Tamilnadu

News August 12, 2025

விநாயகர் கோவிலில் பிரதோஷம் எங்கு தெரியுமா?

image

பிரதோஷம் என்றால் சிவாலங்களில் நடைபெறுவது வழக்கம். ஆனால் தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தில் அமைந்துள்ள ஆயிரத்தென் விநாயகர் கோவிலில் சுவாமி,அம்பாள் சந்நிதி இருந்தாலும் இங்கு விநாயகப் பெருமானே ஆட்சி புரிவதால், பிரதோஷத்தன்று விநாயகருக்கும், மூஷிகருக்கும் சிறப்பு அபிசேகம் நடைபெற்று மூஷிக வாகனத்தில் பிரதோஷநாதராக பிரதோச விநாயகமூர்த்தி கிரிவலம் வருவார்.

News August 12, 2025

இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று ( ஆகஸ்ட் -12) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது ராணிப்பேட்டை ஆற்காடு சோளிங்கர் அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம் :9884098100

News August 12, 2025

இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (12.08.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News August 12, 2025

கோவை: இன்றைய இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

கோவை, பெ.நா.பாளையம், பேரூர், கருமத்தம்பட்டி, பொள்ளாச்சி, வால்பாறை ஆகிய பகுதிகளில் இன்று (ஆகஸ்ட்.12) இரவு நேர ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உள்ளூர் அதிகாரியை, மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100ஐ டயல் செய்யலாம் என கோவை மாநகர போலீசார், தங்களது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.

News August 12, 2025

ராமேஸ்வரத்திற்கு கூடுதல் ரயில்கள் இயக்க வாய்ப்பு

image

ராமேஸ்வரத்திற்கு வரும் அனைத்து மின்சார ரயில்களும் திருச்சி மற்றும் மதுரையில் டீசல் இன்ஜின்களாக மாற்றப்பட்டு பின் அனுப்பப்படுகிறது. தற்போது ராமேஸ்வரம், மண்டபம், பாம்பன் உள்ளிட்ட பகுதிகளில் ரயில்வே பாதையில் மின் கம்பங்கள் அமைக்கும் பணி முடிவடையும் தருவாயில் உள்ளது. இதனால் பல்வேறு மாநிலங்களில் இருந்து நேரடியாக மின்சார ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே துறை வட்டாரம் தெரிவித்துள்ளது.

News August 12, 2025

வேலூர்: காவல்துறை இரவு ரோந்து பணி விபரம்

image

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் மற்றும் முக்கிய இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்பாக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு வந்து பணி செய்து வருகின்றனர். அதன்படி இன்று (ஆக.12) இரவு ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.

News August 12, 2025

இரவு காவல் பணி அதிகாரிகள் விபரம்

image

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் உத்தரவின் படி நெல்லை மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட்.12) இரவு முதல் நாளை காலை 6 மணி வரை காவல் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் பெயர் விபரம் காவல் சரகம் வாரியாக மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் கைபேசி எண்ணும் தரப்பட்டுள்ளது. காவல் உதவி தேவைப்படுபவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரியை தொடர்பு கொள்ளலாம்.

News August 12, 2025

நீலகிரி:அரசு மருத்துமனைகளில் வேலை வாய்ப்பு!

image

நீலகிரி மாவட்டத்தில் செயல்படும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனை மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள Health Inspector பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில், முற்றிலும் தற்காலிகமாக நிரப்பப்பட உள்ளது. மாத ஊதியமாக ரூ.14,000 வழங்கபடும். இது குறித்து மேலும் விவரங்களுக்கு மற்றும் விண்ணப்பிக்க இந்த <>லிங்கை கிளிக்<<>> செய்யவும். (SHARE IT

News August 12, 2025

துப்பாக்கியால் சுட்ட வழக்கு – குண்டர் சட்டத்தில் அடைப்பு

image

விக்கிரவாண்டி அருகே வாக்கூர் கிராமத்தில் ஜூலை 12-ம் தேதி குடும்ப தகராறில் தனது மனைவி லாவண்யா, தாய் பச்சையம்மாள், மற்றும் சித்தப்பா மகன் கார்த்திக் ஆகியோரை துப்பாக்கியால் சுட்டதில் தம்பி கார்த்திக், மனைவி லாவண்யா சிகிச்சை பலனின்றி உயிரிழந்த வழக்கில் தென்னரசு என்பவர் கைது செய்து சிறையில் இருந்த நிலையில் இன்று(ஆக.12) குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்

News August 12, 2025

கரூர்: மாதத்தில் 5 நாள் பணியோடு, ஊர்க்காவல் படையில் வேலை!

image

கரூர் மாவட்ட ஊர்க்காவல் படையில் ஆண் – 37, பெண் – 5 என மொத்தம் 42 ஊர்க்காவல் படை வீரர் பணியிடங்கள் காலியாக உள்ளன. விண்ணப்பதாரர்கள் SSLC முடித்திருக்க இருக்க வேண்டும். மாதத்தில் 5 நாட்கள் பணி வழங்கப்படும். நாளொன்றுக்கு ரூ.560 ஊதியம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் (20.08.2025)க்குள் கரூர் ஆயுதப்படை வளாகத்தில் உள்ள ஊர்க்காவல் படை அலுவலகத்தில் நேரில் சென்று பதிவு செய்யலாம்.

error: Content is protected !!