Tamilnadu

News August 18, 2025

ஈரோடு: FREE இலவச தையல் மிஷின் வேண்டுமா ?

image

ஈரோடு மக்களே சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் விதமாக இலவச தையல் இயந்திரம் வழங்கப்படுகிறது. விருப்பம் உள்ளவர்கள் அருகிலுள்ள இ-சேவை மையம் மூலம் இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு <>இங்கே கிளிக்<<>> செய்யவும் (அ) ஈரோடு மாவட்ட நிர்வாகத்தை (0424-2261405) அணுகவும். உதவும் உள்ளம் கொண்ட ஈரோடு மக்களே SHARE பண்ணுங்க!

News August 18, 2025

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம்

image

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தலைமையில் இன்று மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது. பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்களை ஆட்சியர் பெற்றுக் கொண்டு அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தனலிங்கம், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சரண்யா தேவி, நேர்முக உதவியாளர் ஏகாம்பரம், தனித் துணை ஆட்சியர் கீதாலட்சுமி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

News August 18, 2025

கரூர்: ரூ.40,000 சம்பளத்தில் ஏர்போர்ட்ல் வேலை! APPLY NOW

image

கரூர் மக்களே, மத்திய அரசின் இந்திய விமான நிலைய ஆணையத்தில் ரூ.40,000 முதல் ரூ.1,40,000 சம்பளம் வரை பல்வேறு பிரிவுகளில் உள்ள ஜூனியர் நிர்வாகி பணியிடங்களுக்கு (AAI Junior Executive) அறிவிப்பு வெளியாகியுள்ளது. தேசிய அளவில் 976 காலிப்பணியிடங்கள் உள்ளன. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் (27.09.2025) தேதிக்குள் <>இங்கு கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்க வேண்டும். இதை வேலைதேடும் உங்க நண்பர்களுக்கு SHARE செய்யவும்.

News August 18, 2025

ஆதிதிராவிட பழங்குடியின இளைஞர்களுக்கு வீடியோ பயிற்சி

image

குமரி ஆட்சியர் இன்று வெளியிட்ட செய்தி குறிப்பு: தாட்கோ மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு வீடியோ ஒளிப்பதிவு (Certification in videography and video Editing) பயிற்சி வழங்கப்படவுள்ளது. இப்பயிற்சி பெற தாட்கோ இணையதளமான www.tahdco.com என்ற முகவரில் விண்ணப்பிக்கலாம்.

News August 18, 2025

விழுப்புரம்: அரசுப் பேருந்து மோதி ஐடி ஊழியர் பலி

image

சென்னையில் ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த புதுச்சேரி லாஸ்பேட்டையைச் சேர்ந்த ஜெகதீஷ் (22), விடுமுறைக்காக பைக்கில் சொந்த ஊருக்கு வந்து கொண்டிருந்தார். மரக்காணம் அருகே கூனிமேடு பஸ் நிறுத்தம் அருகே எதிரே வந்த அரசு பேருந்து மோதியதில் படுகாயமடைந்த அவர், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில் நேற்று உயிரிழந்தார். மரக்காணம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றன

News August 18, 2025

சிவகங்கை: டிகிரி முடித்தால் ரூ.64,000 த்தில் வங்கி வேலை..!

image

இந்தியன் ரெப்கோ வங்கியில், கிளார்க் பணிக்கு 30 க்கும் மேற்பட்ட காலி இடங்கள் உள்ளன. இப்பணிக்கு மாத சம்பளமாக ரூ.24,050 முதல் 64,480 வரை வழங்கப்படுகிறது. ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள், 18.08.2025 முதல் 08.09.2025 க்குள் <>இந்த லிங்கை கிளிக் <<>>செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்கான எழுத்து தேர்வு மதுரை மற்றும் திருச்சியில் நடைபெறுகிறது. இந்த தகவலை உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணி HELP பண்ணுங்க.

News August 18, 2025

சேலம்: ரூ.64,480 சம்பளம் SBI வங்கியில் வேலை!

image

சேலம் மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள 5180 Junior associates(Customer Support and Sales) பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மேலும் ரூ.24,050 முதல் ரூ.64,480 வரை வழங்கப்படும். இதற்கு வரும் 26ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்க <>இங்கே கிளிக் <<>>பண்ணுங்க. இதை வேலை தேடும் அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News August 18, 2025

தங்ககவச அலங்காரத்தில் நாமக்கல் ஆஞ்சிநேயர்!

image

நாமக்கல் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள ஆஞ்சநேயர் கோயிலில் இன்று சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. ஆஞ்சிநேயருக்கு பஞ்சாமிர்தம், தேன், பால், தயிர், மஞ்சள், சந்தனம் போன்ற பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, தங்ககவச சிறப்பு அலங்காரத்துடன், மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

News August 18, 2025

மேட்டுர் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை

image

சேலம் மாவட்டம், மேட்டுர் அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்பட உள்ளதால் காவிரி கரையோரம் வசிக்கும் பொது மக்களுக்கு, பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒலிபெருக்கியின் மூலம் எச்சரிக்கை விடுத்தனர். மேலும் கரையோரம் இருக்கும் நூற்றுக்கணக்கான மக்கள் வெள்ள அபாய எச்சரிக்கை காரணமாக வெளியேறினர்.

News August 18, 2025

திருப்பூர்: டிகிரி போதும் SBI வங்கியில் வேலை!

image

திருப்பூர் மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள 5180 Junior associates(Customer Support and Sales) பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. ஆரம்ப கட்ட சம்பளமாக ரூ.24,050 முதல் ரூ.64,480 வரை வழங்கப்படும். இதற்கு வரும் 26ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்க <>இங்கே கிளிக் பண்ணுங்க<<>>. உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

error: Content is protected !!