Tamilnadu

News August 13, 2025

மசாலா பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி

image

புதுவை குயவர்பாளையம் லெனின் வீதியில் உள்ள இந்தியன் வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு, புதுவையை சேர்ந்த 18 முதல் 45 வயதுள்ள ஆண்கள் மற்றும் பெண்களுக்கு ஊறுகாய் வகை, வத்தல் வகை, அப்பளம் வகை, மாசாலா பொடிகள் உள்ளிட்ட பொருட்கள் தயாரிக்கும் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் 88704 97520, 0413-2246500 எண்களில் தொடர்பு கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

News August 13, 2025

அனைத்து அரசு பள்ளிகளிலும் குடற்புழு நீக்க நாள் விழிப்புணர்வு

image

பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் நிகழ்வினை பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன் நேற்று (ஆக.12) துவக்கி வைத்தார். கடந்த இரண்டு நாட்களில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

News August 13, 2025

திருச்சி எம்.எல்.ஏ இனிகோ முதல்வருக்கு கடிதம்

image

திருச்சி எம்எல்ஏ இனிகோ, தமிழக முதலமைச்சருக்கு இன்று கோரிக்கை கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், “நாடு முழுவதும் கல்லறை திருநாள் வரும் நவ-2ம் தேதி கடைபிடிக்கப்பட உள்ளது. இந்நிலையில் நவ.1, 2 ஆகிய தேதிகளில் ஆசிரியர்கள் தகுதி தேர்வான TNTED தேர்வு நடைபெற உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆகவே கல்லறை திருநாளை முன்னிட்டு இந்த தேர்வு தேதியை மாற்றி அமைத்து தர வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

News August 13, 2025

திருவள்ளுவர் சிலைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

image

கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவுமண்டபம், திருவள்ளுவர் சிலை மற்றும் கண்ணாடி பாலம் ஆகியவற்றை காண தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் சென்று பார்வையிட்டு வருகிறார்கள். இந்த நிலையில் இந்தியாவின் சுதந்திர தினத்தையொட்டி கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு (இன்று ஆக.13) துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

News August 13, 2025

நாகை-தஞ்சை பயணிகள் ரயிலின் நேரம் மாற்றம்

image

பராமரிப்பு பணிகள் காரணமாக பிற்பகல் 1 மணிக்கு காரைக்காலில் இருந்து புறப்பட்டு நாகப்பட்டினம், கீழ்வேளுர் வழியாக தஞ்சாவூர் வரை செல்லும் பயணிகள் ரயிலானது ஆகஸ்ட் 13-ம் தேதி (இன்று) முதல் வரும் ஆகஸ்ட் 23-ம் தேதி வரை, ஒரு மணி நேரம் தாமதமாக பிற்பகல் 2 மணிக்கு புறப்படும் என தென்னக ரயில்வே திருச்சி கோட்ட மக்கள் தொடர்பு அலுவலர் வினோத் தெரிவித்துள்ளார்.

News August 13, 2025

சேலம் மாவட்டத்தில் நாளை நடைபெறும் முகாம்!

image

சேலம் ஆகஸ்ட் 14 உங்களுடன் ஸ்டாலின் நடைபெறும் முகாம்கள்:
▶️ அம்மாபேட்டை சமுதாயக்கூடம் புத்துமாரியம்மன் கோவில். ▶️மாசிநாயக்கன்பட்டி கஸ்தூரிபா திருமண மண்டபம் அயோத்தியாபட்டினம்.
▶️ தலைவாசல் விளையாட்டு மைதானம் காமகபாளையம்.
▶️மேச்சேரி சுய உதவி குழு கட்டிடம் ஓலப்பட்டி.
▶️காடையாம்பட்டி எஸ் எஸ் வி ஜமீன் மஹால் நடுப்பட்டி.
▶️சங்ககிரி நாடார் சமுதாயக்கூடம் வட்டமலை. ஆகிய பகுதிகளில் நடைபெறுகிறது.

News August 13, 2025

திண்டுக்கல் ஆட்சியர் எச்சரிக்கை

image

திண்டுக்கல்: சுதந்திர தினமான நாளை மறுநாள்(ஆக.15) மாவட்டத்தில் செயல்படும் டாஸ்மாக் மதுக்கடைகள் அதோடு இணைந்த பார்கள் மற்றும் எப்.எல்.-2,எப்.எல்.-3,எப்.எல்.3ஏ, எப்.எல்.-3 ஏஏ, எப்.எல்.-11 உரிமம் பெற்றபார்கள் அனைத்தும் மூடப்படுகிறது.எனவே அன்றைய தினம் மதுபானங்கள் விற்பனை செய்யக்கூடாது. அப்படி விதிகளுக்கு மாறாக மது விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News August 13, 2025

பாபநாசம் அணை நீர்வரத்து கடும் சரிவு

image

நெல்லை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை குறைந்த நிலையில் அணைகளுக்கு நீர்வரத்து இறங்குமுகமாக உள்ளது. இன்று ஆக. 13 காலை 7 மணி நிலவரப்படி பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 295 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. அதே நேரத்தில் குடிநீர் மற்றும் பாசனத்திற்காக வினாடிக்கு 1750 கன அடி நீர் வெளியேற்றபட்டது. அணை நீர் இருப்பு 117 அடியாக குறைந்தது. சேர்வலாறு அணை நீர் இருப்பு 107 அடி மணிமுத்தாறு அணை நீர் இருப்பு 95 அடி.

News August 13, 2025

தென்காசி: மமக கட்சியின் தீவிர உறுப்பினர் சேர்க்கை

image

தென்காசி நகர மனித நேய மக்கள் கட்சி 15வது வார்டு கிளை பகுதியில் தீவிர உறுப்பினர் சேர்க்கும் நிகழ்ச்சி இன்று காலையில் நடந்தது. இதில் நகர தலைவர் அபாபீல் மைதீன் தலைமை வகித்து, நகர செயலாளர், பொருளாளர் மற்றும் நகர துணை அணி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதில் பத்துக்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக இணைந்தனர்.

News August 13, 2025

திண்டுக்கல்லில் தெரு நாய்களால் அச்சம்!

image

திண்டுக்கல்: கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவுக்கு தினந்தோறும் வரும் சுற்றுலாப் பயணிகள் பல்வேறு மலா்களை பாா்த்து ரசிக்கின்றனா். இந்நிலையில், நேற்று(ஆக.12) வழக்கம்போல் பிரையண்ட் பூங்காவிலுள்ள மலா்களை சுற்றுலாப் பயணிகள் பாா்த்து ரசித்து கொண்டிருந்தனா். அப்போது, திடீரென பூங்காவுக்குள் நுழைந்த தெரு நாய்களால் சுற்றுலாப் பயணிகள் அச்சமடைந்தனா்.

error: Content is protected !!