India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கான 45 நாட்கள் இலவச சிறப்புப் பயிற்சிக்கு விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார். இந்தப் பயிற்சிக்கு 8ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை படித்த, 18 முதல் 35 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் தகுதியானவர்கள். பயிற்சி காலத்தில் இலவச தங்குமிடம், உணவுடன், மாதம் ரூ.10,000 முதல் ரூ.20,000 வரை சம்பளத்துடன் வேலைவாய்ப்பும் வழங்கப்படும்.
திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை சார்பாக தினமும் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது .தெரியாத WhatsApp மற்றும் Telegram செயலிகளின் குழுக்கள் மூலம் போலியான ஆன்லைன் டிரேடிங் முறையில் பணத்தை செலுத்தி ஏமாராதீர்கள்!! (ஆகஸ்ட்-09) நேற்று அந்த வகையில் விழுப்புணர்வு புகைப்படத்தை திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை சார்பாக நேற்று தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டுறவு சங்க துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூட்டுறவுத்துறையில் உதவியாளர் மற்றும் இளநிலை உதவியாளர் பதினைந்து இடங்களுக்கு நேரடி நியமனம் செய்யப்பட உள்ளது http://drbrpt.in என்ற இணையதளம் வழியாக ஆகஸ்ட் 29 தேதி வரை உரிய சான்றுகளுடன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை நண்பர்களுக்கு பகிரவும்.
தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி), தினசரி பண்ணைகளில் ரொக்க விற்பனைக்கு, முட்டை விலையை அறிவித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று (ஆகஸ்ட் 9) மாலை நாமக்கல் மண்டல என்இசிசி தலைவர் பொன்னி சிங்கராஜ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முட்டை விலை 5 பைசா உயர்த்தப்பட்டு, ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ. 465 பைசாவாக நிர்ணயிக்கப்பட்டது.
மதுராந்தகம் அருகே மேலவளம்பேட்டையில் மருத்துவம் படிக்காமல் பிரகாஷ் என்பவர் மருத்துவராகப் பணியாற்றுவதாகக் கிடைத்த புகாரைத் தொடர்ந்து, மருத்துவப் பணிகள் இயக்குநர் மலர்விழி, மதுராந்தகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பிரகாஷின் ஆவணங்களை ஆய்வு செய்ததில், அவை போலியானவை எனத் தெரிய வந்தது. இதையடுத்து, போலீசார் பிரகாஷைக் கைது செய்து மேலும் விசாரித்து வருகின்றனர்.
திருப்பூர் பாளையக்காடு பகுதியில் பாலியல் தொழில் நடைபெற்று வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. தகவலின் அடிப்படையில் திருப்பூர் வடக்கு போலீசார் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர். சோதனையின் போது வாடகை வீட்டில் வைத்து பாலியல் தொழில் நடத்தி வந்தது தெரிய வந்தது. இது தொடர்பாக சேக் முகமது என்கிற சலீம் (30), விக்னேஷ் (23) மற்றும் பன்னீர்செல்வம் (35) ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறையின் புதிய மதுவிலக்கு அமலாக்க தடுப்புச்சட்டத்தின் படி சாராயம் காய்ச்சுவது,கடத்துவது, விற்பனை செய்வது,
சாராயம் காய்ச்ச தேவையான (வெல்லம், சர்க்கரை முதலிய) பொருட்களை பதுக்கி வைப்பது மிகப்பெரிய குற்றம், இதற்கு 7ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், ரூ.3லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும், மேற்படி குற்ற செயல்கள் பற்றி தகவல் தெரிவிக்க இலவச தொலைபேசி எண் 10581 அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வளர்ச்சியில் பின்தங்கிய (போக்கஸ் பிளாக்) எனும் 50 வட்டாரங்கள் மேம்பாட்டு திட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்டன. அதில் 3 ஆண்டுகளில் ரூ.5 கோடி செலவில் அடிப்படை வசதிகள் சிறப்பாக செய்து முடித்த தேனி மாவட்டத்திற்கான விருதை சென்னையில் நடந்த விழாவில் மாநில திட்டக்குழு செயல் துணைத் தலைவர் ஜெயரஞ்சனிடம் மாவட்ட ஊராட்சி அதிகாரிகள் பெற்றனர். அவர்களை மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் பாராட்டினார்.
நெல்லை மாவட்ட கலெக்டர் சுகுமார் இன்று விடுத்துள்ள செய்தி குறிப்பு: “போதை பொருள் இல்லாத தமிழ்நாடு என்ற தலைப்பில் பல்வேறு நடவடிக்கைகள் அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நெல்லை மாவட்டத்தில் பள்ளிகளிலும் அனைத்து வகை கல்லூரிகளிலும் மாணவர்களை உள்ளடக்கிய போதை பொருள் ஒழிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. விழிப்புணர்வு நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக 11ஆம் தேதி தமிழ்நாடு தின உறுதிமொழி எடுக்கப்படும்.
மண்டபம் கடற்கரை காவல் நிலைய சார்பு ஆய்வாளர் தாரிக்அமீன் தலைமையில் காவலர்கள் சரவணன் முத்துக்குமார் ஆகியோர் வேதாளை கடற்பகுதியில் வாகன தணிக்கை செய்தனர். அப்போது, அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை சோதனை செய்த போது, அதில் இலங்கைக்கு கடத்துவதற்காக 1000 கிலோ சுக்கு என்பது தெரிய வந்து, சரக்கு வாகனத்தையும், சுக்கு மூடைகளையும் நிலையம் கொண்டு வந்தனர். தப்பி ஓடியவர்களை தேடி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.