India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஆர். அழகு மீனா தலைமையில் மாவட்ட அலுவலக ஆட்சியகத்தின் அலுவலகத்தில் உள்ள குறள் கூட்டரங்கில் முன்னாள் இராணுவ படைவீரர் குறைதீர்க்கும் கூட்டம் நடைப்பெற்றது. கூட்டத்தில் ஏராளமான முன்னாள் ராணுவ வீரராகள் கலந்து கொண்ட நிலையில் முன்னாள் இராணுவ வீரர்களின் மனுக்கள் மற்றும் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (ஆக.18) இரவு ரோந்து பணியில் ஈடுபடவுள்ள காவலர்களின் பட்டியலை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. பொதுமக்கள் தங்களின் அவசர தேவைக்கு அவர்களை அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரவில் காவல்துறை உதவி தேவைப்படும் நபர்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ள எண்ணிற்கோ, அல்லது 100-க்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் நண்பர்களுக்கு பகிங்கள்.
கரூர் மாநகராட்சி வார்டுகள் 8, 9 (மீனாட்சி மண்டபம், வெங்கமேடு), கரூர் வட்டாரம் KTLOA திருமண மண்டபம் (மண்மங்கலம்), பள்ளப்பட்டி நகராட்சி வார்டுகள் 11, 21 (ஷாதி மஹால்), தெற்கு மந்தை தெரு, க.பரமத்தி மேற்கு ஒன்றியம் அஞ்சூர் ஊராட்சி சமுதாய கூடம், காந்தி நகர் உள்ளிட்ட இடங்களில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் கீழ் சிறப்பு முகாம் நாளை நடைபெறுகிறது. பொதுமக்கள் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது
திருவண்ணாமலை மாவட்ட காவல்துறையின் சார்பாக இன்று (ஆக-18) இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ள காவல்துறை அதிகாரிகள் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தங்களுடைய பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக செயல்படக்கூடிய நபர்கள் இருந்தாலோ அல்லது பாதுகாப்பின்மை பிரச்சனையை ஏற்பட்டாலோ அவர்களுடைய தொலைபேசி எண்கள் (அ) 100 என்ற எண்ணை அழைத்து புகார்களை பதிவு செய்யலாம்.
சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி வெளியிட்டுள்ள அறிக்கையில், செப்டம்பர் மாதம் 9ஆம் தேதி செஞ்சிலுவை சங்க ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. காலை 9 மணிக்கு நடைபெற உள்ள கூட்டத்திற்கு அனைத்து உறுப்பினர்களும் தவறாமல் தங்களது ஆதார் அட்டை, அடையாள அட்டை, பதிவு செய்யப்பட்ட ஆயுட்கால உறுப்பினர் அட்டை ஆகியவற்றை கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
கோவை மக்களே, அரசு பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்கு புகார் எண்ணை போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது. பயணிகளை ஓட்டுநர், நடத்துநர்கள் ஏற்ற மறுப்பது, நிறுத்தத்தில் நிற்காமல் செல்வது, தாமதமாக பேருந்து வருவது, சில்லறை பிரச்சனை, தவறான நடத்தை போன்ற புகார்களை 1800 599 1500 இந்த கட்டணமில்லா நம்பரில் தொடர்பு கொண்டு பயணிகள் தெரிவிக்கலாம் என போக்குவரத்துத்துறை கூறியுள்ளது. இதை SHARE பண்ணுங்க.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (18.08.2025) இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகள் பற்றிய விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை மற்றும் அரக்கோணம் உபமாவட்டங்களுக்குட்பட்ட காவல் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் மற்றும் அவர்களின் தொடர்பு எண்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. பொதுமக்கள் அவசரநிலைகளில் இவர்களை தொடர்பு கொண்டு உடனடி உதவி பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் பவானி நகராட்சிக்கு உட்பட்ட வர்ணபுரம் 4வது வீதி பகுதியை சேர்ந்த நாகராஜ் என்பவரது மனைவி விஜயா வயது 38 என்பவர். இன்று மதியம் சுமார் 3 மணிக்கு வீட்டில் தனியாக இருந்த போது, வீட்டில் உள்ளே நுழைந்த மர்ம நபர் வீட்டில் இருந்த அரிவாள் மனையால் அவரை வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பி விட்டார். இந்த சம்பவம் குறித்து பவானி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பகுதியை சேர்ந்தவர் நடராஜன் (70) – கவிதா(60) தம்பதியினர். திடீரென நடராஜனுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நடராஜன் உயிரிழந்தார். இதனையறிந்த மனைவி கவிதா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கணவன் இறந்தது துக்கத்தில் மனைவி தற்கொலை செய்து கொண்டு சம்பவம் கும்பகோணத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருவாரூர் வருவாய் கோட்டத்தில் உள்ள விவசாயிகளின் குறைகளை கேட்டு அறிந்து அதனை தீர்ப்பது தொடர்பாக வரும் ஆக.21ஆம் தேதி மாலை 4 மணி அளவில் திருவாரூர் வருவாய் கோட்ட அலுவலகத்தில் விவசாய குறைதீர் கூட்டம் திருவாரூர் வருவாய் கோட்ட அலுவலர் தலைமையில் நடைபெற உள்ளதாக திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இதில் விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெற கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.