Tamilnadu

News August 19, 2025

சென்னையில் உயிரை பறித்த இன்ஸ்டா ரீல்ஸ்

image

சென்னை பல்லாவரத்தில் KTM பைக்கை அதிவேகமாக ஓட்டி சென்றபோது, எதிரே வந்த ஸ்கூட்டியில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் சுஹேல் அகமது (15) என்ற இளைஞர் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். KTM பைக்கை இயக்கிய அப்துல் அகமது (17), ஸ்கூட்டியில் வந்த 3 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ரீல்ஸ் எடுக்க பைக்கை அதிவேகமாக இயக்கியதாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.

News August 19, 2025

295 ஓட்டுநர்களின் லைசென்ஸ் ரத்து!

image

சேலம் சரகத்தில் வாகன விபத்துக்களைக் குறைப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், சேலம், தருமபுரியில் கடந்த 7 மாதத்தில் சாலை விபத்துக்களில் உயிரிழப்பை ஏற்படுத்திய 295 பேரின் லைசென்ஸ் ரத்துச் செய்யப்பட்டுள்ளது. பர்மிட், தகுதிச்சான்று இல்லாமல் இயக்கப்படும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

News August 19, 2025

செங்கல்பட்டு: LIC-யில் ரூ.1 லட்சம் சம்பளத்தில் வேலை

image

செங்கல்பட்டு மக்களே, இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் (LIC) காலியாக உள்ள உதவி நிர்வாக அலுவலர்கள், உதவி பொறியாளர் உள்ளிட்ட 841 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு பட்டப்படிப்பு முடித்தவர்கள் முதல் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.88,635 முதல் ரூ.1,69,025 வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் விவரங்கள் (ம) விண்ணப்பிக்க <>இங்கு க்ளிக் <<>>பண்ணுங்க. கடைசி தேதி 08.09.2025 ஆகும். SHARE IT

News August 19, 2025

சேலம்: இன்றைய முக்கிய நிகழ்வுகள்

image

சேலம் ஆக.19 இன்றைய முக்கிய நிகழ்வுகள்:
▶️ காலை 10 மணி ஓய்வூதிய மசோதா வாபஸ் பெற கோரி அஞ்சல் ஊழியர்கள் மனித சங்கிலி பழைய பேருந்து நிலையம்.
▶️காலை 11 மணி தனியார் நிதி நிறுவனத்தை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம் கோட்டைமைதானம்.
▶️ காலை 11 மணி சுமைப்பணி தொழிலாளர் பேரவை கூட்டம் குஜராத்தி மண்டபம் அஞ்சு ரோடு.
▶️போக்குவரத்து தொழிலாளர்கள் மையனூரில் இரண்டாம் நாளாக காத்திருப்பு போராட்டம்.

News August 19, 2025

பௌத்தர்கள் புனித யாத்திரைக்கு மானியம் பெற விண்ணப்பம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில், நாக்பூரில் நடைபெற உள்ள தம்ம சக்கர பரிவர்த்தனை திருவிழாவிற்கு சென்று திரும்பும் 150 பௌத்தர்களுக்கு, தமிழக அரசு தலா ரூ.5000 வரை மானியம் வழங்குகிறது. மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் கட்டணம் இன்றி விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம். வருகின்ற நவ.30 விண்ணப்பிக்க கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 19, 2025

எச்சரிக்கை ! கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை அறிவிப்பு!

image

அறிமுகம் இல்லாதவர்களிடமிருந்து வரும் வீடியோ அழைப்புகளை ஏற்கும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருங்கள். உங்கள் வீடியோ பேசல்கள் பதிவு செய்யப்பட்டு, பின்னர் உங்களை மிரட்ட & சமூக வலைத்தளங்களில் தவறான முறையில் பயன்படுத்தப்பட வாய்ப்பு உள்ளது. இவ்வாறான ஏமாற்று முறைகளில் சிக்காமல் முன் எச்சரிக்கையுடன் இருங்கள். இது போன்று நடந்தால் <>இந்த இணையதளத்திலோ<<>> (அ) 1930 என்ற எண்ணிலோ புகார் அளிக்கலாம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News August 19, 2025

விழுப்புரம் மாவட்ட சுகாதாரத்துறை மாதாந்திர ஆய்வுக் கூட்டம்

image

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று(ஆக.18) மாவட்ட சுகாதாரத்துறை மாதாந்திர ஆய்வு கூட்டம், மாவட்ட ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரகுமான் தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் அரசு மருத்துவமனை கட்டிடங்களின் தரம், உபகரணங்கள், தளவாடப் பொருட்கள் மற்றும் தேவையான மருந்து இருப்புகள் பற்றி ஆலோசிக்கப்பட்டது. உடன் சுகாதார இயக்குனர் ரமேஷ்பாபு உட்பட பலர் பங்கேற்றனர்.

News August 19, 2025

நெல்லை பள்ளி மாணவர்களுக்கு ரூ.6000 உதவித்தொகை

image

தபால் தலை சேகரிப்பு குறித்து மாணவர்களிடையே ஊக்குவிக்கும் விதமாக தீன் தயாள் ஸ்பார்ஸ் யோஜனா என்ற உதவித்தொகை திட்டத்தை அஞ்சல் துறை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் வெற்றி பெறும் மாணவர்களுக்கு வருடத்திற்கு 6000 உதவித்தொகை வழங்கப்படும். விருப்பமுள்ள மாணவர்கள் செப்.1ம் தேதிக்குள் விண்ணப்பத்தை அனுப்பி வைக்க வேண்டும் என நெல்லை அஞ்சல் முதுநிலை கோட்ட கண்காணிப்பாளர் சுசிலா தெரிவித்துள்ளார். *ஷேர் பண்ணுங்க

News August 19, 2025

கள்ளக்குறிச்சி: இலவச வீடியோகிராபி பயிற்சி

image

தாட்கோ சார்பாக ஆதிதிராவிடர், பழங்குடியின இளைஞர்களுக்கு கேமரா (ம) டிசைனிங் பயிற்சி வழங்கப்பட உள்ளது. 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18-30 வயதிற்குப்பட்டஇளைஞர்கள் விண்ணப்பிக்கலாம். ஆண்டு வருமானம் 3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். பயிற்சி காலம் 3 மாதங்கள். உணவு, தங்கும் விடுதி இலவசம். விருப்பமுள்ளவர்கள் இந்த <>லிங்கில்<<>> விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். ஷேர் பண்ணுங்க. யூஸ் ஆகும்.

News August 19, 2025

நெல்லையில் இன்றைய நிகழ்ச்சிகள்

image

▶️நெல்லை மாநகராட்சியில் வாராந்திர மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் இன்று காலை 11 மணியளவில் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெறுகிறது.
▶️நெல்லை சந்திப்பு ராஜ் மஹாலில் வைத்து காலை 10 மணிக்கு புகைப்பட கண்காட்சியினை மேயர் ராமகிருஷ்ணன் துவக்கி வைக்கிறார்.
▶️நெல்லை சந்திப்பு ஆர் கே வி மஹாலில் வைத்து உங்களுடன் ஸ்டாலின் முகாமினை எம் எல் ஏ அப்துல் வஹாப் 10 மணிக்கு துவக்கி வைக்கிறார்.

error: Content is protected !!