Tamilnadu

News August 18, 2025

தர்மபுரி பெண்களே ஆரி ஒர்க் கத்துக்க வாய்ப்பு

image

இந்தியன் வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில், பெண்களுக்கு ஆகஸ்ட் 18 முதல் 30 நாட்களுக்கு இலவச ஆரி எம்ப்ராய்டரி பயிற்சி நடைபெறுகிறது. இந்த பயிற்சியின் போது மதிய உணவு, சிற்றுண்டி மற்றும் பயிற்சி முடிந்த பின்னர் சுயதொழில் தொடங்க வழிகாட்டுதல்கள் வழங்கப்படும். விருப்பமுள்ள பெண்கள் கலந்து கொள்ளலாம். தகவல்களுக்கு 04348-230511, 8667679474 எண்ணில் தொடர்பு கொள்ளவும். ஷேர் பண்ணுங்க

News August 18, 2025

சேலம் மாவட்டத்தில் கரண்ட் கட்..!

image

சேலம் மக்களே நாளை மின் பராமரிப்பு காரணமாக பல்வேறு பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது. அதன்படி அஸ்தம்பட்டி, அழகாபுரம், சாரதா கல்லூரி சாலை, மணக்காடு, ஏற்காடு, முத்துநாயக்கன்பட்டி, கே.ஆர்.தோப்பூர், இரும்பாலை, மாரமங்கலத்துப்பட்டி, பாகல்பட்டி, பேளூர், புழுதிக்குட்டை, வெள்ளாளப்பட்டி, குறிச்சி, பெரியகுட்டி மடுவு, சின்னமநாயக்கன்பாளையம், உள்ளிட்ட பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது. SHARE பண்ணுங்க மக்களே!

News August 18, 2025

திருவள்ளுவர் பல்கலை.யில் நாளை பட்டமளிப்பு விழா

image

வேலூர் மாவட்டத்தில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் நாளை (ஆக.19) பட்டமளிப்பு விழா நடைபெற உள்ளது. இவ்விழாவில் தமிழக ஆளுநர் மற்றும் பல்கலைத்துறை அமைச்சர் பங்கேற்க உள்ளனர். பல்கலைக்கழக மாணவர்கள், பெற்றோர், பேராசிரியர்கள் மற்றும் கல்வி ஆர்வலர்கள் அனைவரும் பெரும் உற்சாகத்துடன் கலந்து கொள்ள தயாராகி வருகின்றனர்.

News August 18, 2025

புதுச்சேரி: பெண்ணிடம் ரூ.1.08 லட்சம் மோசடி

image

தட்டாஞ் சாவடி பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு அறிமுகமான சிலர், ஆன்லைனில் பகுதிநேர வேலையில் அதிகமாக சம்பாதிக்கலாம் எனக்கூறி, வாட்ஸ்ஆப் லிங்க் அனுப்பியுள்ளனர். அந்த லிங்க்கை கிளிக் செய்து, அதில் கூறியபடி ரூ.1.08 லட்சம் செலுத்தி டாஸ்குகளை முடித்துள்ளார். ஆனால், அதற்கான லாபமும், செலுத்திய பணத்தையும் திருப்பி தரவில்லை என கொடுக்கப்பட்ட புகாரின் பேரில், சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News August 18, 2025

ராம்நாடு அரசுப் பணி.. APPLY செய்வது எப்படி?

image

ராமநாதபுரம் மாவட்டத்தில் 29 கிராம உதவியாளர்கள் பணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. <>இந்த லிங்கை<<>> கிளிக் செய்து விண்ணப்பங்களை பதிவிறக்கி, அதனை பூர்த்தி செய்து செப்.9க்குள் அந்தந்த வட்டார அலுவலகத்தில் (8 ஊர்கள்) தேவையான சான்றிதழ்களுடன் சமர்ப்பிக்க வேண்டும். எழுத்துத் தேர்வு அக். 8லும், நேர்முக தேர்வு அக். 23லும் நடைபெற உள்ளது. எழுதப்படிக்க தெரிந்திருந்தால் போதும் விண்ணப்பிக்கலாம். இத்தகவலை உடனே SHARE பண்ணுங்க

News August 18, 2025

மதுரை: கம்மியான விலையில் பைக், கார் வேண்டுமா.!

image

மதுரை நகர் மதுவிலக்கு போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஆக.25 காலை 11:00 மணிக்கு ஏலம் விடப்படுகிறது. ஏலதாரர்கள் மதுவிலக்கு பிரிவில் வாகனங்களை பார்வையிட்டு முன் பணமாக டூவீலருக்கு ரூ.5000, 3 மற்றும் 4 சக்கர வாகனத்திற்கு ரூ.10 ஆயிரத்தை ஆக.18 முதல் 22 வரை செலுத்தி ரசீது பெறலாம். அரசு நிர்ணயித்த மதிப்பீட்டு தொகைக்கு அதிகமாக ஏலம் கோரவேண்டும்.எல்லோருக்கும் SHARE பண்ணுங்க.யாருக்காவது உதவும்.

News August 18, 2025

சென்னையில் இங்கு தண்ணீர் வராது! ALERT

image

சென்னை மெட்ரோ ரயில் பணிகளுக்காக ஆகஸ்ட்.18-ம் தேதி 5 மண்டலங்களில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுவதாக சென்னை குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி, ராயபுரம், திரு.வி.க.நகர், அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் ஆகிய மண்டலங்களில் ஆக.18-ம் தேதி காலை 8 மணி முதல் ஆக.19-ம் தேதி காலை 8 மணி வரை தண்ணீர் வராது என தெரிவிக்கப்பட்டுள்ளது. (மக்களே தண்ணீரை சேமித்து வைத்துக்கொள்ளுங்கள். SHARE பண்ணுங்க)

News August 18, 2025

தமிழக ஆளுநர் நாளை காரைக்குடி வருகை

image

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் 36 வது பட்டமளிப்பு விழா நாளை (ஆகஸ்ட் 18) பகல் 11 மணியளவில் நடைபெறவுள்ளது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மாணவர்களுக்கு பட்டங்களை வழங்குகிறார்.இந்நிகழ்ச்சியில் உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன், பெங்களூர் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தலைவர் வி.நாராயணன் அழகப்பா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ரவி, பதிவாளர் செந்திராஜன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.SHARE பண்ணுங்க.

News August 18, 2025

தென்காசியில் தனியார் வேலை வாய்ப்பு முகாம் – ஆட்சியர்

image

தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஆக. 22 அன்று காலை 10 முதல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் என ஆட்சியர் கமல் கிஷோர் தெரிவித்தார். இதில் 20-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்கின்றன. 8 வகுப்பு முதல் பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ தகுதியுடையோர் www.tnprivatejobs.tn.gov.in பதிவு செய்ய வேண்டும். விவரங்களுக்கு 04633-213179 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுங்க…SHARE பண்ணுங்க…

News August 18, 2025

உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்

image

உங்களுடன் ஸ்டாலின் திட்டம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, சின்னசேலம், சங்கராபுரம், திருக்கோவிலூர், ரிசிவந்தியம் ஆகிய பகுதிகளில் நாளை 19/8/2025 செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளது. இங்கு 13 துறைகளைச் சார்ந்த 43 வகையான சேவைகளை பெறலாம். பிறப்புச் சான்றிதழ், வருமானவரி சான்றிதழ், கலைஞர் மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்க தவறியோர் மீண்டும் விண்ணப்பிக்கலாம்.

error: Content is protected !!