Tamilnadu

News August 19, 2025

விருதுநகரில் அரசு வேலை; இன்றே கடைசி நாள்

image

விருதுநகர் மாவட்ட வருவாய்த்துறையில் 38 (Village Assistant) கிராம உதவியாளர் பதவிக்கான 37 காலியிடங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். <>APPLY <<>>இதற்கு விண்ணபிக்க கடைசி நாள் 19-08-2025. 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற தகுதியான நபர்களுக்கு ரூ.11,100 முதல் ரூ.35,100 வரை சம்பளம் வழங்கப்படும். *நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்

News August 19, 2025

கடலூர்: பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு அறிவிப்பு

image

பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு வரும் செப்.2 அன்று பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி கடலூர் ஒன்றிய ஆசிரியர் கல்வி நிறுவனத்தில் நடைபெறவுள்ளது. இதற்கு பள்ளி மாணவர்கள் தலைமை ஆசிரியர்கள் மூலமாகவோ, கல்லூரி மாணவர்கள் முதல்வர்கள் மூலமாகவோ அல்லது tdadcuddalore@gmail.com என்ற மின்னஞ்சலில் நேரடியாகவோ விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். SHARE NOW!!

News August 19, 2025

யூரியா உரத்தினை பதுக்கினால் கடுமையான நடவடிக்கை!

image

நாமக்கல் மாவட்டத்தில் யூரியா உரத்தினை பதுக்கினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும், என நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் துர்காமூர்த்தி எச்சரிக்கை விடுத்துள்ளார். உரத்துடன் மற்ற இணை பொருட்களான நுண்சத்துகள், உயிர்ம ஊக்கிகள் உள்ளிட்ட பொருட்களை வாங்க கட்டாயப்படுத்த கூடாது. மீறினால் உரக் கட்டுப்பாட்டு ஆணை-1985-ன் படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

News August 19, 2025

திண்டுக்கலில் நாளை ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

image

திண்டுக்கல் மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ மக்கள் குறைதீர்க்கும் முகாம் நாளை (ஆகஸ்ட் 19) நடைபெறுகிறது. பழனி பெருநகராட்சியின் 10, 11, 12 வார்டுகளுக்காக, ராஜாஜி சாலையில் உள்ள நகராட்சி சமுதாய கூடத்தில் முகாம் நடைபெறவுள்ளது. பொதுமக்கள் இதில் பங்கேற்று பயனடையலாம். திண்டுக்கல் மாநகராட்சி, அகரம் பேரூராட்சி, வத்தலக்குண்டு, ஆத்தூர் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்தலாம்.

News August 19, 2025

கள்ளக்குறிச்சி ஆட்சியர் புதிய அறிவிப்பு

image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் புதிய அறிவிப்பு விடுத்துள்ளார். அதன்படி விநாயகர் சதுர்த்தி விழாவினை சுற்றுச் சூழலை பாதிக்காதவாறு பொதுமக்கள் கொண்டாடிட வேண்டும், விநாயகர் சதுர்த்தி விழாவில் 1முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் தர்மாகோல் பொருட்களை பயன்படுத்தக் கூடாது, அனுமதி இல்லாத நீர்நிலைகளில் சிலைகளை கரைக்கக்கூடாது உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை ஆட்சியர் பிரசாந்த் நேற்று வெளியிட்டுள்ளார்.

News August 19, 2025

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள்

image

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி ஆகஸ்ட் 19ஆம் தேதி கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் விவரம் வருமாறு காலை 9.30 மணிக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கிடங்கு மாதாந்திர ஆய்வு கூட்டம் 10 மணிக்கு தேர்தல்கள் தொடர்பான அனைத்து கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. இதனை அடுத்து நாமக்கல்லில் உள்ள தனியார் ஓட்டுநர் இலவச பயிற்சி மையத்தில் வெற்றி நிச்சயம் திட்டம் குறித்து ஆய்வு ஆகிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளார்

News August 19, 2025

திருப்பூர்: பெண்ணிடம் ஆபாச சைகை காட்டிய நபர் கைது

image

திருப்பூர் மத்திய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருநகர் பகுதியில் பெண் ஒருவர் மொட்டை மாடியில் துணி துவைக்க சென்றுள்ளார். அப்போது பெரியசாமி என்பவர் ஆடை இல்லாமல் அப்பெண்ணின் எதிரே நின்று ஆபாசமான சைகையை காட்டி உள்ளார். இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த மத்திய போலீசார் பெரியசாமி என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

News August 19, 2025

நீலகிரி: மசினகுடி சாலையில் பள்ளத்தில் கவிழ்ந்த கார்

image

நீலகிரி மாவட்டம் மசினகுடி அருகே கூடலூர் மைசூர் தேசிய நெடுஞ்சாலை கார்குடி பகுதியில் ஒரு கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை மீறி எதிரில் இருந்த ரிவைடர் கம்பியை உடைத்துக் கொண்டு பள்ளத்தில் கவிழ்த்து விபத்துக்குள்ளானது. வாகன ஓட்டுனருக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படுவதில்லை மேலும் பொக்லின் இயந்திரம் மூலம் வாகனத்தில் மீட்கப்பட்டதால் சிறிது நேரம் மைசூர் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

News August 19, 2025

வேளாங்கண்ணி திருவிழா சிறப்பு ரயில்கள்

image

வேளாங்கண்ணி திருவிழாவையொட்டி, ஆக.28 முதல் செப்டம்பர் 12 வரை சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. 06037 எழும்பூர்–வேளாங்கண்ணி ரயில் ஆகஸ்ட் 28, செப்டம்பர் 4, 11 ஆகிய தேதிகளிலும், 06038 வேளாங்கண்ணி–தாம்பரம் ரயில் ஆகஸ்ட் 29, செப்டம்பர் 5, 12 ஆகிய தேதிகளிலும் இயக்கப்படும். இந்த ரயில்கள் தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், சிதம்பரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் போன்ற முக்கிய நிலையங்களில் நின்று செல்லும்.

News August 19, 2025

கடலூர் இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

image

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று (18/08/2025) இரவு கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட, சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் ரோந்து செல்லும் காவல் அதிகாரிகள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கு இதனை ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!