Tamilnadu

News July 2, 2024

ராணிப்பேட்டை: போதைப்பொருள் தடுப்பு ஆய்வுக் கூட்டம்

image

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் போதைப்பொருள் தடுப்பு மற்றும் தீவிர கண்காணிப்பு குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் வளர்மதி தலைமையில் நேற்று நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் ஸ்ருதி, கலால் உதவி ஆணையாளர் வரதராஜன், துணை காவல் கண்காணிப்பாளர் பிரபு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

News July 2, 2024

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், “2024-2025 ஆம் ஆண்டிற்கு காரீப் பருவத்தில் பயிர் காப்பீடு அறிவிக்கை செய்யப்பட்ட பகுதிகளில் சாகுபடி செய்த நெல்(சொர்ணவாரி)-Iமற்றும் கம்பு பயிருக்கு விவசாயிகள் காப்பீடு செய்யலாம். மேலும், நெல்(சொர்ணவாரி)-I பயிருக்கு 31.07.2024 மற்றும் கம்பு பயிருக்கு 16.08.2024-ம் தேதி வரையில் பயிருக்கு காப்பீடு செய்யலாம்” என குறிப்பிட்டுள்ளார்.

News July 2, 2024

ஊர்க்காவல் படை வீரர்கள் தேர்வு முடிவுகள் வெளியீடு

image

புதுவை ஊர்காவல் படை வீரர்கள் தேர்வுகள் முடிவுகள் நேற்று நள்ளிரவு வெளியிடப்பட்டது. இதில் காரைக்கால் சுந்தரேசன் 87.50 மதிப்பெண் பெற்று முதலிடத்தையும், காரைக்கால் சூரியா, புதுவை ரமணா தலா 86.50 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடத்தையும், 86.25 மதிப்பெண்கள் பெற்று புதுவை கமலக்கண்ணன் 3வது இடத்தையும் பிடித்தனர். மேலும் காத்திருப்போர் பட்டியலும் புதுவை அரசு இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

News July 2, 2024

மதுரையில் இன்று மின்தடை

image

மதுரையில் இன்று (ஜூலை 2) பல்வேறு இடங்களில் மின் விநியோகம் இருக்காது என அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, ஆனையூர், அனுப்பானடி, எல்லிஸ் நகர், இலந்தைக்குளம், தெப்பம் உள்ளிட்ட துணை மின் நிலையங்களில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படும் என்றும், இந்த நேரம் நீட்டிக்கப்படவும் வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 2, 2024

சிட்கோ அமைக்க எதிர்ப்பு – போராட்டம்

image

பழனியை அடுத்த பூலாம்பட்டியில் வெடிக்காரன்வலசு அரளிக்குத்து குளத்தில் சிட்கோ அமைப்பதற்கு நேற்று பூலாம்பட்டி பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கீரனூர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட நுாற்றுக்கணக்கானோரை கைது செய்து தொப்பம்பட்டி தனியாா் திருமண மண்டபத்தில் அடைத்தனா். கைது செய்யப்பட்ட அனைவரும் மாலையில் விடுதலை செய்யப்பட்டனா்.

News July 2, 2024

நிவாரணம் வழங்கிய செங்கல்பட்டு ஆட்சியர் 

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் நீரில் மூழ்கி உயிரிழந்த 3 பேரின் குடும்பங்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண தொகையாக தலா ரூ.1,00,000 க்கான காசோலையினை ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் நேற்று (ஜூலை 1) வழங்கினார். உடன் சார் ஆட்சியர் நாராயண சர்மா, மாவட்ட வழங்கல் அலுவலர் தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) (பொறுப்பு) சாகிதா பர்வீன் உடன் இருந்தார்.

News July 2, 2024

ஜூன் மாதத்தில் 84.33 லட்சம் பேர் பயணம்

image

கடந்த ஜூன் மாதத்தில் 84.33 லட்சம் பேர் மெட்ரோ ரயிலில் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்த அறிக்கையில், கியு.ஆர். கோடு மூலம் 37,05,316 பேர், பயண அட்டைகள் மூலம் 31,33,011 பேர், டோக்கன் மூலம் 30,752 பேர் மற்றும் சிங்கார சென்னை அட்டை மூலம் 15,61,001 பேர் மெட்ரோவில் பயணம் செய்துள்ளனர். மேலும், நம்பக தன்மையான மற்றும் பாதுகாப்பான பயணத்தை வழங்கி வருவதாகத் தெரிவித்துள்ளது.

News July 2, 2024

“மத்திய அரசின் மெத்தனமே மீனவர்கள் கைதுக்கு காரணம்”

image

ராமேஸ்வரம் மாவட்டம் தனுஷ்கோடியில் இருந்து கடலில் மீன் பிடிக்க சென்ற தமிழக மீனவர்கள் 25 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இது குறித்து எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் நேற்று(ஜூலை 1) கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், தமிழக மீனவர்களை பாதுகாக்கும் நடவடிக்கையில் ஒன்றிய அரசின் மெத்தனப் போக்கே தமிழக மீனவர்கள் கைதுக்கு காரணம் என குற்றம் சாட்டியுள்ளார்.

News July 2, 2024

அண்ணாமலையார் கோவிலில் பிரமோற்சவ விழா அறிவிப்பு

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்ரீ அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலை அம்மன் கோவிலில் ஆனி பிரமோற்சவ விழா வரும் 7 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும், இதில் பக்தர்கள் அனைவரும் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்யுமாறும் தெரிவிக்கபட்டுள்ளது.

News July 2, 2024

கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை

image

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கூட்டுறவுத்துறையின் சார்பில், கருணை அடிப்படையில் பயனாளி ஒருவருக்கு பணி நியமன ஆணையினை சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா வழங்கினார். இதில் வருவாய் அலுவலர் மோகனச்சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!