Tamilnadu

News August 11, 2025

மயிலாடுதுறையில் பலரும் அறிந்திடாத கடற்கரை!

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மிக முக்கியமான சுற்றுலாத் தலங்களுள் திருமுல்லைவாசலில் உள்ள கூழையார் கடற்கரை ஒன்றாகும். இங்கு நதியும், கடலும் ஒன்றாக இருப்பது போல் காட்சியளிப்பதால் பார்பதற்கு மிக அழகானதாக தோன்றுகின்றது. பலரும் அறிந்திடாத ஈந்த கடற்கரையில் நிலவும் அமைதியான சூழலுக்காகவே இக்கடற்கரையை பற்றி அறிந்தவர்கள் அடிக்கடி வருகின்றனர். அனைவருக்கும் ஷேர் செய்து நம்ம ஊரு கடற்கரையை தெரியப்படுத்துங்கள்

News August 11, 2025

தென்காசி: மிஸ் பண்ணாதீங்க.. நாளை கடைசி நாள்!

image

தென்காசி மாவட்டத்தில் காலியாக உள்ள 18 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி இருந்தது. மாத சம்பளம் – ரூ.15,100 முதல் ரூ.35,100 வரை. 21 வயது நிரம்பிய தமிழ் எழுத படிக்க தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பணிக்கு விண்ணப்பிக்க நாளை (ஆக. 12) கடைசி நாள் என்பதால், விண்ணப்பிக்கதோர் உடனே<> இந்த தளத்தின் <<>>மூலம் விண்ணப்பிக்கலாம். சொந்த ஊரில் அரசு வேலை தேடுவோருக்கு உடனே SHARE பண்ணுங்க.

News August 11, 2025

புதுக்கோட்டை மாவட்டத்தில் மின்தடை அறிவிப்பு

image

புதுக்கோட்டையில் பல்வேறு துணை மின் நிலையங்களில் நாளை (ஆக.,12) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. அதன்படி, மாத்தூர், புதுப்பட்டி, செங்களாக்குடி, குளவாய்ப்பட்டி, திருமலை சமுத்திரம், நமணசமுத்திரம், திருவரங்குளம், லேணாவிளக்கு, இலுப்பூர், வீரப்பட்டி , மலைக்குடிபட்டி, கொடும்பாளூர், பாக்குடி, ராப்பூசல் மற்றும் புதுக்கோட்டை நகர் உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை SHARE பண்ணுங்க.

News August 11, 2025

திருவாரூர்: இறால் பண்ணைகளுக்கு எச்சரிக்கை!

image

திருவாரூர் மாவட்டத்தில், கடல்சார் நீர்வாழ் உயிரின வளர்ப்பு ஆணையச்சட்டம் 2005-ன் படி எந்த உவர்நீர் இறால் பண்ணைகளும் உரிய பதிவு இன்றி செயல்படக்கூடாது. அவ்வாறு உரிய அனுமதி இன்றி செயல்படும் இறால் பண்ணைகள் கண்டறியப்பட்டால், உரிமமின்றி செயல்படும் இறால் பண்ணைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் மோகனச்சந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இத்தகவலை SHARE செய்ங்க…

News August 11, 2025

காஞ்சிபுரத்தில் முதல் மனைவி கொடூர கொலை!

image

வாலாஜாபாத்தை சேர்ந்த மதன் தனது 2ஆவது மனைவி சுகன்யா உடன் வாழ்ந்து வந்தார். அண்மையில், முதல் மனைவி லைலா குமாரி உடன் மீண்டும் பழக்கம் ஏற்பட்டு, அவ்வப்போது சந்தித்து பேசி வந்துள்ளார். இதனால் மதன் – சுகன்யா இடையே அடிக்கடி சண்டை வந்துள்ளது. லைலா குமாரி தன்னை வசியம் செய்ததாக நினைத்து, அவரை வனப்பகுதிக்கு வரவழைத்து கொலை செய்துள்ளார். பின்னர், போலீசார் விசாரணையில் உண்மைகள் வெளிவர, சரணடைந்தார்.

