India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பிரியா மஹாலில் இன்று (ஆக.10) ஆம்பூர் மரபுசார் பாரம்பரிய அரிசி மற்றும் விதைகள் கண்காட்சி நடைபெறுகிறது. காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை அனுமதி இலவசம். கண்காட்சியில் பாரம்பரிய கலை நிகழ்ச்சி, இயற்கை வேளாண்மை விற்பனையகங்கள், மூத்த முன்னோடி ஆளுமைகளின் சிறப்புரை, பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன விருப்பம் உள்ளவர்கள் பங்கேற்கலாம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
மதுரை மாநகர ஆயுதப்படை வளாகத்தில் செயல்பட்டு வரும் காவலர் மருத்துவமனைக்கு வேண்டிய மருத்துவ உபகரணங்களான தெர்மா மீட்டர், stretcher, எடை இயந்திரம், உயரம் அளவிடும் கருவி மற்றும் சக்கர நாற்காலி போன்றவற்றை இன்று (ஆக.09) மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மாநகர காவல் ஆணையர் லோகநாதன் காவலர்களின் நலன் கருதி காவலர் மருத்துவமனை மருத்துவர்களிடம் வழங்கினார்.
வேலூர் மாவட்டத்தில் ஆக.9 இரவு 10 மணி முதல் இன்று(ஆக.10) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ள காவலர்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது மாவட்ட காவல் துறை. மேலே குறிப்பிட்டுள்ள எண்களில் தங்கள் பகுதியில் ஏதேனும் அசம்பாவிதம் நேரும்போது அருகே உள்ள காவலரது எண்ணுக்கு தொடர்புக்கொண்டு தெரியபடுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (09.08.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் தென்மேற்கு பருவக்காற்று சீசன் நீடிக்கும் நிலையில் கடந்த ஒரு வாரமாக காற்றின் வேகம் ஏற்றம் இறக்கமாக உள்ளது. இதனால் பழவூர், காவல்கிணறு, கலந்தபனை உள்ளிட்ட பகுதிகளில் காற்றாலை மின் உற்பத்தி ஏற்ற இறக்கமாக உள்ளது. தமிழகத்தின் ஒட்டுமொத்த காற்றாலை மின் உற்பத்தி நேற்று 3000 மெகாவாட்டை கடந்த நிலையில் இன்று (ஆகஸ்ட் 9) அதிகபட்ச காற்றாலை மின் உற்பத்தி 2190 மெகாவாட்டாக சரிந்தது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று (09) நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் நடைபெற்ற முகாமில் 230 அமைப்பு சாரா தொழிலாளர்கள், 95 தூய்மை பணியாளர்கள், உள்ளிட்ட 1448 நபர்கள் பயனடைந்துள்ளனர். இதில் 149 மாற்றுத்திறனாளிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் 23 நபர்களுக்கு மருத்துவ காப்பீடு அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு
சென்னையில் இன்று (ஆக.9) இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வரியாக உள்ளது. மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள கவலைகளை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.
திருநெல்வேலி மாவட்டம் உட்கோட்ட இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி மானூர், ஏர்வாடி, உவரி ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும், வீரவநல்லூர், பாப்பாக்குடி காவல் நிலையங்களின் உதவி ஆய்வாளர்களும், இன்று (ஆக.09) இரவு ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். துணை காவல் கண்காணிப்பாளர் சந்திரன் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 17-ம் தேதி வேலூர் கோட்டை அரசு அருங்காட்சியகம், வட ஆற்காடு ஓவியர் சங்கம் மற்றும் டாட் இமேஜிங் நுண் கலைக்கூடம் இணைந்து நடத்தும் மாவட்ட அளவிலான ஓவிய போட்டி அரசு அருங்காட்சியகத்தில் நடைபெற உள்ளது. இதில் 1 வயது முதல் 12 வயது வரை உள்ள மாணவர்கள் பங்கேற்கலாம். முன் பதிவிற்கு 7667580831, 9443885207 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் இன்று (09.08.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.