India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று.8ஆம் தேதி நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர் தலைமை வகித்தார். அப்போது மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் வீரகேரளம்புதூரை சேர்ந்த பெண் ஒருவருக்கு இலவச வீட்டுமனை பட்டா ஆகியவற்றை மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் பயனாளிகளுக்கு வழங்கினார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் வசிக்கும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினைச் சார்ந்த தனிநபர்கள் மற்றும் குழுக்களுக்கு தொழில் தொடங்க கடன் உதவி வழங்கப்பட உள்ளது. ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பங்களைப் பெற்று உரிய ஆவணங்களுடன் சமர்ப்பித்து பயன்பெறுமாறு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்
கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் ஜீலை 11 ஆம் நாளை உலக மக்கள் தொகை நாளாக ஐக்கிய நாடுகள் சபை மூலம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு ஜீலை 11ஆம் தேதி உலக
மக்கள் தொகை தினம் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, திருவாரூர்
மாவட்டத்தில் மக்கள் தொகை விழிப்புணர்வு பேரணி, தாய்மார்கள் குழுக்கூட்டம் மற்றும் மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கத்தில் மாவட்ட ஆட்சியர் சஜீவனா தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் இன்று (ஜூலை 8) நடைபெற்றது. இதில் தேனி, பெரியகுளம், ஆண்டிபட்டி, போடி, சின்னமனூர், உத்தமபாளையம் உள்ளிட்ட பகுதியிலிருந்து கலந்து கொண்ட பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மற்றும் பிரச்சனைகள் தொடர்பாக மனு அளித்தனர். இதில் இன்று 442 கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் பெற்றுக் கொண்டார்.
மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று(ஜூலை 8) மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபுசங்கர் தலைமையில் மாதாந்திர பொது விநியோகத் திட்ட ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளுக்கு பொருட்கள் விநியோகம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில், மாவட்ட வருவாய் அலுவலர் இராஜ்குமார், உதவி ஆட்சியர் (பயிற்சி) ஆயுஷ் குப்தா, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணை பதிவாளர் சண்முகவள்ளி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தேனி மாவட்டம் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பாக வருகின்ற ஜூலை 9ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை தொழில்நெறி விழிப்புணர்வு மற்றும் திறன் வாரம் கொண்டாடப்பட உள்ளது. வேலை தேடும் இளைஞர்கள் ஆண்டிபட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெறும் தொழில்நெறி வழிகாட்டுதல் மற்றும் திறன் பயிற்சியில் கலந்து கொண்டு பயனடையலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.
நெல்லை, மாஞ்சோலை விவகாரத்தில் தேயிலை தோட்ட தொழிலாளர்களை வெளியேற்ற தடை நீட்டிப்பு செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை இன்று (ஜூலை 8) உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் தொழிலாளர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்ற எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது. மாஞ்சோலை விவாகரத்தில் தனது நிலைப்பாடு என்ன என்பது குறித்து தமிழ்நாடு அரசு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை அரசு இசைக்கல்லூரியில் ஜூலை 12ஆம் தேதி முதல் பகுதிநேர நாட்டுப்புற கலைப்பயிற்சி துவங்க உள்ளதாக கலெக்டர் சங்கீதா தெரிவித்துள்ளார். இதற்கு 17வயது முதல் விண்ணப்பிக்கலாம். இதற்கு ஆண்டுக்கு ரூ.500 கட்டணத்தில் தமிழர் பாரம்பரிய கலையான இசை, நாடகம், கரகாட்டம், மரக்காலாட்டம் மற்றும் பறையாட்டம் ஆகிய கலைகள் கற்றுக்கொடுக்கப்படும். மேலும், விவரங்களுக்கு 95667-18704 என்ற எண்ணை அழைக்கலாம்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் வரும் 13.07.2024 (சனிக்கிழமை) அன்று காலை 10.00 மணிக்கு, காஞ்சிபுரம் வட்டத்தில் காரை, உத்திரமேரூர் வட்டத்தில் காவித்தண்டலம் , வாலாஜாபாத் வட்டத்தில் சங்கராபுரம், திருப்பெரும்புதூர் வட்டத்தில் பிச்சிவாக்கம், குன்றத்தூர் வட்டத்தில் பூந்தண்டலம் ஆகிய கிராமங்களில் பொது விநியோகத்திட்ட குறைதீர் முகாம்கள் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் அறிவித்துள்ளார்.
கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜை கடலூர் மாவட்ட அனைத்து குடியிருப்போர் நல சங்கத்தினர் நேரில் சென்று சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில் கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நகராட்சி, ஊராட்சி, மாநகராட்சிகளில் சிதிலமடைந்து போன குடிநீர் குழாயை அகற்றிவிட்டு, புதிய பரிசோதிக்கப்பட்ட பாதுகாப்பான குழாய் அமைத்து மக்களுக்கு குடிநீர் வழங்க வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர்.
Sorry, no posts matched your criteria.