India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தருமபுரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விடிய விடிய கனமழை வெளுத்து வாங்கியது. இன்று (ஆக.09) தருமபுரி மாவட்டத்தில் கனமழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. எனவே முன்னெச்சரிக்கையா இருங்க மக்களே!. மற்றவர்களுக்கும் ஷேர் செய்து மழை நிலவரம் பற்றி தெரியப்படுத்துங்கள்.
செங்கல்பட்டு மாவட்டத்தில்,அரசு துவக்கபள்ளிகளில், 1ம்வகுப்பில் கடந்தாண்டு 7,227மாணவர்கள் சேர்ந்தநிலையில், இந்தாண்டு 6,073 மாணவர்கள் மட்டுமே சேர்ந்துள்ளனர். துவக்கபள்ளிகள்481, அரசு உதவி பெறும் துவக்கப்பள்ளிகள் 83, நடுநிலைபள்ளிகள் 189, அரசு உதவி பெறும்நடுநிலை பள்ளிகள் 27 என் மொத்தம் 782 பள்ளிகள் உள்ளன. மாணவர் சேர்க்கையை அதிகரிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் போலீசாரால் கைப்பற்றப்பட்ட 43 வாகனங்கள் ஏலம் விட முடிவு செய்யப்பட்டுள்ளது. 40 இருசக்கர வாகனங்கள், 1 நான்கு சக்கர வாகனம் மற்றும் 2 ஆறு சக்கர வாகனங்கள் என மொத்தம் 43 வாகனங்கள் வரும் ஆகஸ்ட் 14ம் தேதி காலை 10 மணிக்கு பெரம்பலூர் ஆயுதப்படை மைதானத்தில் நிறுத்தி பொது ஏலம் விடப்படவுள்ளது. இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!
இராமநாதபுரம் மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் சார்பில் விழிப்புணர்வு செய்தி வெளியிட்டுள்ளது. பள்ளி, கல்லூரி மாணவர்களின் பெயரால் ஸ்காலர்ஷிப் என்று சொல்லி, QR code, வங்கி கணக்கு, OTP கேட்டு பணம் மோசடி செய்பவர்கள் மீது பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர். ஏதேனும் சந்தேகம் இருந்தால் 1930 என்ற எண்ணிற்கு அழைக்கலாம்.
பொது வினியோக திட்டத்தில் குறைபாடுகளை களைவதற்கு புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு தாலுகா அலுவலகங்களிலும் இன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை பொது வினியோகத்திட்ட குறை தீர்க்கும் முகாம் நடைபெறுகிறது. இதில் பொதுமக்கள் தங்களின் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், செல்போன் எண் மாற்றம் போன்றவைகளை மாற்றிக்கொள்ளவும். இதனை அனைவருக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்கள்
தஞ்சை மாவட்டத்திற்கான பொது விநியோக குறைதீர்க்கும் நாள் கூட்டம் தஞ்சாவூர், திருவையாறு, பூதலூர், கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூர், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, மற்றும் திருவோணம் பகுதிகளில் அந்தந்த வட்ட வழங்கல் அலுவலகத்தில் இன்று (ஆகஸ்ட் 9) நடைபெறுகிறது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளனர்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆக.15 அன்று விருதுநகர் மாவட்டத்தில் 450 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம், தணிக்கை அறிக்கை, 100 நாள் வேலை திட்டம், ஜல்ஜீவன் திட்டம் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. எனவே இதில் பொதுமக்கள் கலந்து கொள்ள வேண்டும் என ஆட்சியர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் (ஆகஸ்ட் 08) இரவு 11 மணி முதல் சனிக்கிழமை மாலை 6 மணி வரை நிலக்கோட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல், வேடசந்தூர் பகுதிகளில் காவல் துறை தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளது. பொதுமக்கள் அவசர தேவைகளுக்காக காவல் துறை வெளியிட்ட தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் உதவி தொடர்பு எண்கள் உதகை நகரம், ஊரக உட்கோட்டம், குன்னூர் உட்கோட்டம், கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டம் காவல் நிலையங்களுக்கானவை நீலகிரி மாவட்ட காவல்துறையால் வெளியிடப்பட்டுள்ளன. பொதுமக்கள் அவசரசெய்திகள் அல்லது உதவிக்காக இந்த எண்களை பயன்படுத்தலாம்.
கோவை மாவட்ட ரயில்வே நிர்வாகத்தினர் இன்று கூறியதாவது: வரும் 10ம் தேதி காலை 9.40 மணிக்கு, போத்தனூர் பகுதியில் இருந்து மேட்டுப்பாளையம் வரை செல்லும் மெமு ரயில் பராமரிப்பு பணிகள் காரணமாக ரத்து செய்யபட்டுள்ளது. அதே போல அன்று மதியம் 1.05 க்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து போத்தனூர் வரை வரும் மெமு ரயில் சேவையும் நிறுத்தப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.