Tamilnadu

News August 18, 2025

கோவை ஏர்போர்டில் கடத்தல் பொருட்கள் பறிமுதல்!

image

கோவை விமான நிலையத்தில் இன்று ஏர் அரேபியா விமானத்தில் ஷார்ஜாவிலிருந்து வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது, ரூ.37.09 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட் பண்டல்கள், 10 ட்ரோன்கள், 36 மைக்ரோபோன்களை பறிமுதல் செய்து அப்துல் ரஹீம், சையது சிராஜுதீன், ஜெய்னுலாபுதீன், முகமது சித்திக், முகமது அப்சல் உள்ளிட்ட ஐவரை கைது செய்து அவர்களிடம் மேற்கொண்டு வருகின்றனர்.

News August 18, 2025

புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டு

image

புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதுச்சேரிப் பகுதிகளில் குடிநீர் பாதுகாப்பு இல்லாத நிலையில் மக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. அமிலத்தன்மை மற்றும் நுவர்ப்பு தன்மை அதிகமாக குடிநீரில் இருக்கின்ற காரணத்தால், அந்த தண்ணீரை குடித்துவிட்டு மக்களுக்கு சிறுநீரகத்தில் பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் உயிருக்கே ஆபத்து ஏற்படும்.” என்று குற்றம் சாட்டியுள்ளார்.

News August 18, 2025

பெரம்பலூர்: வெளிநாட்டில் இருந்து வந்தவர் சாலை விபத்தில் பலி

image

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே பரவாய் கிராமத்தைச் சேர்ந்த ராஜமாணிக்கம் (55), வெளிநாட்டில் இருந்து 10 நாட்களுக்கு முன்பு சொந்த ஊர் திரும்பியிருந்தார். வேப்பூரில் பொருட்கள் வாங்கிவிட்டு மொபட்டில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் அவர் உயிரிழந்தார். இது குறித்து குன்னம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News August 18, 2025

பாதுகாப்பான பயணங்களை மேற்கொள்ள அறிவுறுத்தல்

image

அரியலூர் மாவட்டம் காவல்துறை சார்பில் வாகன ஓட்டிகள் சாலையில் பொது மக்களுக்கு இடையூறு மற்றும் விபத்து ஏற்படுத்தும் வண்ணம் வாகனங்களை இயக்குவது, அதிவேகமாக ஓட்டுவது, பொது சாலையில் சாகசம் செய்வது முதலியவை போக்குவரத்து விதிமீறல் மற்றும் குற்றமாகும் எனவும், இத்தகைய செயலில் ஈடுபடுபவர்கள் வாகனங்கள் கைப்பற்றப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News August 18, 2025

திருப்பூர் பின்னலாடை துறைக்கு அபாயம்

image

டிரம்பின் வரி விதிப்பால் திருப்பூரில் பின்னலாடை துறை பெரும் பாதிப்பை சந்திக்கும் அபாயம் உள்ளது. சுமார் 20,000 தொழிற்சாலைகள் பாதிக்கப்படுவதோடு, ஏறக்குறைய 30 லட்சம் பேர் வேலையிழக்கும் அச்சம் ஏற்பட்டுள்ளது என திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தின் இணை செயலாளர் குமார் துரைச்சாமி கூறியுள்ளார். வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பின்னலாடையில் 68 சதவீதம் திருப்பூரில் இருந்து செல்வது குறிப்பிடத்தக்கது.

News August 18, 2025

ராணிப்பேட்டை காவல் துறையின் விழிப்புணர்வு செய்தி

image

ராணிப்பேட்டை காவல்துறை இன்று சமூக வலைத்தளத்தின் வெளியிடப்பட்ட விழிப்புணர்வு செய்தியில் சாலை பாதுகாப்பு குறித்து செய்தி வெளியிடப்பட்டது. இதில் “பொறுப்புள்ள ஓட்டுநராக இருங்கள் வழிப்பாதையை மாற்றும்போது உங்கள் காட்டியைப் பயன்படுத்துங்கள். தெளிவாக இருங்கள், பாதுகாப்பாக இருங்கள்..! நமது சாலைகளை அனைவருக்கும் பாதுகாப்பானதாக மாற்றுவோம்.” என மக்களுக்கு விழிப்புணர்வு செய்தி வெளியிடப்பட்டது.

News August 18, 2025

கரூர்: டிகிரி முடித்தால் LIC நிறுவனத்தில் வேலை!

image

கரூர் மக்களே, இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் (LIC) காலியாக உள்ள உதவி நிர்வாக அலுவலர்கள், உதவி பொறியாளர் உள்ளிட்ட 841 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு பட்டப்படிப்பு முடித்தவர்கள் முதல் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.88,635 முதல் ரூ.1,69,025 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <>இங்கே கிளிக். <<>>இதை உடனே SHARE பண்ணுங்க!

News August 18, 2025

திண்டுக்கல்: LIC நிறுவனத்தில் வேலை வேண்டுமா..?

image

திண்டுக்கல் மக்களே, இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் (LIC) காலியாக உள்ள உதவி நிர்வாக அலுவலர்கள், உதவி பொறியாளர் உள்ளிட்ட 841 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு பட்டப்படிப்பு முடித்தவர்கள் முதல் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.88,635 முதல் ரூ.1,69,025 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <>இங்கே கிளிக்.<<>> உடனே SHARE பண்ணுங்க!

News August 18, 2025

ஈரோடு: டிகிரி முடித்திருந்தால்.. ரூ.64,000 சம்பளம்!

image

ஈரோடு மக்களே.. Repco வங்கியில் காலியாக உள்ள 30 Customer Service Associate/Clerk பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதுமானது. சம்பளமாக ரூ.24,050 முதல் ரூ.64,480 வரை வழங்கப்படும். இது குறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு<> கிளிக்<<>> பண்ணுங்க. கடைசி தேதி 08-09-2025 ஆகும். இதை உங்களது நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News August 18, 2025

தாம்பரம் மாநகராட்சியில் “சகவாழ்வு திட்டம்”

image

தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை, பொது சுகாதாரத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை இணைந்து செயல்படுத்தும் “சகவாழ்வு திட்டம்” தெருநாய்களுக்கான வெறிநாய் தடுப்பூசி முகாம், தாம்பரம் மாநகராட்சியில் இன்று (ஆக. 18) துவக்கி வைக்கப்பட்டது. இதில் தெருநாய்களை பிடித்து அவற்றிற்கு வெறிநாய் தடுப்பூசி போடப்பட்டது. இந்நிகழ்வில் கவுன்சிலர் யாக்கூப் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!