India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. வழக்கத்தை விட நேற்று அதிகளவில் பொதுமக்கள் கூட்டம் காணப்பட்டது. நேற்று மட்டும் பொதுமக்கள் சார்பில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 922 மனுக்கள் மாவட்ட ஆட்சியரிடம் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் சுவாமிநாதன் மானிய கோரிக்கையில் துறையின் கொள்கை விளக்க குறிப்புகள் மன்றத்திற்கு வழங்கி பதில் உரையாற்றினர். அதற்கு முன்பாக அமைச்சரை திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் தங்கராஜ் நேரில் சால்வை அணிவித்து நேற்று வாழ்த்துகளை தெரிவித்தனர்.
திருச்செந்தூர் முருகன் கோவில் வளாகத்தில் பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த குழுவினர் பாரம்பரிய வள்ளி கும்மி நடனமாடி தரிசனம் செய்தனர். இதனை முன்னிட்டு சுமார் 150 பேர் கொண்ட குழுவினர் பாடலுக்கு நடனம் ஆடினர். இதனை திரளான மக்கள் கண்டு களித்தனர். தொடர்ந்து அவர்கள் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தனர்.
கும்மிடிப்பூண்டி, எளாவூர் அதிநவீன சோதனைச்சாவடி அருகே இன்று போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, பீகாரில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற எத்தனாலை போலீசார் பறிமுதல் செய்தனர். விசாகப்பட்டினம் மார்க்கமாக சென்னை எண்ணூருக்கு கொண்டு சென்று, அங்கிருந்து கேரளாவுக்கு கடத்தி செல்லப்பட இருந்த 110 எத்தனால் கேன்களை ரோந்து வாகன உதவி ஆய்வாளர் தலைமையிலான போலீசார் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தி.நகர் ராமசாமி தெருவில், தங்கம் மற்றும் வைர நகைகளைச் செய்து ஜூவல்லரிகளுக்கு சப்ளை செய்யும் நிறுவனம் நடத்தி வருபவர் கவுதம் சந்த போத்ரா. இவர், நிறுவனத்தின் கணக்கை ஆய்வு செய்தபோது ரூ.93,00,000 மதிப்பிலான 1,240 கிராம் தங்கம், ரூ.91,00,000 மதிப்பிலான 140 காரட் வைர நகைகள் மோசடி நடந்திருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக நிறுவனத்தில் வேலை செய்த 8 பேர் மீது பாண்டி பஜார் போலீசில் நேற்று புகார் செய்தார்.
நெல்லையில் மார்க். கம்யூனிஸ்ட் அலுவலகம் மீது நடந்த தாக்குதல் சம்பவம் குறித்து சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார். சாதி மறுப்பு திருமணம் செய்து வைத்ததற்காக கட்சி அலுவலகம் மீது தாக்குதலில் ஈடுபட்டோர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தவர், இதுபோன்ற பிற்போக்குத்தனமான குற்றங்களுக்கு எதிராக நடவடிக்கைக்கள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
விழுப்புரத்தில் TNPSC குரூப்-2 முதல்நிலை தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு, நாளை (ஜூன் 26) முதல் தொடங்குகிறது. இந்த பயிற்சி வகுப்பில், ஒவ்வொரு வாரமும் பாடவாரியான தேர்வுகளும் மற்றும் முழு மாதிரி தேர்வுகளும் நடத்தப்படும். இதில், பங்கேற்க விரும்புவோர் இன்றைக்குள் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் அணுகி முன்பதிவு செய்துகொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
ஆரணி அருகே உள்ள செங்கல் சூளையில் சேத்துப்பட்டு நமத்தோடு கிராமத்தை சேர்ந்த பச்சையப்பன் (35), கலையரசி (29) தம்பதி குழந்தைகளுடன் வேலைசெய்து வந்தனர். நேற்று அதிகாலை செங்கல்சூளை அருகே பச்சையப்பன், கலையரசி மர்மமான முறையில் இறந்து கிடந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆரணி போலீசார் நேரில் சென்று உடலை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
நெல்லையப்பர் – காந்திமதி அம்மன் திருக்கோயிலில் கடந்த 13 ஆம் தேதி ஆனித் திருவிழா கொடியேற்றுத்துடன் தொடங்கி 10 நாள் கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழா நிறைவு பெற்றதை அடுத்து நேற்று(ஜூன் 24) சுவாமி நெல்லையப்பர், அன்னை காந்திமதி அம்பாளுக்கு ஏற்பட்டுள்ள அசதியைப் போக்கும் சிறப்பு கலச வேலி பூஜை நடந்தது. 108 கலசங்கள் வைத்து வேள்வி நடத்தப்பட்டு பின்னர் சிறப்பு அபிஷேகம் தீபாராதனை நடந்தது.
பரமக்குடி எமனேஸ்வரத்தைச் சேர்ந்தவர் மேகலா (25). இவருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ள நிலையில் 2வது கணவர் மணிகண்டன் போதையில் ஜூன் 23ல் கொலை செய்தார். இந்நிலையில் நேற்று எமனேஸ்வரம் சவுராஷ்டிரா சபை, அதிமுக, திமுக, பாஜக, விசிக, காங், மக்கள் நீதி மய்யம், சிபிஎம், சிபிஐ, ஓபிஎஸ் அணி, இந்து முன்னணி உட்பட அனைத்து கட்சியினர் கலந்துகொண்டு 2 குழந்தைகளுக்கு அரசு நிவாரணம் வழங்குமாறு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
Sorry, no posts matched your criteria.