Tamilnadu

News August 15, 2025

கள்ளக்குறிச்சி: இலவச பயிற்சி மூலம் ரூ.4.5 லட்சம் வரை சம்பளம்

image

தமிழ்நாடு அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் 5G Communication Technology சான்றிதழ் படிப்பை இலவசமாக வழங்குகிறது. 70% நேரடி வகுப்பிலும், 30% ஆன்லைன் வழியாகவும் சுமார் 4000 பேருக்கு பயிற்சி அளிக்கப்படும். இந்த பயிற்சியின் மூலம் முன்னணி நிறுவனங்களின் பணி வாய்ப்பை பெறும் இளைஞர்களுக்கு வருடம் ரூ.4.5 லட்சம் சம்பளம் கிடைக்கும். 18 முதல் 35 வயது உடையவர்கள் இங்கே <>கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். இதனை மற்றவர்களுக்கும் பகிரங்கள்!

News August 15, 2025

தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்திய ஆட்சியர்

image

அரியலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நாட்டின் 79வது சுதந்திர தினத்தை ஒட்டி மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இதனையடுத்து, ஆட்சியரும் மாவட்ட எஸ்பி விஷ்வேஷ் பா.சாஸ்திரி ஆகியோர் திறந்த ஜீப்பில் சென்று, காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக் கொண்டனர். மேலும், காவல்துறையில் சிறப்பாகப் பணி புரிந்த காவலர்களுக்கு பதக்கங்களையும் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

News August 15, 2025

தேசிய கொடி ஏற்றி மரியாதை செய்த மாவட்ட ஆட்சியர்

image

மயிலாடுதுறையில் நாட்டின் 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் இந்திய விளையாட்டு ஆணையம் மைதானத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து மாவட்ட எஸ்பி முன்னிலையில் நடைபெற்ற காவலர் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டார். இவ்விழாவில் மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

News August 15, 2025

FLASH: பரந்தூர் விமான நிலையம் அமைவதை எதிர்த்து தீர்மானம்!

image

பரந்தூரில் விமானம் நிலையம் அமைக்க 2022-ம் ஆண்டு அறிவிப்பு வெளியானது. இந்த அறிவிப்பை எதிர்த்து ஏகனாபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் உள்ள மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்று (ஆக.15) நடந்த கிராம சபை கூட்டத்தில் பரந்தூர் விமான நிலையம் அமைப்பதை எதிர்த்து 14வது முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதை பற்றிய உங்கள் கருத்து என்ன?

News August 15, 2025

சுதந்திர தினம் – புதுச்சேரி கவர்னர் வாழ்த்து

image

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாசநாதன் வெளியிட்டுள்ள செய்தியில், “சுதந்திர தினத்தை கொண்டாடுகின்ற இந்த நாளில், இந்திய குடிமக்கள் அனைவருக்கும் குறிப்பாக, புதுச்சேரி வாழ் மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த சுதந்திரதின வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். எண்ணற்ற தியாகிகளின் தன்னலமற்ற தியாகத்தால் நாம் சுதந்திரம் அடைந்தோம். அவர்களுடைய தியாகங்களை நினைத்துப் போற்றுவது நம்முடைய கடமை.” என கூறியுள்ளார்.

News August 15, 2025

தேசிய கொடியை ஏற்றிய தஞ்சை ஆட்சியர்

image

79வது சுதந்திர தினவிழாவில் தஞ்சை மாவட்டஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தேசியகொடியினை ஏற்றி வைத்து, மூவர்ண பலூன்களையும், சமாதான புறாக்களையும் பறக்க விட்டார். தொடர்ந்து திறந்த ஜீப்பில் நின்றவாறு காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். மேலும் இந்நிகழ்வில் பல்வேறு துறைகளின் சார்பில் 32 பயனாளிகளுக்கு இரண்டு கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

News August 15, 2025

தூத்துக்குடி: கோவில் அர்ச்சகர் வீட்டில் 107 பவுன் நகை கொள்ளை

image

குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோவில் அர்ச்சகராக இருந்த குமார் பட்டர், கடந்த மாதம் உடல்நலக் குறைவால் மரணமடைந்தார். இவரது மனைவி பிரியா, உறவினர் வீட்டில் தங்கியிருந்து, ஆகஸ்ட் 13 அன்று வீடு திரும்பினார். அப்போது, வீட்டின் பின்பக்கக் கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 107 பவுன் தங்க நகைகள், வெள்ளி, வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. குலசேகரபட்டினம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News August 15, 2025

நெல்லை : VAO லஞ்சம் கேட்டால் இதை செய்ங்க!

image

பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது உள்ளிட்டவை கிராம நிர்வாக அலுவலரின் (விஏஓ) முக்கிய பணிகளாகும். இவற்றை முறையாக செய்யமால் விஏஓ யாரேனும் உங்களிடம் லஞ்சம் கேட்டால், நெல்லை மாவட்ட மக்கள் 0462-2580908 என்ற எண்ணில் தயங்காமல் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க!

News August 15, 2025

மதுரையில் 3 மாதம் இலவச கணிணி பயிற்சி

image

மதுரை பெட்கிராட், அம்பேத்கார் பெண்கள் மேம்பாட்டு மையம் சார்பில் எஸ்.எஸ்.காலனி பெட்கிராட் நிறுவனத்தில் 3 மாத இலவச கம்ப்யூட்டர் பயிற்சி அளிக்கப்படுகிறது. +2 தேர்ச்சி பெற்றவர்கள் பங்கேற்கலாம் M.S ஆபிஸ்பேக்கேஜ் அக்செஸ், சிஸ்டம் டூல் சூட், போட்டோஷாப், கோரல்டிரா பயிற்சியுடன் டைப்பிங் பயிற்சி, ஆங்கிலப் பேச்சுப்பயிற்சி கற்றுத்தரப்படும். விவரங்களுக்கு 9344613237 அழைக்கலாம்.நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

News August 15, 2025

தூத்துக்குடி: பிளாஸ்டிக் இல்லா உணவகங்களுக்கு விருது

image

தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் உணவு பாதுகாப்புத் துறையால் அனுமதிக்கப்படாத பிளாஸ்டிக்கை பயன்படுத்தாத பெரிய உணவகங்களுக்கு ரூ.1,00,000/- பரிசுடன் விருது வழங்கப்படும் என ஆட்சியர் க.இளம்பகவத் அறிவித்தார். தெருவோர மற்றும் சிறு வணிகர்களுக்கு ரூ.50,000/- உடன் விருது வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் ஆகஸ்ட் இறுதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார். *ஷேர்*

error: Content is protected !!