் தோண்டி புதைத்துள்ளனர். இச்சம்பவம் செங்கல்பட்டு மாவட்டத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. 

News June 25, 2024

தன்னார்வலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்

image

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், உலக குருதி கொடையாளர் தினத்தினை முன்னிட்டு நடைபெற்ற ரத்ததான முகாமில் உயிர்காக்கும் பொருட்டு தன்னார்வலராக ரத்த தானம் செய்த நபர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் நினைவு பதக்கங்களையும் மாவட்ட ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்ண இன்று (24.06.2024) வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலந்து கொண்டார்

News June 25, 2024

தூய்மை பணியாளருக்கு நிதி உதவி வழங்கிய மாவட்ட ஆட்சியர்…

image

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் தாட்கோ மூலம் தூய்மை பணியாளர் திருமதி. செல்வி அவர்கள் இயற்கை மரணம் அடைந்ததையடுத்து ஈமச்சடங்கு உதவி தொகைக்கான காசோலையினை மாவட்ட ஆட்சித்தலைவர்,திரு. ஜானி டாம் வர்கீஸ், அவர்கள் வழங்கினார்.

News June 24, 2024

கடலூர் மாவட்டத்தில் ரோந்து போலீசார் முழு விவரம்

image

கடலூர் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ள போலீசார் விவரம் வெளியிடப்பட்டது. அதன்படி கடலூரில் சப்-இன்ஸ்பெக்டர்கள் கவியரசன், மணிவண்ணன், சிதம்பரத்தில் இன்ஸ்பெக்டர் சுஜாதா, சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், விருத்தாசலத்தில் சப்-இன்ஸ்பெக்டர்கள் அய்யனார், ராமலிங்கம், நெய்வேலியில் இன்ஸ்பெக்டர் சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் தனசீலன் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.

News June 24, 2024

பாமக வேட்பாளரை ஆதரித்து அன்புமணி ராமதாஸ் பிரச்சாரம்

image

விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் அன்புமணியை ஆதரித்து ராதாபுரத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் பரப்பரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர் திமுக வெற்றி பெற்றால் அந்த வேட்பாளருக்கு தான் நன்மை. ஆனால் பாமக வெற்றி பெற்றால் சமூகத்திற்கு நன்மை என்று பேசினார்.

News June 24, 2024

தூத்துக்குடியில் 37 கடைகளுக்கு சீல்

image

மே மற்றும் ஜூன் மாதங்களில் தூத்துக்குடி மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட புகையிலை கலந்த உணவுப் பொருட்களை விற்பனை செய்த 37 கடைகள் மூடி சீல் வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் 21 கடைகளுக்கு ரூ.6,85,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. காவல் துறையும், உணவு பாதுகாப்புத் துறையும் இணைந்து அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

News June 24, 2024

மகாராஜா படத்தின் கதை திருடப்பட்டதாக குற்றச்சாட்டு

image

தமிழகம் எங்கும் திரையரங்குகளில் வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மகாராஜா திரைப்படம் கதை திருடப்பட்டதாக திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த நாகன் என்ற மருதமுத்து என்பவர் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து விரைவில் சட்டபூர்வ நடவடிக்கை எடுப்பதாகவும் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார். 

error: Content is protected !!