Tamilnadu

News August 18, 2025

சிவகங்கை: ரோந்து காவல் அதிகாரிகள் தொடர்பு எண்கள்

image

சிவகங்கை மாவட்டத்தில் முக்கிய நகரங்களில் (18.08.25)  இன்று இரவு 10 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட  
காவல் அதிகாரிகள் தொடர்பு எண்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் அவசர காலத்திற்கு அவர்களை அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்து தங்கள் புகார் பதிவு செய்யலாம் என சிவகங்கை மாவட்டக் காவல் துறை அறிவித்துள்ளது.

News August 18, 2025

3 கட்சிகள் விசாரணைக்கு ஆஜராக அழைப்பு

image

சேலம் அனைத்திந்திய தொழிலாளர் கட்சி, தமிழ்நாடு மக்கள் உரிமை கட்சி, திரிணாமூல் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி ஆகிய அங்கீகாரம் இல்லாத 3 அரசியல் கட்சிகள் விசாரணைக்காக, உரிய ஆவணங்களுடன் வரும் ஆகஸ்ட் 26ம் தேதி அல்லது அதற்கு முன்னதாகவோ தலைமை தேர்தல் அலுவலர், தலைமைச் செயலகம், சென்னை 600009 என்ற முகவரியில் ஆஜராகி உரிய ஆவணங்களுடன், பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News August 18, 2025

மதுரை புறநகர் பகுதி இரவு ரோந்து காவலர் எண் வெளியீடு

image

மதுரை மாவட்டத்தின் புறநகர் பகுதிகளான திருமங்கலம், ஊமச்சிகுளம், மேலூர் பகுதியில் இன்று (ஆக.18) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலகம் வெளியிட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் தேவைக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 18, 2025

தென்காசி மாவட்ட இரவு ரோந்து பணி காவலர்கள்

image

தென்காசி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு இரவு நேரங்களில் காவல் துறை உதவி தேவைப்பட்டால் பொதுமக்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது. இன்று (18-08-25) தென்காசி மாவட்ட காவல் மற்றும் நெடுஞ்சாலை இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகள் பற்றிய விபரம். அவசர உதவி தேவைப்படுபவர்கள் 100 அல்லது மாவட்ட கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் -9884042100 ஐ தொடர்பு கொள்ளலாம்.

News August 18, 2025

செங்கல்பட்டு இன்று இரவு ரோந்து பணி விவரம்

image

செங்கல்பட்டு மாவட்டம் இன்று (ஆகஸ்ட் 18) செங்கல்பட்டு மாமல்லபுரம் மதுராந்தகம் ஆகிய பகுதிகளில் இன்று இரவு ரோந்து பணி செய்யும் காவலர்கள் விவரம் கீழே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடுவார் பொதுமக்கள் ஏதேனும் அவசர தேவை என்றால் இந்த தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளவும். இரவு பணி செய்யும் பெண்களுக்கு இந்த செய்தியை ஷேர் செய்யுங்கள்.

News August 18, 2025

திருவாரூர் இன்று இரவு ரோந்து பணி விவரம்

image

திருவாரூர் மாவட்டம் இன்று (ஆகஸ்ட் 18) திருவாரூர், நன்னிலம், மன்னார்குடி ஆகிய பகுதிகளில் இன்று இரவு ரோந்து பணி செய்யும் காவலர்கள் விவரம் கீழே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடுவார் பொதுமக்கள் ஏதேனும் அவசர தேவை என்றால் இந்த தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளவும். இரவு பணி செய்யும் பெண்களுக்கு இந்த செய்தியை ஷேர் செய்யுங்கள்.

News August 18, 2025

குமரி மாவட்ட ஆட்சியரிடம் மடிக்கணினி பெற்ற மாணவன்

image

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக குறள் கூட்டரங்கில், அம்மாண்டிவிளை அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்று, நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்று இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் (IIIT) உயர்கல்வி பயில உள்ள மாணவன், மாவட்ட ஆட்சித் தலைவர் அழகுமீனாவை இன்று நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். மாணவனுக்கு ஆட்சியர் அழகு மீனா மடிக்கணினி வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

News August 18, 2025

மாமல்லபுரம் கடலுக்கு அடியில் பழங்கால கட்டுமான சிதைவுகள்

image

மாமல்லபுரம் கடலில் நேற்று (ஆக. 18) தொல்லியல் துறையின் கடல் ஆராய்ச்சி பிரிவின் கூடுதல் இயக்குனர் அப்ரஜிதா சர்மா தலைமையில் 5 பேர் கொண்ட மத்திய தொல்லியல் துறை கடல் ஆராய்ச்சி குழுவினர் பாதுகாப்பு கவச உடை அணிந்து கடற்கரை கோயில் அருகில் படகில் சென்று நவீன கருவி மூலம் ஆய்வு செய்தனர். இதில் கடலில் மூழ்கிய 6 கோவில்களில் 1 கோயிலின் தடயங்கள் பாசியுடன் உள்ள கருங்கல் கட்டுமானங்கள் கிடைத்ததாக தெரிவித்தனர்.

News August 18, 2025

அரியலூர் மாவட்ட இரவு ரோந்து காவலர் விவரம்

image

அரியலூர் மாவட்டத்தில் குற்றச் சம்பவங்களைத் தடுக்கும் வகையில், தினந்தோறும் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில், இன்று (ஆக.18) அரியலூர் பகுதியில் ரோந்து பணி செல்லக்கூடிய காவலர் பெயர் விவரம் மற்றும் தொடர்பு எண் வெளியிடப்பட்டுள்ளது. அவசர காலத்திற்கு இவர்களை அழைக்கலாம் என மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.

News August 18, 2025

3 கட்சிகளுக்கு மாவட்ட தேர்தல் அலுவலர் நோட்டீஸ்

image

திருவள்ளூர் மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட அண்ணா மக்கள் இயக்கம், சமத்துவ மக்கள் கழகம், தமிழர் முன்னேற்ற கழகம் ஆகிய கட்சிகள் கடந்த 6 ஆண்டுகளாக எந்த தேர்தலிலும் போட்டியிடாததால், அவற்றின் பதிவை ஏன் ரத்து செய்யக்கூடாது என தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டுள்ளது. இதற்கு வரும் 26 ஆம் தேதி தலைமை தேர்தல் அலுவலகத்தில் நேரில் ஆஜராகி எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!