Tamilnadu

News August 10, 2025

திருவாரூர் மாவட்டத்தில் 4,506 பேர் கைது

image

திருவாரூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக மது, அரசால் தடைசெய்யப்பட்ட கஞ்சா, புகையிலை பொருட்கள் விற்பனையில் ஈடுபடுபவர்கள், கடத்துபவர்கள், அச்செயலுக்கு உடந்தையாக இருப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, கடந்த ஜூலை மாதத்தில் சட்டவிரோதமாக கஞ்சா, மது, புகையிலை பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபட்ட 4,506 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக எஸ்.பி கருண் கரட் தெரிவித்துள்ளார்.

News August 10, 2025

புதுக்கோட்டை: சிறுமியை கடத்த முயன்ற சிறுவன்!

image

அறந்தாங்கி அருகே உள்ள அரசு பள்ளியில் 4-ம் வகுப்பு படிக்கும் மாணவியை பள்ளியின் அருகே முகத்தை மறைத்து கொண்டு நின்ற சிலர் கடத்தி செல்ல முயன்றனர். அப்போது அவர்களிடமிருந்து தப்பித்த மாணவி இதனை ஆசிரியரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து இப்புகாரின் பெயரில் காவல்துறையினர் திருநாளூர் தெற்கு கிராமத்தை சேர்ந்த பாண்டி (19), அதே ஊரைச் சேர்ந்த 16 வயது சிறுவன் கைது செய்தனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.

News August 10, 2025

பெரம்பலூர்: ரூ.18,000 சம்பளத்தில் செவிலியர் வேலை!

image

பெரம்பலூர் மாவட்டத்தில் காலியாக உள்ள Nurse, Pharmacist, Lab Technician பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு மாதம் ரூ.8,500 – 18,000 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இந்த லிங்கில்<<>> விண்ணப்பத்தை பதிவிரக்கம் செய்து தேவையான தகவல்களை பூர்த்தி செய்து வருகிற ஆகஸ்ட் 14ம் தேதிக்குள் மாவட்ட சுகாதார அலுவலகம், பெரம்பலூர் என்ற முகவரிக்கு தபால் மூலம் அனுப்ப வேண்டும். SHARE

News August 10, 2025

பெரம்பலூர்: குடற்புழு நீக்கம் சிறப்பு முகாம்

image

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரி மற்றும் அங்கன்வாடி மையம் உள்ளிட்ட இடங்களில் தேசிய குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம் (11.08.2025) அன்று நடைபெறவுள்ளது. மேலும் விடுபட்ட குழந்தைகளுக்கு (18.08.2025) அன்று வழங்கப்படவுள்ளது. எனவே குடற்புழு மாத்திரைகளை மாணவர்கள் மற்றும் பெண்கள் உட்கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.

News August 10, 2025

மயிலாடுதுறை: விநாயகர் சதுர்த்தி – கலெக்டர் அறிவிப்பு!

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகத்தினால் அனுமதிக்கப்பட்டுள்ள இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகளை கரைத்து சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் அறிவித்துள்ளார். நீர்நிலைகள் மாசுபடுவதை தடுக்கும் பொருட்டு வைக்கோல் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களை கொண்டு சிலை தயாரிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News August 10, 2025

சென்னையில் 15% சாலை விபத்துகள் குறைவு

image

சென்னையில் கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் சாலை விபத்துகள் 15 சதவீதம் ஆக தடுக்கப்பட்டுள்ளன என சென்னை போக்குவரத்து காவல் துறை கூடுதல் ஆணையர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். சென்னை சாலைகளில் 169 இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது என்றும், இதனால் குற்றங்கள் குறையும் என்றும் அவர் தெரிவித்தார்.

News August 10, 2025

சென்னையில் அதிகரித்து வரும் குடிநீர் பிரச்சனை

image

சென்னை தி.நகர் பகுதிகளில் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் தற்போது வரை நடவடிக்கை எடுக்காததால் அப்பகுதி உள்ள மக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே, அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இல்லையென்றால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என கூறுகின்றனர்.

News August 10, 2025

பாடியநல்லூர் மருத்துவ முகாமில் அமைச்சர் பங்கேற்பு

image

பாடியநல்லூர் மேல்நிலைப்பள்ளியில் மக்கள் நலவாழ்வு துறை சார்பில் நலன் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இம்முகாமில் தமிழக நலத்துறை அமைச்சர் நாசர் கலந்துகொண்டு, மார்பகப் புற்றுநோய் பரிசோதனை, இலவச கண் பரிசோதனை, காது-மூக்கு-தொண்டை சிகிச்சை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிகிச்சைகள் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ உதவிகளை துவக்கி வைத்தார். இந்த முகாமில் நூற்றுக்கணக்கானோர் பயனடைந்தனர்.

News August 10, 2025

மகளிர் சுய குழுக்களின் வாரசந்தை

image

தென்காசி மாவட்டம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மகளிர் குழுக்களின் இயற்கை சந்தை இன்று காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை பொட்டல் புதூர் பொன் நகர் அருகே வார சந்தையில் நடைபெறுகிறது. இதில் மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் நாட்டு காய்கறிகள் கீரை வகைகள் பழங்கள் அரிசி சிறுதானிய உணவுகள் தானியங்கள் செக்கு எண்ணெய் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது.

News August 10, 2025

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை முக்கிய அறிவிப்பு

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். OTP மூலமாகவோ அல்லது வேறு வகையிலோ மோசடியாக தங்கள் வங்கி கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டுவிட்டால் 1930 என்ற உதவி எண்ணை உடனடியாக தொடர்பு கொண்டு புகார் செய்யவும். உங்கள் பணம் மோசடி நபர்களிடமிருந்து மீட்டு தரப்படும். வேறு வகையான சைபர் குற்றத்திற்கு புகார் செய்ய <>www.cybercrime.gov.in<<>> என்ற இணையத்தில் தொடர்பு கொள்ளவும். ஷேர் பண்ணுங்க. யாரோ ஒருவருக்கு உதவும்!

error: Content is protected !!