Tamilnadu

News August 13, 2025

திருச்சி: லஞ்சம் வாங்கியவருக்கு 3 ஆண்டுகள் சிறை

image

திருச்சியை சேர்ந்த முத்துராமலிங்கம் என்பவர் முறையாக அனுமதி பெற்று கட்டிய வீட்டிற்கு வரி நிர்ணயம் செய்வதற்காக ரூ.6,500 லஞ்சம் பெற்ற வழக்கில், முன்னாள் வருவாய் உதவியாளர் சுபேர்அலி கைது செய்யப்பட்டு வழக்கு விசாரணை திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் விசாரணையின் முடிவில், முன்னாள் வருவாய் உதவியாளருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News August 13, 2025

அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஆட்சியர்

image

கரூர் மாவட்டம், கரூர் மாநகராட்சிக்குட்பட்ட வார்டு எண் 18 மற்றும் 19 பகுதிகளுக்கு தனியார் திருமண மண்டபத்தில், இன்று (13.08.2025) நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். உடன் மாநகராட்சி மேயர் கவிதா மற்றும் துணை மேயர் ப.சரவணன் ஆகியோர் உள்ளனர்.

News August 13, 2025

ஆட்சியர் கூட்டரங்கில் சட்ட விழிப்புணர்வு முகாம்

image

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தகவல் அறியும் உரிமை சட்டம் 2005யின் கீழ், மாநில தகவல் ஆணையர்கள் தலைமையில், மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் அனைத்து துறை அலுவலர்களுக்கான விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் அனைத்து தமிழக அரசு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

News August 13, 2025

திண்டுக்கல் ஆட்சியர் எச்சரிக்கை

image

திண்டுக்கல்: சுதந்திர தினமான நாளை மறுநாள்(ஆக.15) மாவட்டத்தில் செயல்படும் டாஸ்மாக் மதுக்கடைகள் அதோடு இணைந்த பார்கள் மற்றும் எப்.எல்.-2,எப்.எல்.-3,எப்.எல்.3ஏ, எப்.எல்.-3 ஏஏ, எப்.எல்.-11 உரிமம் பெற்றபார்கள் அனைத்தும் மூடப்படுகிறது.எனவே அன்றைய தினம் மதுபானங்கள் விற்பனை செய்யக்கூடாது. அப்படி விதிகளுக்கு மாறாக மது விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News August 13, 2025

பொள்ளாச்சி புதிய பேருந்து நிலையம் எம்பி ஆலோசனை

image

பொள்ளாச்சி சிடிசி மேட்டில் புதிதாக கட்டப்பட்டு வருமேப் பேருந்து நிலையமேப் வசதிகள் குறித்து எமேப்பி ஈஸ்வர சுவாமி தலைமையில் ஆலோசனை கூட்டமேப் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நகராட்சித் தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் ஆணையாளர் கணேசன் உள்ளிட்ட தனியார் அமைப்புகள் அசோசியேட்ஸ் பிரைவேட் பஸ் ஓனர்கள் மற்றுமேப் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

News August 13, 2025

நெடுஞ்சாலை துறை அலுவலகத்தில் மனு அளித்த நிர்வாகிகள்

image

தேனி மாவட்டம் உத்தமபாளையம் பேரூராட்சி பகுதியில் பேருந்து நிலையம் முன்பும், அரசு மருத்துவமனை முன்பும் தேசிய நெடுஞ்சாலை மிகவும் பழுதடைந்து போக்குவரத்திற்கு சாதகமற்ற ஆபத்தான சூழ்லில் உள்ளது. இதனை உடனே சரி செய்யக்கோரி உத்தமபாளையம் நகர எஸ்டிபிஐ கட்சியின் சார்பாக நகர தலைவர் சகுபர் சாதிக் தலைமையில் உத்தமபாளையம் நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் கோரிக்கை மனுவை நிர்வாகிகள் அளித்தனர்.

News August 13, 2025

நெல்லை மாவட்டத்தில் மதுபான கடைகள் மூடல்

image

சுதந்திர தினத்தையொட்டி திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மதுக்கடை கள் (டாஸ்மாக்) இம்மாதம் 15ம் தேதி மூடப்படும் என ஆட்சியர் இரா.சுகுமார் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்; மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையின் சார்பில் தமிழ்நாடு மாநில வாணிபக்கழகத்தால் (டாஸ்மாக்) நடத்தப்படும் மதுபானக் கடைகள், அவற்றுடன் இணைந்த மதுபானக் கூடங்கள் மூடப்படுவதாக தெரிவித்தார்.

News August 13, 2025

பல்லடம்: சிசிடிவி கேமரா பொருத்தும் பணி தீவிரம்

image

பல்லடம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நாள்தோறும் விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் இதனை தடுப்பதற்காகவும், விபத்துக்கள் நடைபெறும் விதங்களை அறிந்து கொள்வதற்காகவும், பல்லடம் காவல்துறையினர் சார்பில், முக்கிய சாலை சந்திப்புகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. இச்செயலுக்கு பொதுமக்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

News August 13, 2025

திருவிழாவில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர்

image

அந்தியூர் குருநாதசாமி ஆடித் தேர் திருவிழா இன்று தொடங்கியது. திருவிழாவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சரும் கோபி சட்டமன்ற உறுப்பினருமான கே ஏ செங்கோட்டையன் கலந்து கொண்டார். தொடர்ந்து சாமி தரிசனம் மேற்கொண்டார். குதிரை சந்தையும் பார்வையிட்டார். அவருக்கு அஇஅதிமுகவின் நிர்வாகிகள் உடன் கலந்து கொண்டனர்.

News August 13, 2025

விழுப்புரத்தில் தரமற்ற குடிநீர் – 16 நிறுவனங்கள் மீது வழக்கு

image

விழுப்புரத்தில் உணவு பாதுகாப்பு மருந்து நிர்வாகத்துறை சார்பில் அடைக்கப்பட்ட குடிநீர் உற்பத்தியாளர்கள் விழிப்புணர்வு கூட்டம் உணவு பாதுகாப்பு துறை மாவட்ட அலுவலர் ராமகிருஷ்ணன் தலைமையில் இன்று (ஆக.13) நடைபெற்றது. இந்நிலையில் குடிநீர் பாட்டில் உற்பத்தி மற்றும் தண்ணீரின் தரம் குறித்து எடுத்துரைத்ததோடு தரமற்ற தண்ணீர் பாட்டில் தயாரித்த 16 நிறுவனங்கள் மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்

error: Content is protected !!