Tamilnadu

News August 10, 2025

நாகை அவுரி திடலில் இலவச கண் சிகிச்சை முகாம்

image

நாகை புதிய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள அவுரி திடலில் இன்று (ஆக.10) காலை 8 மணி முதல் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமனது லயன்ஸ் கிளப் மற்றும் தனியார் கண் மருத்துவமனை இணைந்து நடைபெற உள்ளது. இதில், பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

News August 10, 2025

கடலூர்: ரத்தசோகை பரிசோதனை செய்ய 71 குழுக்கள்

image

கடலூர் மாவட்டத்தில் பொதுமக்களிடம் இரத்தசோகை பரிசோதனைக்காக மருத்துவர், ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர், செவிலியர், சுகாதார ஆய்வாளர், கிராமப்புற மருத்துவ அலுவலர், மருந்தாளர் ஆகிய 6 நபர்களை கொண்ட குழு உருவாக்கப்பட்டுள்ளது. மாவட்ட முழுவதும் மொத்தம் 71 குழுக்கள் உருவாக்கப்பட்டு, ஒரு குழுவின் மூலம் ஒரு வாரத்திற்கு 300 நபர்களை பரிசோதித்திட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News August 10, 2025

புதுச்சேரி: தமிழ்நாடு கல்வி கொள்கையை பின்பற்ற வேண்டும்

image

புதுச்சேரி எதிர்க்கட்சித் தலைவர் சிவா இன்று வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் புதுச்சேரி மாணவர்களின் எதிர்காலம் தழைக்க மீண்டும் தமிழ்நாடு கல்விக் கொள்கையை புதுச்சேரி அரசு பின்பற்ற வேண்டும் என்றும் இல்லையேல் மக்கள் திரள் போராட்டத்தை தி.மு.கழகம் முன்னெடுக்க நேரிடும் என்றும் புதுச்சேரி அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் சிவா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

News August 10, 2025

பல்கலைக்கழக சான்றிதழ் எழுத்து தேர்வு; ஆட்சியர் ஆய்வு

image

பெரம்பலூர் மாவட்டத்தில் பகுதி நேர நாட்டுப்புற கலை பயிற்சி மையத்தில், கலை பண்பாட்டுத் துறையின் சார்பில் கரகாட்டம், சிலம்பாட்டம் மற்றும் தப்பாட்டம் ஆகிய கலைஞர்களுக்கான பல்கலைக்கழக சான்றிதழ் எழுத்து தேர்வு நேற்று (ஆக.9) நடைபெற்றது. அதனை மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு செய்தார். உடன் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

News August 10, 2025

அரியலூர் மாவட்டத்தில் ரோந்து பணி செல்லும் காவலர்கள் விவரம்

image

அரியலூர் மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை குறைக்கும் வகையில், அரியலூர் மாவட்டம் முழுவதும் தினம்தோறும், அரியலூர் மாவட்ட காவல் துறையினர் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்றைய (ஆகஸ்ட் 9) ரோந்துப் பணி செல்லக்கூடிய காவலர்களின் தொடர்பு எண் மாவட்ட காவல்துறை மூலம் வெளியிடப்பட்டுள்ளது. எனவே அவசரகால உதவிக்கு தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News August 10, 2025

விழுப்புரத்தில் இன்று மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம்

image

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் வட்டம் அவலூர்பேட்டை ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் இன்று (ஆக.10) காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை விழுப்புரம் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், அவலூர்பேட்டை ஊராட்சி மன்றம் மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில் மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற உள்ளது. சுற்றுப் பகுதியில் உள்ள பொதுமக்கள் இந்த முகாமில் பங்கேற்று பயன்பெறுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 10, 2025

காங்கிரஸ் புதிய நிர்வாகிகளை வாழ்த்திய எம்.பி

image

சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் கட்சியின் வட்டார, நகர, பேரூராட்சி தலைவர்களுக்கான நியமன கடிதத்தை நேற்று (ஆக.09) காரைக்குடியில் சிவகங்கை எம்.பி.கார்த்தி ப.சிதம்பரம் நிர்வாகிகள் இடம் வழங்கி வாழ்த்தினார். உடன் மாவட்ட தலைவர் சஞ்சய் காந்தி, காரைக்குடி எம்எல்ஏ எஸ்.மாங்குடி மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், புதிய நிர்வாகிகள் இருந்தனர்.

News August 10, 2025

விபத்தில் இறந்தவர்களுக்கு நிவாரணம் அறிவிப்பு

image

திருச்சி, லால்குடி அருகே இன்று நடைபெற்ற சாலை விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 6 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சமும், பலத்த காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000-மும் முதலமைச்சரின் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

News August 10, 2025

தஞ்சாவூர் : இரவு ரோந்து போலீசார் விவரம்

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட். 09) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News August 10, 2025

புதுக்கோட்டை இரவு நேர ரோந்து காவலர்களின் விபரம் 

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று இரவு 10, மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல் துறை  மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் தேவையுள்ளவர்கள் புதுக்கோட்டை மாவட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!