Tamilnadu

News August 13, 2025

கிராம சபைக் கூட்டம்- பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

image

சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் வரும் ஆக.15- ஆம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு, நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் பங்கேற்று சிறப்பிக்க வேண்டும் என்று சேலம் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி கேட்டுக் கொண்டுள்ளார். கிராம சபைக் கூட்டத்தில் கிராம ஊராட்சி, மற்றும் பொதுநிதி செலவினம் குறித்தும், கிராம ஊராட்சி தணிக்கை அறிக்கை குறித்தும் விவாதிக்கப்படவுள்ளது.

News August 13, 2025

சேலம்: முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டி!

image

சேலம் மாவட்டத்தில் சேர்ந்தவர்களுக்கான 2025 முதல்வர் கோப்பை மாவட்ட அளவில் விளையாட்டு போட்டிகள் வருகின்ற 22ஆம் தேதி நடைபெற உள்ளது. அனைத்து தரப்பினருக்கும் இந்த போட்டியில் பங்கு பெற 16ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும். மேலும் இணையதளத்தில் விண்ணப்பிக்க https://cmtrophy.sdat.in (அல்லது) https://sdat.tn.gov.in பதிவு செய்து கொள்ள சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தா தேவி தெரிவித்துள்ளார்.

News August 13, 2025

தி.மலை மக்களே.. இதை கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க

image

நம்ம தி.மலை மாவட்டத்தை பற்றி தெரிஞ்சுக்கலாமா
▶️நகராட்சி- (3)
▶️ மாநகராட்சி- (1)
▶️பேரூராட்சிகள்- (10)
▶️வருவாய் கோட்டம்- (3)
▶️தாலுகா- (12)
▶️வருவாய் வட்டங்கள் – (12)
▶️வருவாய் கிராமங்கள்- (1067)
▶️ஊராட்சி ஒன்றியம்- (18)
▶️கிராம பஞ்சாயத்து- (860)
▶️MP தொகுதி- (2)
▶️MLA தொகுதி- (8)
▶️மொத்த பரப்பளவு – 6,188 ச.கி.மீ
▶️ மக்கள் தொகை-24,64,875
▶️ இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்து கொள்ள SHARE பண்ணுங்க!

News August 13, 2025

FLASH: திருவள்ளூர் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

image

திருவள்ளூர், அவரச எண் 100 மூலம் பேசிய மர்ம நபர் ஒருவர் திருவள்ளூர் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். தகவல் அறிந்து வந்த வெடிகுண்டு செயலிழப்பு பிரிவு போலீசார் மோப்ப நாய், மெட்டல் டிடெக்டர் கருவி உதவியுடன் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், ரயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

News August 13, 2025

சுதந்திர தின விடுமுறை – 300 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

image

சுதந்திர விடுமுறையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக நாளை (ஆக.14) முதல் ஆக.18- ஆம் தேதி வரை 300 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று சேலம் கோட்ட அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் நிர்வாக இயக்குநர் குணசேகரன் தெரிவித்துள்ளார். சேலத்தில் இருந்து மதுரை, கோவை, ஓசூர், பெங்களூரு, சென்னை, சிதம்பரம் உள்ளிட்ட நகரங்களுக்கும், மேற்கண்ட நகரங்களில் இருந்து சேலத்திற்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

News August 13, 2025

சேலம் ரயில்வே கோட்டம் அறிவிப்பு!

image

ஆக.15, 18, 21, 23, 26, 29 ஆகிய தேதிகளில் ஈரோடு- செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயில் (16845) கரூரில் இருந்து புறப்பட்டு செங்கோட்டை செல்லும். மறுமார்க்கத்தில், செங்கோட்டை-ஈரோடு எக்ஸ்பிரஸ் ரயில் (16846) செங்கோட்டையில் இருந்து புறப்பட்டு கரூர் வரை மட்டுமே இயக்கப்படும் என சேலம் ரயில்வே கோட்டம் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் அறிவித்துள்ளது.

News August 13, 2025

புதுச்சேரி காவல்துறையில் வேலை-APPLY NOW

image

புதுச்சேரி காவல்துறையில் காலியாக உள்ள 70 சப்-இன்ஸ்பெக்டர்கள், 148 கான்ஸ்டபிள் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. தகுதியும், விருப்பம் உள்ள புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் இன்று (ஆக.13) காலை 10 மணி முதல் வரும் செப்டம்பர் 12-ம் தேதி மாலை மாலை 3 மணிக்குள் https://recruitment.py.gov.in/ என்ற இனையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். இத்தகவலை அனைவருக்கும் SHARE செய்ங்க..

News August 13, 2025

சேலம்: இன்று முகாம் நடைபெறும் இடங்கள்!

image

சேலத்தில் (ஆக.13) உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்;
♦️ அஸ்தம்பட்டி மண்டலம் அண்ணாமலை திருமண மண்டபம் கன்னங்குறிச்சி.
♦️ துலுக்கனூர் செங்குந்தர் திருமண மண்டபம் துலுக்கனூர்.
♦️ ஆத்தூர் எல்.ஆர்.சி திருமண மண்டபம் கோட்டை.
♦️ ஓமலூர் பத்மவாணி மகளிர் கல்லூரி கோட்டகவுண்டம்பட்டி.
♦️ கொங்கணாபுரம் சுய உதவி குழு கட்டிடம் கச்சுப்பள்ளி.
♦️ மகுடஞ்சாவடி ஆர் கே திருமண மண்டபம் காக்காபாளையம்.

News August 13, 2025

திருப்பத்தூர் மக்களே…கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க

image

திருப்பத்தூர் மக்களே, இந்த மழைக்காலத்தில் வீட்டில் கரண்ட் இல்லையா? வோல்டேஜ் பிரச்சனையா? EB ஆபிஸ் எங்கு இருக்கிறது என்று தேடி அலைய வேண்டாம். வீட்டில் இருந்தே WHATSAPP மூலம் 94458 50811, 9443111912 இந்த நம்பரில் புகைப்படத்துடன் உங்கள் புகாரை பதிவு செய்யலாம். மேலும், கால் செய்து புகார் அளிக்க, 94987 94987 இந்த நம்பரை தொடர்பு கொள்ளலாம். அதிக பயனுள்ள இந்த தகவலை தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News August 13, 2025

மதுரை மாநகராட்சி மேயர் கணவர் GH-ல் அட்மிட்

image

மதுரை மாநகராட்சியில் ரூ.150 கோடி வரி முறைகேடு நடந்த விவகாரத்தில் மேயர் இந்திராணியின் கணவர் பொன்வசந்தை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று சென்னையில் வைத்து கைது செய்தனர். இந்நிலையில், தற்போது பொன்வசந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கூடுதல் விசாரணைக்காக அவர் மதுரை அழைத்து வரப்பட்ட நிலையில் அவர் தற்போது இராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

error: Content is protected !!