Tamilnadu

News August 17, 2025

இந்தியாவிலேயே இராமநாதபுரத்தில் மட்டும் தான்.!

image

இராமநாதபுரம் தேவிபட்டினத்தில் அமைந்துள்ளது நவபாஷாண நவக்கிரகக் கோயில். இந்தியாவில் கடலுக்குள் அமைந்திருக்கும் ஒரே நவபாஷாண கோயில் இது தான். இராமன், இராவணனுடன் போரிடுவதற்கு முன், இந்த நவக்கிரகங்களை வழிபட்டதாகவும், நவபாஷாணங்களை கொண்டு நவக்கிரகங்களை நிறுவியதாகவும் நம்பப்படுகிறது. இங்கு வழிபட்டால் கிரக தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. ஞாயிற்றுகிழமையான இன்று குடும்பத்துடன் சென்று வாருங்கள். Share.

News August 17, 2025

கோவை: EB பில் அதிகமா வருதா? இதோ தீர்வு!

image

கோவை மக்களே EB கட்டணம் அதிகமா வருதா? கவலையை விடுங்க இதுபோன்ற பிரச்னைகளுக்கு நீங்கள் EB அலுவலகத்துக்கு செல்ல வேண்டும் என்று அவசியல் இல்லை. உரிய ஆவணங்களுடன் தமிழ்நாடு அரசின் TANGEDCO என்ற செயலியில் புகார் அளிக்கலாம். அல்லது 94987 94987 என்ற கட்டணமில்லா புகார் எண்ணை தொடர்பு கொண்டும் புகார் தெரிவிக்கலாம். இதில் மின் கட்டணத்தையும் செலுத்தலாம். இந்தத் தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.

News August 17, 2025

விருதுநகர்: IT வேலை வேண்டுமா? SUPER வாய்ப்பு..!

image

விருதுநகர் இளைஞர்களே, தமிழக அரசு, ஐடி துறையில் இளைஞர்களுக்கு எளிதில் வேலைகிடைக்கும் வண்ணம் அதற்கான பயிற்சிகளை இலவசமாகவும் வழங்கி வருகிறது. இதில் JAVA, C++, J2EE, Web Designing, coding, Testing என பல்வேறு Courseகள் உள்ளன. <>இங்கே கிளிக்<<>> செய்து கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள். நல்ல சம்பளத்தில் உடனே IT வேலைக்கு செல்லுங்கள். நண்பர்களுக்கு உடனே SHARE பண்ணுங்க.

News August 17, 2025

தஞ்சை OTP சைபர் மோசடி குறித்து விழிப்புணர்வு காணொளி

image

ஓடிபி (OTP) மூலமாக நடைபெறும் சைபர் மோசடி குறித்த காணொளி விழிப்புடன் இருப்போம் பாதுகாப்பாக இருப்போம் என்ற தலைப்பில் மாவட்ட காவல் அலுவலகம் சார்பில் குறும்படம் வெளியிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. சைபர் குற்றங்கள் தொடர்பான புகாருக்கு 1930 என்ற எண்ணை அழைக்க வேண்டும். மேலும் விழிப்புணர்வு காணொளியை பார்க்க https://www.facebook.com/share/p/15uS3wCsFK/ இந்த லிங்கை கிளிக் செய்யவும். SHARE IT NOW

News August 17, 2025

திருச்சி: திடீர் மின்தடையா ? உடனே கால் பண்ணுங்க!

image

மழை மற்றும் பலத்த காற்று வீசும் நேரங்களில் பொதுவாக மின்சாரம் துண்டிக்கப்படும். அதுவும் குறிப்பாக இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் பலருக்கு யாரிடம் புகார் செய்வது என்பது தெரியாத நிலை உள்ளது. இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காகவே ‘94987 94987’ என்ற பிரத்யேக சேவை எண்ணை TNEB அறிவித்துள்ளது. இதன்மூலம் பயனாளர்கள் தமிழ்நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும் மின் வாரியத்தை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். SHARE!

News August 17, 2025

திருச்சியில் தனியார் வேலை வாய்ப்பு முகாம்

image

திருச்சி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து, வருகிற 31ம் தேதி ஜமால் முகமது கல்லூரியில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்துகிறது. காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை நடைபெறும் இந்த முகாமில், 10ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை பயின்ற, 18 – 35 வயதுக்குட்பட்டவர்கள் கல்வி சான்றிதழ் நகல், ஆதார் அட்டை, புகைப்படத்துடன் பங்கேற்கலாம்.

News August 17, 2025

மயிலாடுதுறை: கணவன் அடித்தால் CALL பண்ணுங்க!

image

நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு எதிராக நிகழும் வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், அதனை தடுக்க அரசு சார்பாக பல்வேறு சேவைகள் வழங்கப்படுகின்றன. அதன்படி, மயிலாடுதுறை மாவட்ட பெண்கள் ஏதாவது குடும்ப வன்முறையை எதிர்கொண்டால், உடனே மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலரை ( 8838595483) அழைத்து புகார் அளிக்கலாம். இதை அனைவருக்கும் SHARE பண்ணி தெரியப்படுத்துங்கள்

News August 17, 2025

நெல்லை: பேருந்தில் அதிக கட்டணமா? COMPLAINT பண்ணுங்க!

image

நெல்லை மக்களே! சுதந்திர தினம் மற்றும் கிருஷ்ண ஜெயந்தி விடுமுறைகள் முடிந்து சொந்த ஊர்களில் இருந்து வேலைக்கு செல்கீறீர்களா? அரசு கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலித்தால் புகாரளியுங்க..இங்கு <>க்ளிக்<<>> செய்து அரசு கட்டணங்களை தெரிஞ்சுகிட்டு நிர்ணயிக்கபட்டதை விட அதிக கட்டணம் வசூலித்தால் ஆதாரத்துடன் 1800 599 1500 (அ) நெல்லை போக்குவரத்து நிர்வாக இயக்குனரிடம் 0462 – 2520982 எண்ணில் புகாரளியுங்க…SHARE பண்ணுங்க…

News August 17, 2025

நாமக்கல்லில் கறிக்கோழி விலை திடீரென சரிவு

image

நாமக்கல் மண்டலத்தில் நேற்று மாலை தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முட்டை விலை 4.90 காசுகளாகவும், ஒரு கிலோ முட்டை கோழி 97 ரூபாய்க்கும், கறிக்கோழி ஒரு கிலோ 95 ரூபாய்க்கும், விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. என கோழி பண்ணையாளர்கள் தலைவர் சிங்கராஜ் தெரிவித்தார்.

News August 17, 2025

சம்பா பருவத்தில் இயந்திர நடவுக்கு ரூ.2,400 மானியம்: வேளாண் துறை

image

நடப்பு சம்பா பருவத்தில் நெற்பயிர்களை இயந்திர நடவும் மூலம் சாகுபடி மேற்கொள்ளும் வேளாண் விவசாயிகளுக்கு 1 ஏக்கருக்கு ரூ.2,400 அல்லது ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.6000 பின்னேற்பு மானியமாக தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தில் வழங்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு வேளாண் விரிவாக மையம் (அ) உதவி வேளாண் அலுவலர்களை தொடர்புகொள்ளவும் என்று விராலிமலை வேளாண் உதவி இயக்குநர் ப.மணிகண்டன் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!