News August 11, 2025

மதுரையில் டிரெக்கிங் செல்ல BEST PLACE

image

வாடிப்பட்டி அருகே குட்லாடம்பட்டி அருவியின் தடாகை பாதையில் மீண்டும் மலையேற்றம் துவங்கியுள்ளது. வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறுகளில் வனத்துறை அலுவலர்கள் உதவியோடு மலையேற்றம் நடைபெறும். 6வயதிற்கு மேற்பட்டோர் மலையேற்றம் புரியலாம். விரும்புவோர் தமிழக வனத்துறை சார்பில் ஏற்படுத்தப்பட்ட இந்த<> இணையத்தில் புக்<<>> பண்ணலாம். இந்த வாரம் டிரக்கிங் செல்ல சரியான இடம் உங்க நண்பருக்கு SHARE பண்ணி கூட்டிட்டு போக சொல்லுங்க

News August 11, 2025

திருச்சியில் மின்தடை அறிவிப்பு

image

திருச்சி மெயின்கார்ட் மற்றும் கம்பரசம்பேட்டை துணை மின் நிலையங்களில் நாளை (ஆக.,12) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதன்படி, கரூர் பைபாஸ்ரோடு, சிந்தாமணி, ஓடத்துறை, சிங்காரத்தோப்பு, உறையூர் ஹவுசிங் யூனிட், சத்திரம் பஸ் ஸ்டாண்ட், மல்லியம்பத்து, ஆளவந்தான்நல்லூர், சீராத்தோப்பு, கம்பரசம்பேட்டை, முத்தரசநல்லூர், பழூர், ஜீயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை SHARE பண்ணுங்க.

News August 11, 2025

தூத்துக்குடியில் ரூ.10,000 உதவித்தொகையுடன் பயிற்சி!

image

தூத்துக்குடி வேலைவாப்பு & பயிற்சித்துறை சார்பில் மாவட்ட அளவிலான தேசிய தொழிற்பயிற்சி சேர்க்கை முகாம் கோரம்பள்ளம் ITI வளாகத்தில் இன்று தொடங்க உள்ளது. மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் என பல்வேறு துறைகளில் பயிற்சி வழங்கப்படுகிறது. 8, 10ம் வகுப்பு, ITI படித்த ஆண், பெண் இருபாலரும் கலந்து கொள்ளலாம். 200 இடங்கள் உள்ளன. ரூ.7,700 – ரூ.10,000 உதவி தொகை வழங்கப்படும். இப்பயனுள்ள தகவலை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க

News August 11, 2025

விருதுநகரில் ஆக.14ல் வேலை வாய்ப்பு முகாம்!

image

விருதுநகர், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் மூலம் வரும் ஆக.14 அன்று காலை 10 மணிக்கு மாவட்ட வேலை வாய்ப்பு மையத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் 25க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கும் இதில் 8-ம் வகுப்பு முதல் டிகிரி முடித்தவர்கள் வரை பங்கேற்கலாம். ஆர்வமுள்ளவர்கள் உடனே <>இங்கே க்ளிக்<<>> செய்து உங்களது விவரங்களை பதிவு செய்து மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க…

News August 11, 2025

வேலூர் மாவட்ட பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள் கவனத்திற்கு…

image

வேலூா் அரசு அருங்காட்சியகத்தில் வரும் 17ஆம் தேதி மாவட்ட அளவிலான ஓவியப்போட்டி நடைபெற உள்ளது. 1 – 3ஆம் வகுப்புக்கு சூரிய உதயம், 4 – 6ஆம் வகுப்புக்கு இயற்கை காட்சி, 7 – 9ஆம் வகுப்புக்கு தேசிய பெண் தலைவா்கள், 10 – +2 வகுப்புக்கு தேசிய ஆண் தலைவா்கள் ஆகிய தலைப்புகளில் போட்டிகள் நடைபெறவுள்ளன. முன்பதிவுக்கு 76675-80831, 94438-85207 எண்களில் தொடர்பு கொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க. பரிசுகளை அள்ளுங்க.

error: Content is protected !!