India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ரேஷன் கார்டு திருத்த முகாமில், ரேஷன் கார்டில் உறுப்பினர் சேர்க்கை / நீக்கம், பெயர் மாற்றம், முகவரி மாற்றம், குடும்ப தலைவர் மாற்றம், புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க போன்ற பல்வேறு சேவைகளை செய்யலாம். முகாம்கள் அந்தந்த வட்டங்களில் எங்கு நடைபெறுகிறது என்பதை அதிகாரிகளை (வேலூர் – 0416-2252586, 0416-2220519, குடியாத்தம் – 04171-221177, காட்பாடி – 0416-2244647) தொடர்பு கொண்டு கேளுங்கள். ஷேர் பண்ணுங்க
மேலும் தேசிய உணவுப்பாதுகாப்பு சட்டம் மூலம் பயன்பெறும் முன்னுரிமை குடும்ப அட்டைகள், அந்த்யோதய அன்ன குடும்ப அட்டைகள், குடும்ப அட்டை தாரர்கள் குடும்ப அட்டையில் உள்ள அனைவரும் தங்களது விரல் ரேகையை பதிவு செய்திருக்க வேண்டும். இதுவரை பதிவு செய்யாதவர்கள் அருகில் உள்ள ரேஷன் கடைகளில் வரும் 25, 26 தேதிகளில் பதிவு செய்து கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்தள்ளார். ஷேர் பண்ணுங்க
சேலத்தில் இன்று (ஆக.9) ’உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்:
▶️ சூரமங்கலம் ராமகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளி.
▶️உடையாப்பட்டி ஸ்ரீ சேக்கிழார் திருமண மண்டபம் உடையாபட்டி.
▶️மேட்டூர் சிவகாம சுந்தரி திருமண மண்டபம் மேட்டூர்.
▶️தலைவாசல் ஸ்ரீ அன்னபூர்ணா திருமண மண்டபம்.
▶️ நங்கவள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வீரனூர்.
▶️ஓமலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி காமலாபுரம். ஆகிய பகுதிகளில் முகாம் நடைபெற உள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் சிறப்பு முகாம் இன்று (ஆக .09) காலை 10 மணியளவில் திருப்பத்தூர்- குரும்பர் தெரு, உடைய முத்தூர், நாட்றம்பள்ளி- கோனாபட்டு, வாணியம்பாடி- கிருஷ்ணாபுரம், ஆம்பூர்- பச்சகுப்பம் ஆகிய நியாய விலை கடைகளில் இந்த முகாம் நடைபெறுகிறது. குடும்ப அட்டையில் பெயர் நீக்கம், பெயர் சேர்த்தல், புதிய அட்டை விண்ணப்பித்தல் போன்ற சேவைகளை பெறலாம். ஷேர் பண்ணுங்க
திருச்சி மாவட்டத்தில் தொழிற்பழகுநர் (அப்ரண்டிஸ்) சேர்க்கை முகாம் வரும் ஆகஸ்ட் 11-ஆம் தேதி காலை 10 மணி அளவில், திருச்சி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெற உள்ளது. இதில் ஐ.டி.ஐ முடித்துவிட்டு இதுவரை தொழிற்பயிற்சி பெறாதவர்கள் கலந்து கொள்ளலாம். இதுதொடர்பான மேலும் விபரங்களுக்கு 0431-2553314 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை இளைஞர்களே, தமிழக சுற்றுசூழல் துறையில் புராஜக்ட் அசோசியேட், கணக்கு அதிகாரி, உதவியாளர் உள்ளிட்ட பணிகளுக்கு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஏதேனும் ஒரு டிகிரி, தட்டச்சு என பணிக்கேற்ற தகுதியுடையோர்<
நாமக்கல்: தமிழகம், புதுச்சேரியில் இருந்து இந்திய விமானப்படைக்கு ‘அக்னிவீரா்’ ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுக்கான ஆள்சேர்ப்பு முகாம், சென்னை தாம்பரம் விமானப்படை நிலையத்தில் செப். 2ஆம் தேதி முதல் ஆண்களுக்கும், 5ஆம் தேதி முதல் பெண்களுக்கும் நடைபெற உள்ளது. இதில், தகுதியுள்ள ஆண்கள், பெண்கள் பங்கேற்று பயனடையுமாறு நாமக்கல் மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டம் தக்கோலத்தில் தான் கி.பி 949ல் முதலாம் பராந்தகனின் மகன் ராஜாதித்யனுக்கும், ராஷ்டிரகூடர்களின் கங்க இளவரசர் பூட்டுகனுக்கும் இடையே போர் ஏற்பட்டது. ஆதித்த கரிகாலனை போல வீரமிக்க சோழ இளவரசனான ராஜாதித்யன் இந்த போரில் வீரமரணம் அடைந்தான். இவரது வீரத்தை போற்றும் விதமாக தான் அரக்கோணம் CISF ஆட்சேர்ப்பு பயிற்சி மையம் ராஜாதித்ய சோழன் (RTC), தக்கோலம் என மறுபெயரிடப்பட்டது. ஷேர் பண்ணுங்க
மடப்புரம் அஜித் உயிரிழந்த வழக்கில், கார் சாவியை நீண்ட நேரம் கழித்து தன்னிடம் கொடுத்ததாக நிகிதா கூறியிருந்தார். மேலும் காரை வடகரை வரை அஜித்தும், அவர் நண்பரும் ஓட்டி வந்ததாக கூறப்பட்டது. இதில், சிபிஐ அதிகாரிகள் வடகரையில் விசாரணையை தொடங்கினர். CCTV காட்சிகளை ஆய்வு செய்ததில், நிகிதா தான் காரை ஓட்டி வந்ததும், பார்க்கிங்கை விட்டு கார் வெளியே செல்லவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
சேலம் ஆகஸ்ட் 9 இன்றைய முக்கிய நிகழ்வுகள் ▶️ காலை 9:30 மணி தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் மாநாடு மெய்யனூர் ▶️காலை 11 மணி அரசு அனைத்து துறை எஸ்சி எஸ்டி பணியாளர் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம் கோட்டை மைதானம்▶️ காலை 11 மணி விவேகானந்தர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நலன் காக்கும் மருத்துவ முகாம் இடங்கணசாலை▶️ மின்னாம்பள்ளி மகேந்திரா பொறியியல் கல்லூரியில் தனியார் துறையில் வேலைவாய்ப்பு முகாம், ஆகியவை நடைபெறுகிறது.
Sorry, no posts matched your criteria.