Tamilnadu

News August 12, 2025

நோய்களை நீக்கும் கோவை வாதப் பிள்ளையார்!

image

கோவை கோட்டப்பாளையத்தில் வாதப் பிள்ளையார் கோயில் உள்ளது. சுயம்பு மூர்த்தியாக உள்ள பிள்ளையாரை வணங்கி, அவரின் மீது படிந்திருக்கும் நல்லெண்ணெயை எடுத்து தடவி வந்தால், வாதம், நரம்பு, மூட்டுநோய்கள் குணமாகுமாம். ஒரு நூல் கண்டு வாங்கி, நூலின் ஒரு முனையை ஒரு சூலத்தில் கட்டிவிட்டு, பிள்ளையாரை பிரார்த்தனை செய்து, நூல் கண்டு தீரும் வரை பிள்ளையாரை சுற்றிவந்தால் உடலில் உள்ள பிணிகள் நீங்குமாம். SHARE பண்ணுங்க!

News August 12, 2025

திருப்பூரில் அடுத்தடுத்து கொலை சம்பவங்கள்!

image

திருப்பூரில் கடந்த சில மாதங்களில் வரதட்சணை கொடுமையில் ரிதன்யா தற்கொலை மற்றும் அதன் தாக்கம் குறையும் முன் ப்ரீத்தி என்ற மற்றுமொரு பெண்ணும் தற்கொலை செய்து கொண்டார். மேலும் மக்களை காக்கும் காவலர் சண்முகவேல் கொலை , வழக்கறிஞர் முருகானந்தம் கொலை, தனிமையில் இருக்கும் முதியவர்களை தாக்குதல் என தொடர்ந்து நடைபெறும் சம்பவங்கள் திருப்பூர் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்துகிறது.

News August 12, 2025

தென்காசி: கிராமங்களுக்கு கலெக்டரின் முக்கிய அறிவிப்பு

image

தென்காசி மாவட்டத்தில் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி கிராம சபை கூட்டம் இக்கிராம சபைக் கூட்டத்தினை கண்காணிக்க மாவட்ட அளவிலான உதவி இயக்குநர் நிலை அலுவலர்கள் மற்றும் வருவாய் வட்டாட்சியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இக்கிராம சபை கூட்டங்களில் கிராம ஊராட்சிகளின் அனைத்து பொதுமக்களும் கலந்துகொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர், இ.ஆ.ப தெரிவித்துள்ளார். *ஷேர் பண்ணுங்க

News August 12, 2025

நாமக்கல்: மாணவிக்கு பாலியல் தொல்லை.. சிறப்பு SI கைது!

image

நாமக்கல், கொல்லிமலை அருகே வாழவந்திநாடு காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாரளாக மோகன் (வயது 54) என்பவர் பணிபுரிந்து வந்தார். இவர் மீது கல்லூரி மாணவி ஒருவர், பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் அளித்தார். இதையடுத்து நாமக்கல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மோகன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் அவரை கைது செய்து, போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

News August 12, 2025

சேலத்தில் தொழில் தொடங்க SUPER வாய்ப்பு!

image

சேலம் மாவட்டத்தில் அரசு கல்லூரி வளாகங்களில் சிறுதானிய உணவகம் அமைத்திட விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார். மேற்படி, விண்ணப்பங்களை நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ திட்ட இயக்குநர், மகளிர் திட்டம், அறை எண் 207, இரண்டாம் தளம், மாவட்ட ஆட்சியரம், சேலம் என்ற முகவரியில் ஆக.18 மாலை 05.00 மணிக்குள் சமர்ப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE பண்ணுங்க!

News August 12, 2025

சிவகங்கை: இந்த எண்களை SAVE பண்ணுங்க..!

image

சிவகங்கை மாவட்ட தீயணைப்பு துறை எண்கள்:
▶️சிவகங்கை – 04575240301
▶️தேவகோட்டை – 04561272200
▶️மானாமதுரை – 04574258599
▶️காரைக்குடி – 04565221101
▶️திருப்பத்தூர் – 04577 266245
▶️சிங்கம்புணரி – 04577242225
▶️இளையான்குடி – 04564245101
▶️புதுவயல் – 04565282899
தீ விபத்து போன்ற அவசர உதவி தேவைப்படும் காலங்களில் இந்த நம்பர்க்கு CALL பண்ணுங்க. SHARE IT..!

News August 12, 2025

பவானி அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

image

ஈரோடு மாவட்டம் பவானி அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சிதலைவர் கந்தசாமி மருத்துவமனையில் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டுள்ளவர்களை சந்தித்து முறையாக சிகிச்சை அளிக்கப்படுகிறதா என்பது குறித்து கேட்டு அறிந்து மருந்துகள் வைக்கப்பட்டுள்ள அறைகளில் போதுமான அளவு மருந்து மாத்திரைகள் இருப்பு உள்ளதா என்பது குறித்து பணியில் இருந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களிடம் கேட்டு அறிந்தார்.

News August 12, 2025

சென்னை ஐகோர்ட் மாடியில் இருந்து குதித்த பெண்

image

சென்னை ஐகோர்ட்டில் இன்று ஆட்கொணர்வு வழக்கு ஒன்றில் 15 வயது சிறுமி ஒருவர் விசாரணைக்கு ஆஜர்படுத்தப்பட்டார். இவ்வழக்கின் விசாரணையில் சிறுமியை காப்பகத்துக்கு அழைத்துச் செல்ல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதில் அதிருப்தி அடைந்த சிறுமி ஐகோர்ட் முதல் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றார். இதில் சிறுமிக்கு பலத்த காயம் ஏற்பட்டதால் GH-ல் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

News August 12, 2025

தஞ்சை: Car , Bike-க்கு தேவையில்லாமல் Fine வருதா?

image

தஞ்சை மக்களே! உங்க வண்டிக்கு நீங்க பயன்படுத்தாத போது போக்குவரத்து வீதிமீறல்ன்னு சொல்லி உங்க வாகனம் மீது தேவை இல்லாம FINE விழுந்துருக்கா (அ) EXTRA FINE போட்டுருக்காங்களா. அப்படி FINE விழுந்துருந்தா இதை பண்ணுங்க. இங்கே <>க்ளிக் <<>>பண்ணி போக்குவரத்து வீதிமீறல் ஈடுபடவில்லை (அ) EXTRA FINE போட்டது குறித்து கம்பளைண்ட் பண்ணா உங்களுக்கு இந்த FINE நீக்கிருவாங்க. இந்த சூப்பரான தகவலை தெரியபடுத்த SHARE பண்ணுங்க!

News August 12, 2025

புதுச்சேரியின் பண்டையகால நகரம் பற்றி தெரியுமா?

image

புதுச்சேரியில் உள்ள அரிக்கமேடு கிராமம் சோழர் காலத்தில் மீனவ கிராமமாக இருந்ததாக கூறப்படுகிறது. இங்கு கி.மு 200 முதல் கி.பி 200 வரை கடல் வாணிபம் நடைபெற்றதாக அகழாய்வுகள் தெரிவிக்கின்றது. இங்கிருந்து ரோம் நகரத்திற்கு கடல் வாணிபம் நடைபெற்றுள்ளது. இங்கு ரோம் அரசரின் உருவம் பொறித்த நாணயங்கள், மணிகள், ரெடகோட்டா பொம்மைகள் கண்டறியப்பட்டுள்ளது. வரலாற்று சிறப்புமிக்க இவ்விடத்தை பற்றி பிறருக்கும் பகிரவும்..!

error: Content is protected !!