Tamilnadu

News July 2, 2024

மக்கள் குறைதீர்க்கும் முகாமில் 381 மனுக்கள்

image

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் மாவட்ட ஆட்சியர் பி.என். ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்றது. இந்த குறைதீர்க்கும் முகாமில் கல்வி உதவித்தொகை,
பட்டா பெயர் மாற்றம், மாற்றுத்திறனாளிகளின் உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை என 381 மனுக்கள் பொதுமக்களிடம் பெறப்பட்டதாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 2, 2024

ராணிப்பேட்டை: குடிநீர் பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு

image

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடிநீர் திட்ட பணிகள் மற்றும் வளர்ச்சி திட்ட பணிகள் முன்னேற்றம் குறித்த ஆய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. ஆட்சியர் வளர்மதி பேசுகையில், குடிநீர் திட்ட பணிகள் 2023-24-ம் நிதி ஆண்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டு நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றார். கூட்டத்தில் திட்ட இயக்குநர் லோகநாயகி உதவி இயக்குனர் சுதா கலந்து கொண்டனர்

News July 2, 2024

இந்து முன்னணி திருவாரூர் மாவட்ட செயலாளர் கைது

image

திருத்துறைப்பூண்டி தாலுகா, முத்துப்பேட்டை அருகே உள்ள கீழக்காடு கிராமத்தை சேர்ந்த நாடிமுத்து, இந்து முன்னணி திருவாரூர் மாவட்ட செயலாளராக உள்ளார். இவர் தனது முகநூல் பக்கத்தில் தொடர்ந்து மத ரீதியான கருத்துகளையும், இந்து மற்றும் முஸ்லீம்களின் ஒற்றுமையை குலைக்கும் வகையிலும் கருத்துகளை வெளியிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் நேற்று(ஜூலை 1) போலீசார் அவரை கைது சிறையில் அடைத்தனர்.

News July 2, 2024

கடலூர்: மாணவர்களுக்கான சிறப்பு முகாம்

image

கடலூர் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் கணேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “கடலூர் அஞ்சல் கோட்டத்திற்குட்பட்ட அனைத்து அஞ்சலகங்களிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகையை பெறுவதற்கு வசதியாக மாணவர்கள் படிக்கும் பள்ளிகளுக்கு நேரடியாக சென்று புதிய சேமிப்பு கணக்கு தொடங்க சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News July 2, 2024

திண்டுக்கல்: முதலிடம் பிடித்த பழனி

image

தூய்மையான மருத்துவமனைக்கு ஆண்டு தோறும் ‘காயகல்ப்’ விருது வழங்கப்படுகிறது. இது தொடர்பாக தமிழகத்தில் உள்ள உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்பம் மற்றும் வட்டார சுகாதார நிலையங்களில் தேசிய சுகாதாரத் திட்டக் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். இதில் 2023-24ம் ஆண்டுக்கான ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில், பழனி நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையம் 99.5% மதிப்பெண்கள் பெற்று மாநிலத்திலேயே முதலிடம் பெற்றுள்ளது.

News July 2, 2024

14ஆம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டு

image

குளத்தூா் அருகே பெரம்பூா் கிராமத்தில் 14-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த கொடை அளித்ததற்கான இரண்டு கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.பெரம்பூா் ரமேஷ் என்பவரின் தோட்டத்தில் கல்வெட்டுப் பலகை ஒன்று இருப்பதாக பிரணவ காா்த்திக் என்பவா் அளித்த தகவலின்பேரில், தொல்லியல் ஆய்வாளா் முத்தழகன் தலைமையில் தொல்லியல் ஆா்வலா்கள் முருகபிரசாத், நாராயண மூா்த்தி, ராகுல் பிரசாத் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

News July 2, 2024

பெரம்பலூர் கலெக்டர் அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ஜூன் மாதத்திற்கான பாமாயில் மற்றும் துவரம் பருப்பு வழங்கப்படவில்லை. இதனால், இல்லத்தரசிகள் மிகவும் சிரமத்திற்குள்ளாகினர். இந்நிலையில், குடும்ப அட்டைதாரர்கள் ரேஷன் கடைகளில் இருப்பு பெறப்பட்டவுடன் ஜூன் மாதத்திற்கான பாமாயில், துவரம்பருப்பினை ஜூலை மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் கற்பகம் அறிவித்துள்ளார்.

News July 2, 2024

ராமநாதபுரம் மீனவர்கள் போராட்டம்

image

பாம்பன், நம்புதாளையில் இருந்து சென்ற 25 நாட்டுப்படகு மீனவர்களை நேற்று இலங்கை கடற்படை கைது செய்தது. இந்நிலையில், 25 மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும், படகுகளையும் மீட்க நடவடிக்கை எடுக்காவிடில் 5ஆம் தேதி பாம்பன் பாலம் முற்றுகையிட இருப்பதாக அறிவித்துள்ளனர்.

News July 2, 2024

ஓசூர் ஐடிஐயில் மாணவர் சேர்க்கை ஆட்சியர் அறிவிப்பு

image

கிருஷ்ணகிரி ஆட்சியர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ஒசூா் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பின்னலாடை, தையல் இயந்திரம் இயக்குதல் தொடா்பான பயிற்சி வகுப்புக்கு நேரடி மாணவர் சோ்க்கை நாளை தொடங்குகிறது. இதற்கு 8 ஆம் வகுப்புத் தோ்ச்சி பெற்ற 18 – 40 வயதுக்குட்பட்ட இருபாலரும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் மற்றும் சேர்க்கை கட்டணம் முறையே ரூ.50, ரூ.100 ஆகும்” எனத் தெரிவித்துள்ளார்.

News July 2, 2024

அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடி மாணவர் சேர்க்கை

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் புதிதாக தொடங்கியுள்ள ஒரகடம் பகுதியில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்திற்கு 100% சேர்க்கை மேற்கொள்ளும் பொருட்டு 15.07.2024 வரை நேரடி மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. பயிற்சியில் சேர விரும்பும் மாணவர்கள் உரிய சான்றிதழ்களுடன் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், ஒரகடம், சேர்க்கை உதவி மையத்தினை அணுகவும். அரசு ஒதுக்கீட்டில் சேர்க்கை நடைபெறும் எனவும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!