India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ்நாடு பத்திரிக்கையாளர் ஊடகச் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் செய்தி துறை அமைச்சர் சாமிநாதனை திருச்சி டிஸ்ட்ரிக்ட்பிரஸ் & மீடியா கிளப், புதுக்கோட்டை மாவட்ட பத்திரிக்கையாளர் சங்கம், கோயம்புத்தூர் பிரஸ் கிளப், ஈரோடு பத்திரிக்கையாளர் சங்கம், தமிழக நிருபர்கள் சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் இன்று மாலை நேரில் சந்தித்து கோரிக்கை தொடர்பான மனுவை கொடுத்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்படி, இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விவரங்களை தற்போது கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. மேலும் அவசர காலங்களில் பொதுமக்கள் 100 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
கிருஷ்ணகிரி மாவட்ட பகுதி மக்களுக்கு காவல்துறை முக்கிய அறிவிப்பு, குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் எந்தவொரு குற்றச் செயல் களுக்கும் புகார் செய்ய, 1098 என்ற குழந்தைகள் உதவி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை இன்று(ஆக.5) அறிவித்துள்ளது. குழந்தைகளின் பாதுகாப்பிற்காக பொதுமக்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும் என்றும் காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட் 05) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம் :9884098100
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு வைரம் பதித்த வேல் வழங்கப்பட்டுள்ளது. இது பற்றி கோவில் நிர்வாகத்தின் அறிக்கையில், இத்திருக்கோயிலுக்கு சுமார் 770 கிராம் எடை கொண்ட தங்க வைர ஜாதி சிகப்பு கல், ஜாதி பச்சை கல் பதித்த தங்கவேல் ( CULTURAL SAMSKRITHI FOUNDATION ) என்ற உபயதாரர் மூலம் பெறப்பட்டது என்ற விவரம் தெரிவித்துக் கொள்ளப்பட்டுள்ளது.
நெல்லை, சேரன்மகாதேவியை சேர்ந்த 16 வயது மாணவன் தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு பயின்று வருகிறார். மாணவி ஒருவரை இன்ஸ்டாகிராமில் பழகி காதலித்ததாக கூறப்படுகிறது. வேறு சமூகத்தை சார்ந்தவர்கள் என்பதால் மாணவி வீட்டில் கண்டித்துள்ளனர். இந்நிலையில் மாணவியின் உறவினர்களான 5 சிறார்கள் இன்று மாணவனை சரமாரியாக வெட்டியுள்ளனர். இதுக்குறித்து சேரன்மகாதேவி போலீசார் விசாரணை.
நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவல் அலுவலர்கள் இரவு ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அந்த வகையில் இன்று ( ஆகஸ்ட்.5 ) மாவட்ட ரோந்து அதிகாரி- விஜயகுமார் ( 9498104763), நாமக்கல் – லட்சுமணதாஸ் ( 9443286911), ராசிபுரம் – சங்கரபாண்டியன் ( 9655230300), திருச்செங்கோடு – முருகேசன் ( 9498133890), வேலூர் – கெங்காதரன் ( 6380673283) ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என ஆட்சியர் சுப்புலெட்சுமி கேட்டுக்கொண்டார். பசுமையான சுற்றுச்சூழலை உருவாக்கவும், பிளாஸ்டிக் இல்லாத தமிழகத்தை முன்னெடுக்கவும் மக்கள் ஆதரவு தேவை என்றும், தடுப்புப்பணிகள் மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் தொடரும் என்றும் அவர் உறுதியளித்தார்.
இன்று ஆகஸ்ட் 5 ,11ஆவது தேசிய கைத்தறி தின விழா ஆகஸ்ட் 7 அன்று குருவராஜன் பேட்டை கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க வளாகத்தில் கொண்டாடப்படும் என ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் ஜெ யு சந்திரகலா அறிவித்துள்ளார். அன்றைய தினம் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து நெசவாளர் சங்கத்தினரும் அந்நிகழ்வில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
கோவை மாவட்டத்தில் இன்று (05.08.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.