India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று (ஆக.6) ஓசூர் மாநகராட்சியில் பாலாஜி நகர் மாநகராட்சி துவக்கப்பள்ளி, கிருஷ்ணகிரி நகராட்சியில் பாத்திமா சமுதாய கூடம், மத்தூரில் சிவம்பட்டி சமுதாய கூடம், ஊத்தங்கரையில் கல்லாவி சாலை ஸ்ரீவெங்கடேஸ்வரா மஹால், கெலம்பங்கலம் வட்டாரத்தில் தொட்டமேட்ரை VPRC கட்டடம், தளி வட்டாரத்தில் பெலகொண்டப்பள்ளி அரசினர் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல் துறை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் புதுக்கோட்டை மாவட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.
சென்னையில் தூய்மை பணியாளர்களின் தொடர் போராட்டம் காரணமாக ராயபுரம், திரு.வி.க. நகர் மண்டலங்களில் 300 மெட்ரிக் டன் குப்பைகள் தேங்கி உள்ளது. எழும்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 5 நாள்கள் குப்பைகள் அகற்றப்படாமல் தொட்டிகள் நிரம்பி வழிகின்றன. இதனால் நோய் பரவ வாய்ப்பு ஏற்பட்டு, மக்கள் மத்தியில் மிகுந்த அச்சம் நிலவுகிறது.
காவல்:
திருவண்ணாமலை மாவட்ட காவல்துறையின் சார்பாக இன்று (ஆக. 05) இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ள காவல்துறை அதிகாரிகள் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது இதன் அடிப்படையில் தங்களுடைய பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக செயல்படக்கூடிய நபர்கள் இருந்தாலோ அல்லது பாதுகாப்பின்மை பிரச்சனையை ஏற்பட்டாலோ அவர்களுடைய தொலைபேசி எண்கள் (அ) 100 என்ற எண்ணை அழைத்து புகார்களை பதிவு செய்யலாம்.
தருமபுரி மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (ஆகஸ்ட்.05) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் விவரம் வெளியிட்டுள்ளது. தலைமை அதிகாரியாக ஆர். ராமமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார். தருமபுரி புஷ்பராணி, அரூர் மணிகண்டன், பென்னாகரம் செல்வமணி, மற்றும் பாலக்கோடு பாலசுந்தரம் ஆகியோர் பொறுப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களை பொதுமக்கள் அவசர தேவை எனில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டம் அண்ணா சாலையில் உள்ள ஊரீசு கல்லூரியின் டிபோர் வளாகத்தில் நாளை காலை 9:30 மணியளவில் மாபெரும் தமிழ் கனவு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் சுப்புலட்சுமி தலைமையில் நடைபெற உள்ளது. இதில் தமிழ்நாடு கண்ட புதுமைப் பெண்கள் என்ற தலைப்பில் வழக்கறிஞர் அருள்மொழி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேச உள்ளார் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்ட காவல்துறையால் இன்று(ஆக.5) இரவு ரோந்து பணியில் ஈடுபட அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, வேலூர் மற்றும் கடலூர் சாலைகள் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அவசர தேவைகளுக்கு கட்டுப்பாட்டு அறை அல்லது மேலே குறிப்பிடப்பட்டுள்ள காவல் அதிகாரிகளுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று 05/08/2025., போச்சம்பள்ளியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ச. தினேஷ் குமார், வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண்மை வணிகத் துறையின் e-NAM (மின்னனு தேசிய வேளாண் சந்தை) மூலம் நடைபெறும் கொப்பரை தேங்காய் ஏலத்தை நேரில் பார்வையிட்டு, விவசாயிகளுடன் நேரில் கலந்துரையாடினார். விவசாயிகளின் தேவைகள், சந்தை நிலைமைகள் குறித்து கேட்டறிந்து, சரியான விலை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.
ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை, சார்பில் இன்று (ஆகஸ்ட் 5) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை கமுதி, பரமக்குடி, ராமேஸ்வரம், முதுகுளத்தூர் உட்கோட்டத்தில் ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் விவரங்களை வெளியிட்டு உள்ளனர். இரவு நேரங்களில் அவசர தேவைகளுக்கு, பொதுமக்கள் வெளியிடப்பட்ட புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்கள் மூலம் காவல்துறையை தொடர்புகொண்டு உதவி பெறலாம்.
திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆணைக்கிணங்க இன்று இரவு ரோந்து பணியில் உள்ள காவலர்களின் விவரங்கள் மற்றும் தொலைபேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இந்த ரோந்து பணியானது நடைபெறுகிறது. இரவு நேரங்களில் ஏதேனும் பிரச்சனை இருந்தால் உடனடியாக கொடுக்கப்பட்ட எண்ணிற்கு அழைக்கலாம்.
Sorry, no posts matched your criteria.