Tamilnadu

News August 13, 2025

திருவள்ளூர் காவல்துறை எச்சரிக்கை

image

திருவள்ளூர் மாவட்டத்தில், மழைக்காலம் தொடங்கிவிட்டதால், நீர்நிலைகளில் குழந்தைகள் குளிப்பதையோ, விளையாடுவதையோ தவிர்க்க வேண்டும் என மாவட்ட காவல்துறை எச்சரித்துள்ளது. நீர்நிலைகளின் அருகில் குழந்தைகளை தனியே விட வேண்டாம் எனவும், பாதுகாப்பில் பெற்றோர் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் காவல்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து விழிப்புடன் இருக்கும்படி பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News August 13, 2025

புதுகை மாவட்டத்தில் கிராம சபை கூட்டம் அறிவிப்பு

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 489 கிராம ஊராட்சிகளிலும் வருகிற சுதந்திர தினத்தன்று காலை 11.00 மணிக்கு கிராம சபைக்கூட்டம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் மு.அருணா அறிவித்துள்ளார். இக்கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல், தூய்மையான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வது குறித்து விவாதிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 13, 2025

திண்டுக்கல்: எண்ணெய்யை கணவன் மீது ஊற்றிய மனைவி

image

திண்டுக்கல் அருகே, கள்ளத்தொடர்பில் ஈடுபட்ட கணவன் அசோக்குமார் மீது, மனைவி அபிநயா மற்றும் அவரது 15 வயது மகன் ஆகியோர் காய்ச்சி வைத்திருந்த சுடு எண்ணெயை அவர் மீது ஊற்றி கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த அசோக்குமார் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். செம்பட்டி போலீசார் மனைவி மற்றும் மகன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News August 13, 2025

தர்மபுரி மாவட்டத்தில் கிராம சபை கூட்டம் ஆட்சியர் அறிவிப்பு

image

சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் ஆணையரின் அறிவுரைப்படி, தருமபுரி மாவட்டத்தில் உள்ள 251 கிராம ஊராட்சிகளிலும் ஆகஸ்ட் 15 அன்று காலை 11 மணிக்கு கிராம சபை கூட்டங்கள் நடைபெறவுள்ளன. இக்கூட்டத்தில் பொதுமக்கள், வாக்காளர்கள், மற்றும் அனைத்து துறை அலுவலர்களும் கலந்துகொண்டு தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் சதீஸ் அறிவித்துள்ளார்.

News August 13, 2025

திருவாரூர் இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

image

திருவாரூர் மாவட்டத்தில் (12.08.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகளின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேர குற்றங்களை தடுக்க காவல் துறையின் உடனடி உதவிக்கு, மேலே கொடுக்கப்பட்டுள்ள எண்களை அழைக்கலாம். அல்லது 100 ஐ டயல் செய்யலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!

News August 13, 2025

ஈரோடு நவீன நூலகத்தில் நூலகர் தின விழா

image

ஈரோடு, சம்பத் நகரில் உள்ள நவீன நூலகத்தில் நூலகர் தினவிழா நேற்று கொண்டாடப்பட்டது. இதில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் ச.கந்தசாமி பங்கேற்றார். தொடர்ந்து, அங்கு உள்ள நூலக தந்தை டாக்டர்.எஸ்.ஆர்.அரங்கநாதன் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் அங்கிருந்த வாசகர்களுடன் ஆட்சியர் கலந்துறையாடினார்.

News August 13, 2025

திண்டுக்கல்லில் டாஸ்மாக் கடைகள் இயங்காது

image

திண்டுக்கல் மாவட்டம் சுதந்திர தினத்தை முன்னிட்டு, 15.08.2024 அன்று அனைத்து விதமான மதுபானக் கடைகள் மூடப்படும். அன்றைய நாளில் மதுபானங்கள் விற்பனை செய்யப்படமாட்டாது. மேலும், அன்றைய தினத்தில் விதிகளுக்கு மாறாக மது விற்பனை ஏதும் செய்யப்பட்டால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். என மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன்தெரிவித்துள்ளார்.

News August 13, 2025

விலாசம் கேட்பது போல் நடித்து பெண்ணிடம் தாலிச் செயின் பறிப்பு

image

கொங்கராயபாளையம் கிராமத்தைச் சேர்ந்த சங்கமித்திரை தனது விவசாய நிலத்தில் மாட்டு சாணம் அள்ளிக்கொண்டிருந்தார். அப்போது, விலாசம் கேட்பது போல் நடித்து அவரிடம் இருந்து 7 சவரன் தாலிச் சங்கிலியை 17 வயது மதிக்கத்தக்க இளைஞர் பறித்துக்கொண்டு ஓடிவிட்டார். இச்சம்பவம் குறித்து வரஞ்சரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து குற்றவாளியைத் தேடி வருகின்றனர்.

News August 13, 2025

பாடாலூர் அருகே விபத்து ஏற்படுத்திய ஓட்டுனர் கைது

image

பாடாலூர் சந்தைப்பேட்டை அருகே கடந்த மாதம் 31ம் தேதி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்த நம்பு குறிச்சி கிராமத்தை சேர்ந்த ரங்கராஜ் (63) மீது கனரக வாகனம் மோதி விபத்து ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்று விட்டனர். பின் சிசிடிவி கேமிரா மூலம் போலீசார் தீவிர தேடுதல் பணி நடைபெற்றது. இதையடுத்து கள்ளக்குறிச்சி மொகலா கிராமத்தை சேர்ந்த ஏழுமலை மகன் அய்யனாரை (23) என்பவரை (ஆகஸ்ட் 11) கைது செய்தனர்.

News August 13, 2025

சேலம்: 879 கிலோ கஞ்சா எரித்து அழிப்பு !

image

சேலம் மாநகரத்தில் குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட கஞ்சாவை அழிக்க நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, சேலம் மாநகர காவல்துறை ஆணையாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, எடப்பாடி அரசு கலைக் கல்லூரி அருகே காவல்துறை உயர் அதிகாரிகள் முன்னிலையில் நேற்று (ஆக.12) சுமார் 879.698 கிலோ கஞ்சாவை எரித்து அழித்தனர்.

error: Content is protected !!